ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.முனசிங்க அவர்களின் சேவைக்கு பாராட்டு

உபகரண சேவை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.முனசிங்க ஆர்எஸ்பீ எடீஓ அவர்கள் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றும்செல்வதற்கு முன்னர் வியாழக்கிழமை (ஒக்டோபர் 26) குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவ தளபதியின் கோரிக்கையின் பேரில் தளபதியின் அலுவலகத்திற்கு வருகை தந்தார். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 33 வருடங்களுக்கும் மேலாக சேவை செய்து ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியுடனான உரையாடல்களின் போது நேசத்துக்குரிய … Read more

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஒக்டோபர் 27ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை … Read more

தெற்கு, தென்கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவுடனான இலங்கையின் வர்த்தக தொடர்புகள் விரிவாக்கப்பட்டு வருகின்றன

அமைச்சரவை அனுமதியுடன் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவப்பட்டிருக்கும் சர்வதே வர்த்தக அலுவல்கள் பணியகத்தினால் வெளிநாடுகளுடனான வர்த்தக பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைக் குழுவான NTNC இன் வழிநடத்தலுடன் நிதி அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகளுக்கான திணைக்களம், வணிக திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் முதலீட்டுச் சபை உள்ளிட்ட நிறுவன சிரேஷ்ட அதிகாரிகள் இந்த தேசிய வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கான குழுவில் அங்கத்துவம் … Read more

போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்ல, டிஜிட்டலுக்கான மாற்றத்தைத் துரிதப்படுத்த வேண்டும்

அதற்கான திட்டம் எதிர்வரும் பட்ஜெட் உரையில் நாட்டுக்கு முன்வைக்கப்படும். டிஜிட்டல் மாற்றத்திற்கான புதிய சட்டம் கொண்டுவரப்படும் – தேசிய தகவல் தொழில்நுட்ப விருது வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இது தொடர்பான திட்டத்தை எதிர்வரும் வரவு செலவுத் திட்ட உரையில் நாட்டிற்கு முன்வைப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான சட்டங்களைக் … Read more

கிராமிய வீதிகள் அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மணல் வீதிகளை கிறவல் வீதிகளாக மாற்றும் வேலைத்திட்டம் தொடர்பாக மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் நடை பெற்றது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (26) இடம் பெற்ற இந் நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ரணவிர கலந்துகொண்டார். “மணல் வீதிகள் அற்ற கிராமங்கள்” எனும் தொணிப்பொருளில் … Read more

இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி

2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நேற்று (26) நடைபெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலாவது துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 33 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து அணி சார்பாக டீநn ளுவழமநள 43 ஓட்டங்களையும், துழnலெ டீயசைளவழற 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் … Read more

ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை உருவாக்குவது தொடர்பாக மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல்!!

ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (26) மட்டக்களப்பில் நடைபெற்றது. அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க, வெகுசன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து இலங்கையில் தேசிய ஊடகக் கொள்கைக்கான கட்டமைப்பொன்றை உருவாக்கும் பணியிலும் இலங்கை ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை அமைப்பதிலும் ஈடுபட்டுவருகின்றது. அதற்கமைய, வெகுசன ஊடக அமைச்சினால் கல்வியாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை உள்ளடக்கி வழிநடத்தல் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பல சந்தர்ப்பங்களில் கூடி … Read more

பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு உடனடியாக உரிய நிறுவனங்களில் நியமனங்களை வழங்கவும். – பிரதமர் தினேஷ் குணவர்தன

இதுவரை நியமனம் வழங்கப்படாதுள்ள பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் உரிய நிறுவனங்களுக்கு நியமனங்களை வழங்குமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார். பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் செயற்பாடுகள் மற்றும் நியமனத்தை துரிதப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் (.2023.10.25) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், அரசாங்க ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உத்தியோகபூர்வ குழுவினால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் … Read more

சிறு மற்றும் மத்தியத்தர மக்களுக்காக கொழும்பு நகரத்தில் 05 வீட்டுத்திட்டங்கள் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்

சிறு மற்றும் மத்தியத்தர மக்களுக்காக கொழும்பு நகரத்தில் 05 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார். அதற்கான இணக்கப்பாட்டினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன அரசாங்கத்துடன் செய்துகொண்டுள்ளார் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 2024 ஆம் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் வீடமைப்பு அதிகார சபையில் தடைப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே … Read more

விவசாய மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் புரட்சிகர மாற்றத்திற்காக பல்வேறு புதிய திட்டங்கள்

  அதற்காக மேலதிக நிபுணத்துவத் தெரிவுகளைப் பெற்றுக்கொள்ள அமைச்சுடன் இணைந்த புத்தாக்க முயற்சிகள் ஊக்குவிக்கப்படும் – 117 ஆவது இலங்கை பொறியிலாளர்கள் நிறுவனத்தின் வருடாந்த அமர்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. விவசாய மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் புரட்சிகர மாற்றத்திற்கான பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது, பொறியியலாளர்களின் பங்களிப்பு மிக மிக்கியமானது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளின் விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சுக்களின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் மேலதிக நிபுணத்துவத் தெரிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான … Read more