இந்தியாவின் செல்வாக்கை உயர்த்திய நேருமீது அவதூறுகளை வீசும் மோடி அரசு…! ஆடியோ

இந்தியாவின் செல்வாக்கை உயர்த்திய நேருமீது அவதூறுகளை வீசும், மோடி தலைமையிலான ஆர்எஸ்எஸ் சித்தனையுடைய பாஜக அரசு அவதூறு வீசுவதை கண்டிக்கும் வகையில் ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது. அத்துடன் நேருவின் ஆட்சி காலத்தில் நாட்டின் வளர்ச்சி எப்படி இருந்தது என்பதையும் விளக்கி உள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/02/Pari-Audio-2022-02-18-at-1.11.52-PM.ogg

சென்னையில் பதற்றமான 1,198 வாக்கு சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு…

சென்னை மாநகராட்சி தேர்தலையொட்டி அடையாளம் காணப்பட்டுள்ள  பதற்றமான 1,198 வாக்கு சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.  சென்னையில் மட்டும், கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் மாநகர போலீசார், ஆயுதப்படை காவலர்கள், ஊர்காவல்படையினர் என மாநகரம் முழுவதும் கூடுதலாக மொத்தம் 18 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்களுக்கும் … Read more

மதிய உணவு சரியில்லை: அரியலூரில் அரசு பள்ளியை கண்டித்து மாணாக்கர்கள் சாலைமறியல்…

அரியலூர்: மதிய உணவு சரியில்லை என குற்றம் சாட்டி, அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிக்கு எதிராக மாணாக்கர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் , சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணாக்கர்களுக்கு சரியான முறையில் மத்திய … Read more

நாளை வாக்குப்பதிவு: வெளிநபர்கள் தங்குவதை தடுக்க விடுதிகள், மண்டபங்களில் காவல்துறை சோதனை…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தேர்தல் முறைகேடுகள் ஏற்படாதவாறு, வெளியூர் நபர்கள் தங்குவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் விடுதிகள், மண்டபங்கள் உள்பட பல இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல்  ஒத்தி வைக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் குட்டு காரணமாக, தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆறு ஆண்டுகள் கழித்து  … Read more

வார ராசிபலன்: 18.2.2022  முதல் 24.2.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் நீங்க எடுத்துக்கிட்ட வெகுகால முயற்சிகள் அவ்வளவும் அதிரடியாப் பணத்தைப் பல மடங்கு கொண்டு வரப்போகிறதுங்க. பணம் பல வழிகளில் வந்தாலும் நல்வழியில் மட்டும் செலவு செய்து பேங்க்கில் இருப்புக்களை அதிகரிச்சுக்குவீங்க. ஏழ்மையில் உள்ளோர், ஆதரவற்றோர் போன்றோர்களின் காவலன் என்று பெயர் எடுப்பதில் பெருமிதம் கொள்வீங்க. ஒரு வேளை நீங்க பிசினஸ் செய்பவர் என்றால், உணவுப் பொருட்கள் உணவகங்கள், எலக்ட்ரானிக்ஸ் துறை மூலம் முழுமையான வருமானத்தை பெற்று மகிழ்வீங்க. தந்தையார் நலனில் கூடுதல் கவனம் தேவை, கண் … Read more

பொதுமக்கள் மகிழ்ச்சி : சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க புதிய எண் 1930

சென்னை பொதுமக்கள் சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க காவல்துறையினர் 1930 என்னும் புதிய எண்ணை அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றது.  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல மாற்றங்களைச் செய்து வருகிறது.  தற்போது தமிழகம் முழுவதும் சைபர்காவல் நிலையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் வங்கி மோசடி, இணையதள குற்றங்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏற்கனவே சைபர் … Read more

ஜனநாயக அமைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நேருவை மேற்கோள்காட்டி சிங்கப்பூர் பிரதமர் பேச்சு

ஜனநாயக அமைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை மேற்கோள்காட்டி பேசினார். இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குரியன் மற்றும் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு ஆகியோர் தங்கள் நாடுகளை சுதந்திரத்திற்கு இட்டுச் சென்ற “மகத்தான மற்றும் ஆற்றல் மிகுந்த தலைவர்கள்” என்றும் பின்னர் பாராளுமன்ற ஜனநாயகத்தை நடத்துவதற்கான முன்மாதிரியான விதிமுறைகளையும் நடைமுறைகளையும் நிறுவியதற்காகவும் லீ சியென் … Read more

நாளை வெளியாகிறது குரூப்-2 தேர்வு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், மொத்தம் 5,831 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வு குறித்து நாளை பிற்பகல் 12:30 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகிறது. இந்த அறிவிப்பு வெளியான 75 நாளில் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதி மீறல்: பாஜக முன்னாள் எம்.பி. மீது வழக்கு பதிவு

மும்பை: கொரோனா விதிமுறைகளை மீறியதாக பாஜக முன்னாள் எம்பி கிரித் சோமையாவுக்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சோமையாவுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பரில் புறநகர் சான்டாக்ரூஸ் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 188 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பா.ஜ.க தலைவர் சோமையா தனது எழுத்துப்பூர்வ அறிக்கையுடன் 15 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்றும், இல்லையெனில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை … Read more

கீழடியில் தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு

மதுரை: கீழடியில் எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் 8 ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார். முன்னதாக, கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு நடக்க உள்ள இடத்துக்கு பாதை வழங்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் விவசாயம் … Read more