ஆணவ படுகொலை: 3ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்ற யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம்!

கோவை: கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கு குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் தலைவர் யுவராஜை கோவை சிறைக்கு மாற்றி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் ஜாதி தலைவர் யுவராஜ் உள்பட 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. யுவராஜ் சாகும் வரையில் சிறையில் இருக்கும்படி 3 ஆயுள் தண்டனையை நீதிபதி … Read more

4மாநிலங்களில் பாஜக முன்னிலை: காலை 11 மணி அளவிலான முன்னணி நிலவரம்…

டெல்லி: நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாபில் தேசிய கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு ஆம்ஆத்மி ஆட்சியை கைப்பற்றுகிறது. உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று காலை  வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11மணி நிலவரப்படி,  403 … Read more

5மாநில சட்டமன்ற தேர்தல்: காலை 10மணி – வாக்கு எண்ணிக்கை நிலவரம்…

டெல்லி: நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று காலை  வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. உ.பி.யில் பாஜக முன்னணியில் உள்ள நிலையில், பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் வகையில் முன்னணியில் தொடர்கிறது. பஞ்பாபில் காங்கிரஸ் கட்சி மீண்டும் … Read more

இடித்து அகற்றப்பட்டது புதுச்சேரியின் அடையாளம் – பொதுமக்கள் அதிர்ச்சி – வைரல் வீடியோ

புதுச்சேரி: புதுச்சேரியின் அடையாளமாக திகழ்ந்து வந்த மதகடிப்பட்டு முத்தமிழ் நுழைவு வாயில்,  சாலை விரிவாக்க பணிக்காக இடித்து நொறுக்கப்பட்டது. இது அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. புதுச்சேரியில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருவதைத்தொடர்ந்து சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளும் தொடங்கி உள்ளன. இதற்காக  பொதுப்பணித்துறை சார்பில் தற்போது அண்ணாநகர் பகுதியில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் செயற்கை கான்கிரீட் பாலம் … Read more

புதுச்சேரி அருகே கார் விபத்தில் திமுக எம் பி என் ஆர் இளங்கோ மகன் மரணம்

புதுச்சேரி புதுச்சேரி அருகே நடந்த கார் விபத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மகன் ராகேஷ் உயிர் இழந்தார். திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளவர் என் ஆர் இளங்கோ. இவரது மகன் ராகேஷ் ஆவார் புதுச்சேரி அருகே  விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கோட்ட குப்பம் உள்ளது. இங்கு கிழக்கு கடற்கரைச் சாலையில் ராகேஷ் காரில் சென்ற போது கார் விபத்தில் சிக்கியது இந்த விபத்தில் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ராகேஷ் உடன் … Read more

பன்றியின் இதயம் பொருத்தப்பட்டவர் 2 மாதத்தில் மரணம் குறித்து மருத்துவர்கள் விளக்கம்

மேரிலாந்து, அமெரிக்கா உலகில் முதல் முறையாகப் பன்றியின் இதயம் பொருத்தப்பட்டவர் 2 மாதத்தில் மரணம் அடைந்துள்ளார். அமெரிக்க நாட்டில் உள்ள மேரிலாந்து நகரைச் சேர்ந்த டேவிட் பென்னெட் என்பவர் இதயம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தீவிர சிகிச்சைக்கு பிறகும் அவரது இதயம் தொடர்ந்து செயலிழந்து வந்தது.  எனவே அவருக்கு உடனடியாக மாற்று இதயம் பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.    ஆனால் அவருக்கு மாற்று இதயம் கிடைக்கவில்லை. உடனடியாக இதயம் பொருத்த வேண்டிய நிலையில் இருந்த பென்னட்டுக்கு வேறு … Read more

இதய மாற்று அறுவை சிகிச்சை : பன்றி இதயம் பொறுத்தப்பட்ட நபர் சிகிச்சைக்குப் பின் மரணம்

அமெரிக்காவின் மேரிலேண்ட் மெடிக்கல் சென்டர் பல்கலைக்கழக மருத்துவர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 7 ம் தேதி இறுதி கட்ட இதய நோயால் பாதிக்கப்பட்ட டேவிட் பென்னட் என்ற நபருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி சாதனை செய்தனர். இதய மாற்று அறுவை சிகிச்சையில் உலகிலேயே முதன்முதலாக இவருக்கு தான் பன்றியின் இதயம் பொறுத்தப்பட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், இரண்டு மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் மார்ச் 8 ம் தேதி டேவிட் பென்னட் உயிரிழந்தார். … Read more

ஓய்வை அறிவித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

திருவனந்தபுரம்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் டொமஸ்டிக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2006 முதல் 2011 வரை விளையாடியவர் ஸ்ரீசாந்த். இவர் ஸ்பாட் ஃபிக்ஸிங் புகாரில் சிக்கி 7 ஆண்டுகள் தடையை எதிர்கொண்டவர். தடை முடிந்த கையோடு டொமஸ்டிக் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார். கேரள அணிக்காக கடந்த பிப்ரவரியில் மெகாலயா அணிக்கு எதிராக ரஞ்சிக் கோப்பையில் விளையாடி இருந்தார். அந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்த நிலையில் டொமஸ்டிக் … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நன்றி

சென்னை: பேரறிவாளன் ஜாமின் பெற துணைநின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்து, தனக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் … Read more

நீட்தேர்வு எழுத வயது உச்ச வரம்பு நீக்கம் – தேசிய மருத்துவ ஆணையம்

புதுடெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் நிர்ணயம் செய்யப்பட வில்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து உள்ளது. மேலும் எதிர்வரும் நீட் தேர்வுக்கான அறிவிப்பானையை அதற்கேற்ற வகையில் வெளியிடவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தேசிய மருத்துவ சட்டத்தில் வயது வரம்பு எதுவும் இல்லை மருத்துவ ஆணையம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.