தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவப்படை தேவையில்லை: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் துணை இராணுவத்தை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இதுகுறித்து கோரிக்கை விடுத்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் முன் போராட்டம் நடத்தியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு என்றும் துணை ராணுவ படையினர் தேவையில்லை என்றும் … Read more

ஹிஜாப் அணிந்து பாடம் நடத்த அனுமதி மறுப்பு- பணியை ராஜினாமா செய்த விரிவுரையாளர்

தும்கூர்: ஹிஜாப் அணிந்து பாடம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், விரிவுரையாளர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்த சம்பவம் கர்நாடகாவின் தும்கூரில் நடந்துள்ளது. ஜெயின் ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரியில் கற்பித்த கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர், வகுப்புகளை நடத்தும் போது ஹிஜாபை அகற்றுமாறு கல்லூரி கூறியதை அடுத்து, தனது வேலையை ராஜினாமா செய்தார். சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், தன்னை சாந்தினி என்று அடையாளம் காட்டிய விரிவுரையாளர், “நான் ஜெயின் பியூ கல்லூரியில் மூன்று … Read more

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி

கொல்கத்தா: மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2வது டி20 போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு … Read more

தமிழகத்தில் இன்று 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 17/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,42,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 81,145 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,37,28,093 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,42,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,970 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 4,229 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,84,278 பேர் குணம் அடைந்து வீடு … Read more

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஒரு லட்சம் போலிசார் பாதுகாப்பு : தேர்தல் ஆணையர் அறிவிப்பு

சென்னை அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுவதாக மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.  இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   இது குறித்து இன்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். பழனி குமார் தனது பதிலில், “நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 30.735 வக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  மக்கள் அச்சமின்றி வாக்களிக்க … Read more

பாஜக அரசில் ஊழல் செய்தவர்கள் ஆனந்தமாக உள்ளனர் : பாஜக எம்பி வருண் காந்தி தாக்கு

டில்லி பாஜக அரசை அக்கட்சியின் மக்களவை உறுப்பினரான வருண் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும் மறைந்த சஞ்சய் காந்தியின் மகனுமான வருண் காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர் ஆவார்.  இவர் கடந்த ஓராண்டாக பாஜகவைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.  குறிப்பாக வேளாண் சட்டம் அமலாவதில் இவர் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். பிறகு இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்த போது இந்த முடிவை முன்பே … Read more

ஆத்திகர்களை விட நாத்திகர்களிடமே அதிக மூடநம்பிக்கை! இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

சென்னை: ஆத்திகர்களை விட நாத்திகர்களிடமே அதிக மூடநம்பிக்கை உள்ளது என  இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முகநூலில் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் மதம் மாற்றம் பிரச்சனை பூதாகாரமாக எழுந்துள்ள நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது ஃபேஸ்புக் பதிவில், அது தொடர்பாக சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதுபோல பெரியாரை மதிப்பதாக கூறியிருப்பதுடன், நாத்திகர்களே அதிக மூட நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றும் விமர்சித்துள்ளார். அதன்படி, “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் … Read more

இந்தியாவின் செல்வாக்கை உயர்த்திய நேருமீது அவதூறுகளை வீசும் மோடி அரசு…! ஆடியோ

இந்தியாவின் செல்வாக்கை உயர்த்திய நேருமீது அவதூறுகளை வீசும், மோடி தலைமையிலான ஆர்எஸ்எஸ் சித்தனையுடைய பாஜக அரசு அவதூறு வீசுவதை கண்டிக்கும் வகையில் ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது. அத்துடன் நேருவின் ஆட்சி காலத்தில் நாட்டின் வளர்ச்சி எப்படி இருந்தது என்பதையும் விளக்கி உள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/02/Pari-Audio-2022-02-18-at-1.11.52-PM.ogg

சென்னையில் பதற்றமான 1,198 வாக்கு சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு…

சென்னை மாநகராட்சி தேர்தலையொட்டி அடையாளம் காணப்பட்டுள்ள  பதற்றமான 1,198 வாக்கு சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.  சென்னையில் மட்டும், கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் மாநகர போலீசார், ஆயுதப்படை காவலர்கள், ஊர்காவல்படையினர் என மாநகரம் முழுவதும் கூடுதலாக மொத்தம் 18 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்களுக்கும் … Read more

மதிய உணவு சரியில்லை: அரியலூரில் அரசு பள்ளியை கண்டித்து மாணாக்கர்கள் சாலைமறியல்…

அரியலூர்: மதிய உணவு சரியில்லை என குற்றம் சாட்டி, அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிக்கு எதிராக மாணாக்கர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் , சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணாக்கர்களுக்கு சரியான முறையில் மத்திய … Read more