விருதுநகர்: சதுரகிரி மலைக்குச் செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல, வரும் மார்ச் 15 முதல் 18 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இக்கோயிலுக்குச் செல்ல ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், மற்றும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், … Read more

ஆதாருடன் பான் எண்ணை இணைக்க தவறினால் அபராதம் எவ்வளவு தெரியுமா?

பான் கார்டை ஆதாருடன் மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்க தவறினால் ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதில் அளித்தது. அதில், ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு139AA2 பிரிவின் கீழ் அபராதம் விதிக்கப்படலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதாருடன் பான் எண்ணை இணைக்க பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இம்மாதம் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என … Read more

“இரவின் நிழல், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமென ஏற்க மறுக்கின்றனர்”-இயக்குநர் பார்த்திபன்

Cannes திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்டுள்ள தன்னுடைய இரவின் நிழல் திரைப்படத்தை, ஒரே ஷாட்டில் எடுத்த படம் என்பதை திரைப்பட விழா குழுவினர் ஏற்க மறுக்கின்றனர் என பார்த்திபன் தெரிவித்துள்ளார். இயக்குநர் எழில் இயக்கத்தில் ஆர்.பார்த்திபன், கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘யுத்த சத்தம்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் பார்த்திபன், இயக்குனர் எழில், நாயகி சாய்பிரியா, இயக்குனர் சங்க நிர்வாகிகள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய … Read more

கன்னியாகுமரி: சந்தேகத்தின் பேரில் மனைவியை கொன்ற கணவன் எடுத்த விபரீத முடிவு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்தவர் ஜோஸ் (40). இவரது மனைவி வனஜா (33). இவர்களுக்கு மஞ்சு (13) அர்ச்சனா (11) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். வனஜா ஜோஸின் இரண்டாவது மனைவி ஆவார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்த ஜோஸ் சொந்த ஊர் திரும்பினார். இதையடுத்து மனைவியின் நடத்தை மீது சந்தேகம் … Read more

விமானங்களில் இந்திய இசை வாத்தியங்களை இசையுங்கள் – மத்திய அமைச்சர்

இந்திய விமான நிலையம் மற்றும் விமானங்களில் இந்திய இசை வாத்தியங்களை இசைக்க விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் இந்திய இசைக்கருவிகளின் இசைகளை இசைக்கும் முடிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளதா? மற்றும் விமான பயணத்தின் போது பொழுதுபோக்கை மேம்படுத்த மத்திய அரசிடம் திட்டங்கள் உள்ளதா? என நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறையின் இணை அமைச்சர் வி.கே சிங், இந்திய விமான … Read more

திருக்குறளுடன் பேச்சை தொடங்கிய கதாநாயகி – நெகிழ்ந்து பாராட்டிய இயக்குநர்

தமிழ்சினிமாவின் தமிழச்சிகளின் காலம் தலைதூக்கும் என நம்புவதாக ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். எழில் இயக்கத்தில் நடிகர்கள் பார்த்திபன், கவுதம் கார்த்திக் நடித்துள்ள `யுத்த சத்தம்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் பார்த்திபன், கவுதம் கார்த்தி, நாயகி நடித்த சாய்பிரியா மற்றும் இயக்குனர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில் பேசிய கதாநாயகி சாய்பிரியா, படத்தைப் பற்றிய தகவல்களை பகிர்ந்தபின் ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்ற திருக்குறளை கூறினார். மேலும் “விவசாயிகள் … Read more

எங்கே இருக்கிறது மயிலாப்பூர் வரலாற்றை சொல்லும் மயில் சிலை? தீவிரமாக தேடும் காவல்துறை

மயிலாப்பூர் வரலாற்றை சொல்லும் மயில் சிலை எங்கே என தெப்பக்குளத்திற்குள் இறங்கி தேடி வருகிறது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு. பல்லவர்களால் கடந்த 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததால் இந்த கோயில் அமைந்துள்ள பகுதியும் மயிலாப்பூர் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மிகவும் தொன்மை வாய்ந்த இந்த கோயிலில் புன்னைவன நாதர் சன்னதியில் லிங்கத்தை மலரால் மயில் அர்ச்சனை செய்வது போல சிலை இருந்ததாகவும் கடந்த … Read more

நிலக்கரிக்கு தட்டுப்பாடு இருக்கிறதா? – மத்திய அரசு விளக்கம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதாக சர்ச்சை உருவாகியுள்ள நிலையில், நிலக்கரி உற்பத்தி போதிய அளவில் இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இன்று மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மாநிலங்களவையில் அளித்துள்ள ஒரு பதிலில், அனல் மின் நிலையங்களிடம் 26.3 மில்லியன் டன் நிலக்கரி இருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார். நிலக்கரி உற்பத்தியில் பாதிப்பு இல்லை எனவும், அதனால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் பொருள்படும்படி அமைச்சரின் பதிலில் புள்ளிவிவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. … Read more

ஜெயலலிதா மீதான வழக்கு – தீபா, தீபக் சேர்ப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான செல்வ வரி மேல்முறையீட்டு வழக்கில், அவரது வாரிசுகளான தீபா, தீபக்கை சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. WEALTH TAX எனும் செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என ஜெயலலிதா மீது வருமானவரித்துறை வழக்கு தொடர்ந்தது. அதில் தன்னை விடுவிக்கக்கோரி அவர் தாக்கல் மனுவை விசாரித்த மேல் முறையீட்டு தீர்ப்பாயம், 2008ஆம் ஆண்டு ஜெயலலிதாவை விடுவித்தது. அதனை எதிர்த்து வருமான வரித்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் … Read more

கொரோனா இழப்பீடு பெற போலிச் சான்றிதழா? – நீதிபதிகள் வேதனை

கொரோனா இழப்பீடு பெறுவதற்காக போலிச் சான்றிதழ் வழங்கும் அளவுக்கு நமது ஒழுக்கம் தாழ்ந்து போகும் என ஒருபோதும் நினைத்ததில்லை என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கொரோனாவால் மரணமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் கொரோனா இழப்பீடு பெறுவதற்காக பலர் மருத்துவர்களிடம் இருந்து போலியாக சான்றிதழ் பெற்றுத் தருவதாக புகார்கள் வந்துள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள் இழப்பீடு பெறுவதற்காக போலி சான்றிதழ் வழங்கும் … Read more