காங்கிரஸ் எம்பிக்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு

டில்லி மாநிலங்களவையிலிருந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக வெளிநடப்பு செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் தொடங்கிய முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமெனத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 … Read more

வீட்டின் அருகே விபத்தில் சிக்கியவருக்கு ராகுல் காந்தி உதவி

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றம் செல்லும் வழியில் விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்துள்ளார். சூரத் நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனை அளித்ததை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம் பி  பதவி பறிக்கப்பட்டது.  அண்மையில் இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்ததால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்ற ராகுல் நேற்று நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டார் இன்று நாடாளுமன்ற மக்களவையில் 2-வது நாளாக நடைபெற்று வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பங்கேற்பதற்காகக் … Read more

பிரபல மல்யுத்த வீராங்கனை கணவர், மாமியார் மீது வரதட்சணை குற்றச்சாட்டு

போபால் பிரபல மல்யுத்த  வீராங்கனை ராணி ராணா தம்மை வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றம் சாட்டியுள்ளார். பிரபல மல்யுத்த வீராங்கனை ராணி ராணா மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்  பல மல்யுத்த போட்டிகளில் விளையாடி பதக்கங்களை வென்றுள்ள இவருக்குக் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர் தனது கணவர் மற்றும் மாமியார் மீது குவாலியர் மாவட்ட காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில் கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி வருவதாகவும், சில நேரங்களில் அடித்து … Read more

அதிகாரத்தில் இருந்து பாஜக அரசை வெளியேற்றுவோம் : மம்தா பானர்ஜி

கொல்கத்தா அதிகாரத்தில் இருந்து பாஜக அரசை வெளியேற்றுவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். பிறகு மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மம்தா பானர்ஜி, ’பாஜக தலைமையிலான மத்திய அரசை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவோம்  மத்திய அரசு.மணிப்பூரில் உள்ள பழங்குடியினரைப் புறக்கணிக்கின்றது. எனவே வெள்ளையனே  வெளியேறு நாளில், பாஜகவை நாட்டிலிருந்து வெளியேற்றுவோம் என … Read more

அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவி ஹிலாரி கிளின்டன் எனது டேட்டிங்-கிற்கு உதவ முன்வந்தார்… வேல்ஸ் அமைச்சர் பரபரப்பு…

அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளின்டன் தனது டேட்டிங்-கிற்கு உதவ முன்வந்ததாக வேல்ஸ் அமைச்சர் மைல்ஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் கீழ் செயல்பட்டு வரும் வேல்ஸ் அரசின் கல்வித் துறை அமைச்சராக உள்ள ஜெர்மி மைல்ஸ், வேல்ஸ் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முதல் ஓரினச் சேர்க்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி நிலையங்களில் மாணவர்களின் பாலுறவு விருப்பத்திற்காக அவர்கள் தனிமைப்படுத்தப்படுவது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வரும் மைல்ஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு … Read more

தேசிய மருத்துவ காப்பீட்டு திட்ட தரவுகளில் மோசடி… ஒரே மொபைல் எண்ணை பயன்படுத்தி 7.5 லட்சம் பயனாளர்கள் பதிவு…

தேசிய மருத்துவ காப்பீட்டு திட்ட தரவுகளில் மோசடி நிகழ்ந்துள்ளதாக இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7.5 லட்சம் பயனர்கள் ஒரே மொபைல் எண்ணை பயன்படுத்தி பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. பயனாளிகளை அடையாளம் காண போதுமான சரிபார்ப்பு கட்டுப்பாடுகள் இல்லாமல் போனதே இதற்கு காரணம் என்றும் சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 9999999999 என்ற உபயோகத்தில் இல்லாத மொபைல் எண்ணை பயன்படுத்தி 7.5 லட்சம் பயனர்களின் தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 8888888888 என்ற உபயோகமில்லா மொபைல் … Read more

கேரளம் ஆகிறது கேரளா – சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் அந்த மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கேரளாவில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் கேரளாவை ஆட்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாநிலத்தின் பெயரான கேரளா என்பதை ‛கேரளம்’ என பெயர் மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அரசியல்சாசனம் மற்றும் அரசு ஆவணங்களில் மாநிலத்தின் பெயர் ‛கேரளம்’ என மாற்றம் … Read more

கூகுள் மீட் மற்றும் ஜூம் ஆகியவற்றுக்கு இணையாக இனி வாட்சப்பிலும் ஸ்க்ரீன் ஷாரிங் செய்யலாம்

வாட்சப்பில் புதிதாக ஸ்க்ரீன் ஷாரிங் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தவிர, வீடியோ காலிங் போது திரையை நீளவாக்கில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை இனி அகலவாக்கிலும் (landscape) பயன்படுத்த வகை செய்துள்ளது. இந்த புதிய அம்சம் குறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். வாட்ஸ்அப் பயனர்கள் வீடியோ அழைப்புகளின் போது தங்கள் திரையைப் பகிரலாம், அதாவது ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம். ஸ்கிரீன் ஷேரிங் செய்யும் போது பயனரின் திரையில் என்ன … Read more

ஆகஸ்ட் 9: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 530 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் குறைந்து 76 ரூபாய் 70 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.. நான் மிகவும் வேதனைப்படுகிறேன்”  என அவைத் தலைவர் ஜகதீப் தங்கர் வேதனை தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை கிளப்பி அவைகளை முடக்கி வருகின்றனர். இதற்கிடையில், மக்களவையில், மத்திய பாஜக அரசுமீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று (ஆகஸ்டு 8ந்தேதி) தொடங்கி … Read more