கர்நாடக ஹிஜாப் போராட்டத்துக்கு இஸ்லாமிய மாணவர் அமைப்பு காரணம்! நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிஎப்ஐ அமைப்பினர் தலையீடு உள்ளதாகவும், அவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவே,  முஸ்லிம் மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் கல்லூரியில் போராட தொடங்கினர் என்று உடுப்பி கல்லூரி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணாக்கர்களிடையே ஏற்றத்தாழ்வு, சாதி மத வேறுபாடுகளை களையும் வகையில், சீருடை திட்டம் அமல் படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியவும் … Read more

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதமடித்த இந்திய வீரர்கள்…

ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை மொத்தம் எட்டு முறை இரட்டை சதம் அடிக்கப்பட்டிருக்கிறது. ஆறு வீரர்கள் இந்த சாதனையை செய்திருக்கின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இரட்டை சதமடித்துள்ளது இந்தியாவின் ரோஹித் சர்மா மட்டுமே இவர் மூன்று முறை இரட்டை சதமடித்துள்ளார். மேலும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இவர் அடித்த 264 ரன்கள் அதிகபட்ச ரன்னாக உள்ளது. இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 2010 ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் … Read more

மேலும் 1 வாரம் மக்கள் தமிழக அரசின் அலங்கார ஊர்திகளை பார்க்கலாம் : முதல்வர் ஸ்டாலின்

சென்னை தமிழக அரசின் 3 அலங்கார ஊர்திகளை மேலும் 1 வாரம் பொதுமக்கள் பார்க்கலாம் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் கடந்த 26ம் ேததி நடந்த குடியரசு நாள் விழாவில் செய்தித் துறை சார்பில் விடுதலைப் போரில்  தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் தமிழக சுதந்திரப் போராட்ட  வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் மூன்று அலங்கார ஊர்திகளின்  அணிவகுப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள மக்கள்  கண்டுகளிக்கின்ற வகையில் முதல்வர் … Read more

மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் கைது

மும்பை தாதா இப்ராகிம் தொடர்புடைய பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர மந்திரி நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார்.  இவர் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாகப் புகார்கள் எழுந்தன.   இவரிடம் இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்யச் சம்மன் அனுப்பினர். இதையொட்டி இன்று காலை 6 … Read more

விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்ற விவகாரம் : ராணுவ பாதுகாப்புடன் அமைச்சர் அஜய் மிஸ்ரா வாக்களிப்பு

லக்கிம்பூர் கேரி லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற விவகாரத்தில் தொடர்புடைஅய் அமைச்சர் அஜய் மிஸ்ரா ராணுவ பாதுகாப்புடன் வந்து வாக்களித்தார். ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்துள்ளது.  இன்று வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் லக்கிம்பூர் கேரி மாவட்டமும் ஒன்றாகும்.  இங்கு நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது 4 விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். இதில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் மத்திய இணை அமைச்சர் … Read more

உயர்நீதிமன்ற நீதிபதி குறித்த சர்ச்சைக் கருத்து : கன்னட நடிகர் கைது 

பெங்களூரு டிவிட்டரில் உயர்நீதிமன்ற நீதிபதி குறித்த ஒரு சர்ச்சைப் பதிவை வெளியிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீட்சித் குறித்து கன்னட நடிகர் சேத்தன் குமார் டிவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.  கடந்த 14 ஆம் தேதி வெளியான இந்த பதிவு கடும் சர்ச்சையை உண்டாக்கியது.  இதையொட்டி பெங்களூரு காவல்துறையினர் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையொட்டி நடிகர் சேத்தன் குமார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடந்து … Read more

தமிழகத்தில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  23/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,47,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 62,547 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,40,86,016 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் ஒருவர் வெளி நாட்டில் இருந்து வந்துள்ளார்.  இதுவரை 34,47,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,993 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 2,153 பேர் குணம் அடைந்துள்ளனர். … Read more

கோவையில் அனைத்து இடங்களிலும் ம நீ ம டெபாசிட் இழப்பு

கோவை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோவை மாநகராட்சி தேர்தலில் தாம் போட்டியிட்ட அனைத்து வார்டுகளிலும் டெபாசிட் இழந்துள்ளனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பிடித்தார்.  இங்கு திமுக தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் மக்கள் நீதி மய்யத்துக்குக் கிடைத்த வாக்குகளே என அப்போது கூறப்பட்டது.   திமுகவுக்குக் கிடைக்க வேண்டிய நடுநிலை வாக்குகளை ம நீ ம பெற்றதாகக் கருத்து இருந்தது. தற்போது … Read more

பிப்ரவரி 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக நடைபெறுவதால்  தொடர்ந்து 18 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை நமது மாநிலம்  அடைந்துள்ளது.  இதை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளைப் போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். ஆகவே, பெற்றோர்கள் மத்திய மாநில அரசுகள்  ஒவ்வொரு வருடமும் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைத்து வருகிறது. தமிழக மருத்துவம் … Read more

ராஜிவ் காந்தி கொலை வழக்கு : சிறையில் உள்ள முருகனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

வேலூர் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள முருகனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டோர் வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் முருகனும் ஒருவர் ஆவார்.  இவர் கடந்த சில வாரங்களாக பல்வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறாப்ப்டுகிறது. அவருக்குச் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  அவர் தமக்கு வலி குறையவில்லை எனத் தெரிவித்து தமக்கு … Read more