Mutual fund-களில் முதலீடு செய்யலாமா? வட்டி எவ்வளவு கிடைக்கும் – நிபுணர் கருத்து

பணவீக்க வகிதத்தை விட கூடுதலாக வட்டி வழங்கும் வருவாய் முதலீட்டு திட்டங்கள் இருக்கின்றனவா? அது போன்ற திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகள் பாதுகாப்பானதா என்பதை விரிவாக பார்க்கலாம். இந்தியர்களின் பழக்கமே பாரம்பரிய முறையில் சேமிப்பதுதான். குறிப்பாக வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட், தங்கத்தை வாங்குவது. வங்கியில் ஆர்.டி போடுவது போன்றவைதான். இவையெல்லாம் நல்ல மற்றும் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள் என்றாலும் சில நேரங்களில் அவை பண வீக்கத்தை விட குறைவான வருவாயை கொடுக்கின்றன. இதனால், நாம் செய்யும் சேமிப்புகள் விலைவாசிக்கு … Read more

ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கு: உ.பி. அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிரான உத்தரபிரதேச அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில், தலித் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ‘பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பெண்ணின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ என உத்தரவு … Read more

விபத்து வழக்கில் நேரில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த் – நீதிமன்றம் எடுத்த முடிவு

நடிகை யாஷிகா ஆனந்த் மீது போடப்பட்ட பிடிவாரண்ட் தளர்த்தப்பட்டு, வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவுப் பிறப்பித்துள்ளார். ‘நோட்டா’, ‘ஜாம்பி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி, யாஷிகா ஆனந்த் தனது மூன்று நண்பர்களுடன் புதுச்சேரி சென்று விட்டு … Read more

”10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறுதீனி”-சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

சென்னை மாநகராட்சியின் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறுதீனி, பள்ளிக்கல்வி மற்றும் சாலை வசதிகளுக்கான  உட்கட்டமைப்புக்கு தேவையான அறிவிப்புகள் வெளியாகியிருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24 நிதியாண்டின் நிதிநிலை அறிக்கை மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 82 புதிய அறிவிப்புகளை மேயர் பிரியா அறிவித்தார். அதன்படி, “மாநகராட்சிப் பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்வு பெற்று NEET, JEE, CLAT போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று … Read more

எடியூரப்பா வீடு மீது கல்வீசி தாக்குதல்.. வீட்டில் இருந்த பாஜக கொடி அகற்றம் – பின்னணி என்ன?

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீடு மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜன மனஷா மையத்தின் பரிந்துரையை எதிர்த்து ஷிகாரிபுரா தாலுகா பஞ்சாரா சமாஜ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் தீவிரமடைந்ததால் போராட்டக்காரர்கள் எடியூரப்பா வீடு மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சமீபத்தில் கர்நாடக அமைச்சரவை இடஒதுக்கீடு தொடர்பாக எடுத்த முடிவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. … Read more

‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆஸ்கர் பரப்புரை செலவு ரூ.80 கோடியா? – விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி!

‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் ஆஸ்கர் விருது நடைமுறைக்கு 80 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக தகவல் வெளியான நிலையில், படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா விளக்கமளித்துள்ளார்.  ‘பாகுபலி’ பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ராஜமௌலி இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’. பான் இந்தியா படமாக உருவாகிய இந்தப் படத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ஆலியா பட், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 1920-ம் … Read more

சேலம்: ‘குடியிருப்பு பகுதியில் மதுபானக் கடை திறப்பதா?’ சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

சேலத்தில் குடியிருப்பு பகுதியில் அரசு புதிதாக மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சேலம் நான்கு ரோடு அருகே உள்ள கோவிந்தா கவுண்டர் தோட்டம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கெனவே இரவு நேரங்களில் சட்டவிரோத விற்பனை நடைபெறுவதாக புகார் உள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியிலேயே புதிதாக அரசு மதுபானக் கடை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனை அறிந்த குடியிருப்பு … Read more

பில்கிஸ் பானோ பாலியல் குற்றவாளிக்கு அரசு விழாவில் முன்னுரிமை: குஜராத்தில் சர்ச்சை நிகழ்வு!

பில்கிஸ் பானோ என்ற கர்ப்பிணியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, 3 வயது குழந்தை உட்பட 7 பேரை கொடூரமாக கொன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற 11 பேரும் கடந்த ஆண்டு ‘முன்கூட்டியே’ விடுதலை செய்யப்பட்டனர். அதில் ஒருவரான சைலேஷ் சிமன்லால் குஜராத்தில் நடந்த அரசு விழாவில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு நிகராக மேடையில் அமர்ந்திருந்த நிகழ்வு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தகோட் மாவட்டத்தில் குடிநீர் விநியோக தொடர்பான நிகழ்ச்சி … Read more

சென்னை: திருமண கொண்டாட்டத்தின்போது கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

சென்னையில் திருமண விழாவில் நடனமாடிய கல்லூரி மாணவரொருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்பவத்தின்போது பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆந்திர மாநிலம் அமீனா கேசவ நகரைச் சேர்ந்தவர் சத்யசாய் ரெட்டி. இவர், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஹாஸ்டலில் நண்பர்களுடன் தங்கி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது தோழி பூனம் என்பவரது சகோதரியின் திருமண வரவேற்பு … Read more

“அதிமுகவில் 1 லட்சம் பழனிசாமி இருக்கிறார்கள்; தொண்டர்களால் நடத்தப்படும் கட்சி இது”-இபிஎஸ்

“அதிமுகவில் என்னை போல் ஒரு லட்சம் பழனிசாமி இருக்கிறார்கள். இந்த பழனிசாமி இல்லை என்றால் இன்னொருவர் ஆள்வார். ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுகவை எவராலும் தொட்டு பார்க்க முடியாது” என தஞ்சையில் நடைபெற்ற  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். தஞ்சை மகாராஜா திருமண மகாலில் முன்னாள் அமைச்சர் காமராஜ் இளைய மகனுக்கு நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, … Read more