ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு… பெங்களூருவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. கர்நாடகாவில் அரசுப்பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வலுவடைந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், விசாரணை முடியும் வரை ஹிஜாப் அல்லது காவித் துண்டு உள்ளிட்ட மத அடையாளங்களோடு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லக்கூடாது என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. தற்போது விசாரணை நிறைவடைந்த நிலையில், … Read more

எல்ஐசியில் உரிமை கோரப்படாத தொகை எவ்வளவு தெரியுமா? – நாடாளுமன்றம் தகவல்

30.9.2021 தேதிப்படி எல்ஐசி நிறுவனத்திடம் உரிமை கோரப்படாத 21 ஆயிரத்து 538 கோடி ரூபாய் கையிருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய நிதித்துறை அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது அதுமட்டுமில்லாமல் மேற்கூறிய தொகையின் வட்டியின் மூலமாக சுமார் 2911 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமை கோரப்படாத பணத்திற்கு உரியவர்கள் அடுத்த 25 ஆண்டுகள் வரை அந்த தொகையின உரிமை கோருவதற்கு தகுதி உடையவர்கள் எனவும் … Read more

இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எத்தனை பேருக்கு இலவச விசா? அமைச்சரின் பதில்

இந்தியாவில் சுற்றுலாத் துறை மேம்பாட்டின் ஒரு பகுதியாக 5 லட்சம் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசிய மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, வரும்27 ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவதாகக் கூறினார். அவற்றில், முதல் 5 லட்சம் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். பல்வேறு நாடுகளில் … Read more

பரபரப்பாக பேசப்பட்ட ஹிஜாப் வழக்கு: நாளை காலை தீர்ப்பு

ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. கர்நாடகாவில் அரசுப்பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வலுவடைந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், விசாரணை முடியும் வரை ஹிஜாப் அல்லது காவித் துண்டு உள்ளிட்ட மத அடையாளங்களோடு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லக்கூடாது என தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியது. விசாரணை நிறைவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை … Read more

பீகார் சட்டப்பேரவையில் முதலமைச்சர், சபாநாயகர் காரசார விவாதம்

பீகார் சட்டப்பேரவையில், விவாதத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கும் சபாநாயகர் விஜய் குமார் சின்காவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. சபாநாயகர் விஜய் குமார் சின்காவின் சொந்தத் தொகுதியான லக்கிசராயில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சபையில் விளக்கமளிக்கும்படி அவர், அமைச்சர் பிஜேந்திர யாதவிடம் கேட்டார். அப்போது, எழுந்து பேசிய நிதிஷ் குமார், அரசின் சார்பில் பதிலளிக்க அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது, விசாரணை நடந்து வருவதாக அமைச்சர் கூறும்போது, நாளை மறுதினம் புதிய பதிலுடன் … Read more

முருகனுக்கு பரோல் வழங்கிடக்கோரி அவரது மாமியார் மனு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனை பரோலில் விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முருகனின் மாமியார் பத்மா தாக்கல் செய்திருக்கும் மனுவில், தனது மகள் நளினி பரோலில் இருப்பதால், மருமகன் முருகனுக்கும் விடுப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். நளினி தனது கணவருக்கு விடுப்பு வழங்கும்படி மனு அளித்தும் சிறைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பத்மா குறிப்பிட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் முருகனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால், 30 … Read more

உ.பி: யோகி அமைச்சரவையில் முலாயம்சிங் மருமகளுக்கு இடம்? -யாருக்கெல்லாம் அமைச்சர் வாய்ப்பு?

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மருமகளும், பாஜக எம்எல்ஏவுமான அபர்ணா யாதவுக்கு  உத்தரபிரதேசத்தில் புதிதாக அமையவுள்ள யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற பின்னர், யோகி ஆதித்யநாத் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆனந்திபென் படேலிடம் வெள்ளிக்கிழமை அளித்தார். இதனையடுத்து யோகி அரசின் பதவியேற்பு மார்ச் 15 அல்லது 21ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளது. இந்த சூழலில் அமைச்சரவை பட்டியலில் அபர்ணா யாதவ் … Read more

'சிவப்பு நிற அரிசியை மக்கள் வாங்க விரும்பவில்லை' – அரசு எடுத்த முக்கிய முடிவு

நேரடி கொள்முதல் நிலையங்களில் டிகேஎம் 9 ரக நெல் கொள்முதலை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் டிகேஎம் 9 ரக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவ்வகை நெல்லினை அரவை செய்து பெறப்படும் அரிசி சிவப்பு நிறத்திலும், சற்று பருமனாகவும் இருப்பதால், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இந்த அரிசியை மக்கள் வாங்க விரும்புவதில்லை என அரசு தெரிவித்துள்ளது. அதனால், மக்கள் விரும்பாத அரிசியை பொதுவிநியோகத் திட்டத்தில் விநியோகிப்பதை … Read more

பஞ்சாப்: சர்வதேச கபடி வீரர் சுட்டுக்கொலை – யார் அவர்? என்ன காரணம்?

சர்வதேச கபடி வீரர் சந்தீப் நங்கல், மர்மகும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாலியன் கிராமத்தில், கபடி போட்டி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அங்கே வந்த மர்மகும்பல் ஒன்று, சர்வதேச கபடி வீரரான சந்தீப் நங்கல் ஆம்பியனை, தலை மற்றும் மார்பு பகுதியில் சுட்டுக் கொலை செய்தனர். சுமார் 20 குண்டுகள் அவரது உடம்பில் பாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பஞ்சாப் மட்டுமின்றி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கனடா, அமெரிக்கா, … Read more

‘அடுத்து ஆரம்பிச்சுட்டாங்க’.. ஸ்டேடியத்தில் ஷமியை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படம் குறித்த அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் அதிரவைத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘வலிமை’ திரைப்படம் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்குப்பின், கடந்த 24-ம் தேதி வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள், பொது இடங்களில் பிரபலங்களிடம் ‘வலிமை’ பட அப்டேட் கேட்டு வந்த விஷயம் வைரலானது.  குறிப்பாக கடந்த ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில், … Read more