வரி கட்டாமல் இழுத்தடித்த பால் வியாபாரி.. எருமையை ஓட்டிச் சென்ற நகராட்சி அதிகாரிகள்: எங்கு?

அரசு நிர்வாகத்துறைகளான மாநகராட்சி, நகராட்சிகள் விதிக்கும் வரிகளை கட்ட முடியாமல் போனால் பலகட்ட எச்சரிக்கைகளுக்கு பிறகு பைக், டிராக்டர் போன்றவையோ, சமயங்களில் வீட்டையே ஜப்தி செய்வதும் வாடிக்கை. ஆனால் குடிநீருக்கான வரியை கட்டாமல் இருந்தவரின் எருமை மாட்டை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்த நிகழ்வு மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது. குவாலியரில் உள்ள தலியான்வாலா பகுதியைச் சேர்ந்த பால்கிஷன் பால் என்ற பால் வியாபாரி 1 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்க்கான வரியை கட்டாததால் மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை பல … Read more

'நிலக்கரி எடுத்தால் வீராணம் ஏரி பாலைவனமாகிவிடும்' – வேல்முருகன்

வீராணம் ஏரியில் நிலக்கரி தோண்டி அப்பகுதியை பாலைவனம் ஆக்க வேண்டாம் என்றும் விரைவில் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாகவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனித நேயத் திருநாள் திராவிட மாடல் _70 நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் … Read more

”உங்கள் நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கிறது” – கலாஷேத்ரா நிறுவனத்துக்கு டி.எம்.கிருஷ்ணா கடிதம்!

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கலாஷேத்ரா நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாகவும், புகாரின் முக்கியத்துவம் கருதாமல் நிர்வாகம் நடந்துகொண்டுள்ளதாகவும், அந்நிறுவனத்தின் சேர்மன் ராமதுரைக்கு பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கலாஷேத்ரா அறக்கட்டளையின் மூத்த ஆசிரியர் ஒருவர் மீது அங்கு படிக்கும் மாணவர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ’கேர் ஸ்பேஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இணையதளத்தில் மாணவர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் பேசியபோதுதான் … Read more

அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் இழப்பு? – PF சேமிப்பிற்கான வட்டி குறையுமா?

அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால் PF சேமிப்பிற்கான வட்டி குறையுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்தியாவில் உள்ள 27.73 கோடி ஊழியர்களின் பி.எப் சேமிப்பு பணத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நிர்வகித்து வருகிறது. அந்த தொகையில் ரூ.1.57 லட்சம் கோடி அளவுக்கு ஷேர் மார்க்கெட் (ETF ) வழியாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், நடப்பு நிதியாண்டில் ரூ.8,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது. அதானி நிறுவன பங்குகளில் … Read more

சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு முறைகேடுகளாக டெண்டர் விட்டதாகவும், அதற்கு பிரதிபலனாக சுமார் 58 கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க.வின் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் புகார் அளித்திருந்தனர். … Read more

லஞ்சப் புகாரில் சிக்கிய கர்நாடக பாஜக எம்.எல்.ஏ அதிரடி கைது – வழக்கு குறித்த முழுவிபரம்

லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. விருப்பக்‌ஷப்பா  கைது செய்யப்பட்டுள்ளார். விருப்பக்‌ஷப்பா முன் ஜாமீன் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். என்ன வழக்கு? யார் விசாரிக்கிறார்கள்? கர்நாடக மாநிலம் தாவங்கரே மாவட்டத்தில் உள்ள சன்னகிரி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் மடல் விருப்பக்‌ஷப்பா. கர்நாடக அரசுக்குச் சொந்தமான கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். இந்த நிறுவனத்திற்கு … Read more

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தல் வழக்குகளில் நாளை தீர்ப்பு!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்த ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ்பாபு நாளை தீர்ப்பளிக்க உள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியிலிருந்து நீக்கியது, பொது செயலாளர் பதவி உருவாக்கம் உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி கே.குமரேஷ் … Read more

டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!

எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பரப்புரையின் போது, மோடி சமூகத்தினரை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. உடனடியாக … Read more

வீடியோ வெளியிட்ட ஸ்மித்: கேகேஆர் அணி ரசிகர்களின் ரியாக்ஷனும், கேப்டன் அறிவிப்பும்

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் இணைவதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டாண்ட் இன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு, அந்த அணி ரசிகர்கள் ட்வீட் செய்து ட்ரெண்டாக்கி வந்தனர். இந்நிலையில், அந்த அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் முதல்முறையாக மகளிர் ப்ரீமியர் லீக் கடந்த 4-ம் தேதி துவங்கி நேற்றுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி 7 … Read more

யாருக்கெல்லாம் உரிமைத் தொகை ரூ1000 கிடைக்கும்? – பேரவையில் முதல்வர் கொடுத்த விளக்கம்

மகளிர் உரிமைத் தொகை யார் யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.  தொடக்கத்திலேயே, ”இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது” என்று அழுத்தமாக தனது கருத்தினை அவர் பதிவு செய்தார். பின்னர் பேசிய முதல்வர், ”அடுத்து ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்பது பெண்களை வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து … Read more