உலகளவில் 69.17 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 6.90 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 66.42 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பொருட்கள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் ஆவின் பொருட்கள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மேலும் பாலின் தரம் சிறப்பாக உள்ளதால் சென்னையில் மட்டும் 50 ஆயிரம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

வருவாய் துறையில் வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் துறையில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் பணிபுரியும் வட்டாட்சியர்களுக்கு பணி உயர்வு வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “மாண்புமிகு உச்சநீதிமன்றம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் … Read more

ஜூலை 29இல் திமுக இளைஞர் அணி நிர்வாகி கூட்டம்

சென்னை: ஜூலை 29இல் திமுக இளைஞர் அணி நிர்வாகி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 29 இல் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட மாநகர் அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் அழைப்பு

சென்னை: மணிப்பூர் வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சிகள் பெறலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் அடுத்தாண்டு தமிழ்நாட்டில் நடக்க உள்ளன; விளையாட்டு போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சிகள் பெறலாம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கேட்டுக்கொண்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் :  மூன்றாம் நாள் டெஸ்ட் முடிவில் 229 ரன்கள் எடுத்துள்ள மேற்கிந்திய அணி

போர்ட் ஆஃப் ஸ்பெயின் மேற்கிந்திய அணி இந்தியாவுக்கு எதிரான 2 ஆம் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் முடிவில் 5 விக்கட்டுகள் இழந்து 229 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது இந்தியா-மேற்கிந்தியஅணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 2-வது நாளில் 438 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. 500-வது சர்வதேச போட்டியில் ஆடும் விராட்கோலி (121 ரன்கள்) … Read more

தேவி பட்டினம்,, ராமநாதபுரம்,

தேவி பட்டினம்,, ராமநாதபுரம், ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமபிரான் ராமேஸ்வரம் வந்து சிவபூஜை செய்தது அனைவரும் அறிந்தது தான்.  அதற்கு முன்பு எள்ளால் ஒரு தலத்தில் அவர் சிவவழிபாடு செய்திருக்கிறார் என்பது உங்கஷளுக்கு தெரியுமா? அந்த தலம் தேவி பட்டினம். இங்கு 12ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட திலகேஸ்வரர் ஆலம். பின்னர் வந்த சேதுபதி மன்னர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டது. அக்காலத்து துறைமுக நகரமாக விளங்கிய தேவிப்பட்டினத்தில் வசூலிக்கப்படும் சுங்க தீர்வையிலிருந்து ஒரு … Read more

இந்தியாவில் நீண்டநாட்கள் முதல்வராக பதவி வகிக்கும் 2வது நபர் என்ற பெருமையை பெற்றார் நவீன் பட்நாயக்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்தியாவில் நீண்டநாள் முதல்வர் பதவியை வகிக்கும் இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2000, 2004, 2009, 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக ஐந்து முறை முதல்வராக இருப்பவர் நவீன் பட்நாயக். மேற்கு வங்க மாநிலத்தில் 23 ஆண்டுகள் 138 நாட்கள் தொடர்ச்சியாக முதல்வராக பதவி வகித்த ஜோதிபாசு-வின் சாதனையை நவீன் பட்நாயக் இன்று சமன் செய்துள்ளார். 1994 முதல் 2019 … Read more

மணிப்பூர் குறித்து மோடியிடம் விளக்கம் கோரி நாடாளுமன்றத்தில் போராட எதிர்க்கட்சிகள் திட்டம்

டில்லி பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. கடந்த 2 மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் நீடித்து வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ள நிலையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய அரசை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றன. சமீபத்தில் மணிப்பூரில் கலவரத்தின் போது 2 பெண்களை ஒரு தரப்பு ஆண்கள் நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற சம்பவம் தொடர்பான … Read more

சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்

சென்னை சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் 250 கிலோ வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. சென்னை நகரில் இருந்து ஆந்திரா, தெலங்கானா செல்லும் புறநகர் பேருந்துகளுக்கு எனத் தனியாக ஒரு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தின்படி மாதவரத்தில் 95 கோடி ரூபாய் செலவில், பல்வேறு வசதிகளுடன் புறநகர் துணை பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்குக் கழிப்பறை, குடிநீர் வசதி, பேருந்து நிலையத்தின் முகப்பில் பயணிகளின் பயன்பாட்டுக்கு எல்.இ.டி அறிவிப்புப் பலகை, நுழைவு … Read more