மீண்டும் 21 ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் கூடுகிறது

டெல்லி வரும் 21 ஆம் தேதி மீண்டும் காவிரி மேலாண்மை வாரியம் கூடுகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. காவிர் மேலாண்மை வாரியம் இதுவரிஅ 29 கூட்டங்கள் நடத்தி முடித்திருக்கிறது வரும் 21ம் தேதி 30 வது காவிரி … Read more

ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யாமல் உணவுதானிய கிடங்கில் தேங்கியிருக்கும் அரிசியை அப்புறப்படுத்த மத்திய அரசு திட்டம்

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKY) திட்டத்தில் ஏளைகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசிக்கான வரைமுறையை மத்திய அரசு மாற்றியமைத்ததை அடுத்து இந்திய உணவுக் கழகத்தின் (FCI) குடோன்களில் 18 மில்லியன் டன்னுக்கும் அதிகமான அரிசி தேங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக கொள்முதல் செய்யப்பட்ட இந்த அரிசி தற்போது வீணாக தேங்கியிருப்பதை அடுத்து அதனை அப்புறப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருவதாகத் தகவல் … Read more

அதானியிடம் விமான நிலையங்களை ஒப்படைக்க எவ்வளவு பணம் வாங்கினீர்கள் : மோடிக்கு ராகுல் காந்தி வினா

டெல்லி அதானியிடம் விமான நிலையங்கள் ஒப்படைத்தது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்த்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிடுகிறார்.  நேற்று அந்த தொகுதியில் நந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க ராகுல் காந்தி லக்னோ வந்தார்,  லக்னோ விமான நிலையத்தில் அவருக்கு நடந்த வரவேற்ப் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. பிரதமர் மோடி கடந்த 7ம் தேதி தேர்தல் பிரசாரத்தின்போது, “காங்கிரஸ் கட்சி அம்பானி-அதானி குறித்து விமர்சிப்பதை … Read more

புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ்ப்பாட வகுப்புகள் குறைப்பு : விளக்கம் கோரும் சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை கல்லூரிகளில் தமிழ்ப்பாட வகுப்புகள் குறைப்பு குறித்து விளக்கம் அளிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பிஏ,  பிஎஸ்சி, பி.காம் போன்ற பட்டப்படிப்புக்களில் நான்கு செமஸ்டர்களிலும் பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் பாடம், தற்போது இரண்டாவது மற்றும் நான்காவது செமஸ்டர்களில் மட்டும் கற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் அதன் நிறுவனர் சுவாமிநாதன் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு மனுவில் “தமிழ் … Read more

காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரா வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சுமார் 14 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்தவர் சுப்ரியா பரத்வாஜ். இவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் இந்தியா டுடே தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2023ம் ஆண்டு ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா நிகழ்ச்சி நடைபெற்ற போது, … Read more

மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் சென்னை காவல் துறை தொடங்கிய ‘பந்தம்’ சேவை திட்டம்!

சென்னை: 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் தேவைகளுக்கு உதவ சென்னை பெருநகர காவல் துறையின் பந்தம் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான  உதவி கோர, உதவி செல்போன் எண்ணும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 75வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் அவசர உதவிக்காக, சென்னை காவல்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.  பொதுவாக வீடுகளில் வசிக்கும் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சில சமயங்களில் வீட்டில் தனியாக இருப்பதால், அவசர தேவையின்றி தவிக்கின்றனர். மேலும், … Read more

அவதூறு வழக்கு காரணமாக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: திமுக எம்.பி.  தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆஜர் ஆனார். இதையடுத்து வழக்கின் விசாரணை  ஜூன் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக மத்திய சென்னை தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பேசிய இபிஎஸ், தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 75 சதவிகித பணத்தை செலவு செய்யவே இல்லை எனக் குற்றம்சாட்டியிருந்தார். இதனை மறுத்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 95 … Read more

அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடர எந்த அனுமதியும் வழங்கவில்லை! ஆளுநா் மாளிகை

சென்னை: அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடர எந்த அனுமதியும் வழங்கவில்லை என ஆளுநா் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.. அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநா் அனுமதி அளித்ததாக முன்பு தகவல் வெளியான நிலையில், ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது  சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை … Read more

இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிலையில், கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு…

வாரணாசி: வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று வேட்புமனுதாக்கல் செய்ய உள்ள நிலையில், காலையில் கங்கையில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பிரதமா் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தின் வாரணாசி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.  அத்தொகுதியில் அவா் தொடா்ந்து 3-ஆவது முறையாகப் போட்டியிட உள்ளாா்  அவர் இன்று(மே 14) வேட்புமனு தாக்கல் செய்கிறாா். முன்னதாக,  வாரணாசிக்கு  நேற்று (திங்கள்கிழமை) மாலை  வந்த மோடி, நேற்று  மாலையில் 6 கி.மீ. தொலைவுக்கு நகரின் முக்கியப் … Read more

குறைந்த கட்டணத்தில் ரஷியாவில் மருத்துவம் படிக்க ஆசையா? உடனே தொடர்புகொள்ளுங்கள்…

கோவை: குறைந்த கட்டணத்தில் ரஷியாவில் மருத்துவம் படிக்க ஆசைப்படும் மாணவர்களும், பெற்றோர்களும் உடனே அதற்கான பணிகளை தொடங்கலாம். ரஷியாவில் இந்தியர்களுக்கு மட்டும் 8000 மருத்துவ பணியிங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு உள்பட இந்தியா மாணவர்களிடையே மருத்துவ படிப்புக்கு பெரும் வரவேற்பு உள்ளது. அதனால், நீட் தேர்வு மூலம் எந்தவித டோனேஷனும் இன்றி, அரசின் கட்டணத்தில்  ஆண்டுக்கு பல லட்சம் மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். இந்த நிலையில்,  ரஷியாவில் உள்ள … Read more