கிழக்காசிய நாடுகளை வாட்டி வதைக்கும் வெயில்… இந்தியாவில் அதிகபட்சமாக 44 டிகிரி வெப்பம் பதிவு…

கிழக்கு ஆசியாவி்ன் பல்வேறு நாடுகளில் வெப்ப அலை வீசுகின்றது. கடந்த வாரம் அதிகபட்சமாக மியான்மரில் 113 டிகிரி (45 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தாய்லாந்து மற்றும் இந்தியாவில் 112 டிகிரி வெயில் பதிவானது. பங்களாதேஷில் 109 டிகிரியும், லாவோஸ் வியட்நாம் மற்றும் நேபாளில் 108 டிகிரியும் வெப்பம் பதிவானது. சீனாவில் 107 டிகிரியும், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரில் 98 டிகிரிக்கு சற்று கூடுதலாகவும் வெப்பம் பதிவானது. கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் கடந்த வாரம் … Read more

அடாவடி செய்யக்கூடாது, சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்! அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்த நீதிமன்றம்…

டெல்லி: அமலாக்கத்துறை சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்; அடாவடித்தனம் கூடாது என லாலு குடும்பத்தினர் தொடர்பான வழக்கில், டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் அடிப்படையாக அமையும். அதனால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். அமலாக்கத்துறை சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்; அடாவடித்தனம் கூடாது  என டெல்லி ரோஸ் அவென்யூ  நீதிமன்றம்கண்டித்து உள்ளது. மாட்டுத்தீவன ஊழல் தொடர்பாக பல்வேறு வழக்குகளல்ல் கைது செய்யப்பட்டு, … Read more

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் உள்பட 5 பேரிடம் வாக்குமூலம் பதிய அனுமதி கோரி மனு!

டெல்லி:  போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் திமுக நிர்வாகி, ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு செய்துள்ளது. டெல்லியில் கைப்பற்றப்பட்ட போதைபொருள் கடத்தல் வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும்,  தமிழ் சினிமா தயாரிப்பாளரும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக், முஜிபுர், முகேஷ், அசோக்குமார், சதானந்தம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகை … Read more

பிரேசிலில் 4 மாதங்களில் 40 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல்

பிரேசிலியா பிரேசில் நாட்டில் 4 மாதங்களில் 40 லட்சம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்களால் பரவுகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆயினும் ஆண்டுக்கு ஆண்டு அதன் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் … Read more

10, 11.12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவு வெளியாகும் தேதிகள் அறிவிப்பு

சென்னை தமிழக அரசு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளை அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடந்தது  இதைப் போஒல்  11 ஆம் வகுப்புக்கு மார்ச் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையிலும், 10 ஆம். வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26-ந்தேதி முதல் ஏப்ரல்) 8-ந்தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. 12 ஆம் வகுப்புத் தேர்வை … Read more

அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில், ஏத்தாப்பூர், சேலம்

அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில், ஏத்தாப்பூர், சேலம் *திருவிழா* தை மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்ஸவம். *தல சிறப்பு* இத்தலத்தில் சுவாமியுடன், மகாலட்சுமி அரூபலட்சுமியாக (உருவம் இல்லாமல்) அருளுகிறாள் என்கின்றனர். இதனால் சுவாமி “லட்சுமி கோபாலர்’ என்று அழைக்கப்படுகிறார். *பொது தகவல்* பிரகாரத்தில் வேதவல்லி தாயார் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இங்குள்ள ஆஞ்சநேயரை “அருள்தரும் ஆஞ்சநேயர்’ என்கின்றனர். இவர் தனது வாலை தலை மீது வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். பிரகாரத்தில் ஆழ்வார்கள் சன்னதி மட்டும் இருக்கிறது. இத்தல … Read more

சென்னை மெட்ரோ ரயில் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கம்

சென்னை மே தினத்தையொட்டி நாளை சென்னை மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்க உள்ளது. உலகெங்கும் நாளை மே தினம் கொண்டாடப்படுகிறது. நாளை அரசு விடுமுறை தினமாகும். எனவே சென்னையில் மெட்ரோ ரயில்கள் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் … Read more

தேனியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்த வாலிபர் கைதூ

தேனி தேனியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அத்துமிறி நுழைந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார் கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல். வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளிட்டவை பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டு, தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி … Read more

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தக் கட்டணம் உயர்வ்

சென்னை சென்னை மெட்ரோ ரயிலில் பயண செய்யாமல் வாகனத்தை நிறுத்துவோருக்கு வாகன நிறுத்தக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ”வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களின் பயன்பாட்டின் அடிப்படையில் பின்வரும் மாற்றங்களை செய்துள்ளது. கடந்த 30 நாட்களில் குறைந்தது 15 பயணங்கள் செய்த மெட்ரோ பயணிகளுக்கு மாதாந்திர பாஸ் வசதி விம்கோ நகர் பணிமனை, ஸ்ரீ … Read more

மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

டெல்லி டெல்லி நீதிமன்றம் முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்துள்ளது.. கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது .பிறகு டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9-ந்தேதி … Read more