இலங்கை அணிக்கு  அபராதம்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் குறித்த நேரத்திற்குள் ஓவர் எண்ணிக்கையை வீசத் தவறியமைக்காக இலங்கை அணிக்கு கிடைத்த போட்டிப் பணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமது போட்டி பணத்தில் இருந்து 10% அபராதமாக செலுத்துமாறு போட்டியின் நடுவராக இருந்த இந்திய பிரஜை ஜவகல் ஸ்ரீநாத் உத்தரவிடப்பட்டுள்ளார். இலங்கை அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய போட்டியில் இலங்கை வீரர்கள் ஓவர்களை முடிக்க வேண்டிய நேரத்தில், தேவையான ஓவர்களை விட இரண்டு … Read more

மூத்த நடிகர் ஜாக்சன் ஆண்டனி காலமானார்…

வாகன விபத்தில் சிக்கி 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் ஜாக்சன் ஆண்டனி இன்று (09) அதிகாலை காலமானார். 1958 ஆம் ஆண்டு றாகமையில் பிறந்த அவர் தமது 65 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இவர் தமிழர்கள் மத்தியிலும் பரீட்ச்சியமான ஒரு சிறந்த கலைஞராக விளங்கியவர். நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பிற்காக அனுராதபுரம் பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, தலாவ வீதியில் மொரகொட பிரதேசத்தில் அவர் … Read more

கிழக்கு மாகாணத்தை பொருளாதார ரீதியில் பலப்படுத்த 10 வருடத் திட்டம்

மகாவெலி திட்டத்தில் விடுபட்ட மகாவெலி ஏ மற்றும் பீ வலயங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை. நிலாவெலியில் இருந்து பாணம‌ வரை விரிவான சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் -ஜனாதிபதி மட்டக்களப்பில் தெரிவிப்பு. திருகோணமலையின் அபிவிருத்தி உட்பட கிழக்கு மாகாணத்தில் விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அடுத்த 10 வருடங்களில் விரிவான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மகாவலி திட்டத்தில் விடுபட்ட இரண்டு மகாவலி ஏ மற்றும் பீ வலயங்களை அபிவிருத்தி செய்து மட்டக்களப்பு மாவட்டத்தை … Read more

நாட்டில் அலங்கார மீன் இனங்களின் உற்பத்திக்கும் அதன் வளர்ப்பு முயற்சிகளுக்கும் நெக்டா நிறுவனம் அளப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது

நாட்டில் அலங்கார மீன் இனங்களின் உற்பத்திக்கும் அதன் வளர்ப்பு முயற்சிகளுக்கும் நெக்டா நிறுவனம் அளப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது நாட்டில் அலங்கார மீன் இனங்களின் உற்பத்திக்கும் அதன் வளர்ப்பு முயற்சிகளுக்கும் நெக்டா நிறுவனம் அளப்பெரிய பங்களிப்பை வழங்கியிருந்ததாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துதரிஸ்டவசமாக கடந்த கொரோனா தொற்று நோயின் தாக்கத்தால் பாரிய வீழ்ச்சியை அடைந்த அலங்கார மீன் இனங்களின் உற்பத்திக்கு மீண்டும் புத்துயிர் அளித்து அதனை ஊக்கப்படுத்த தனது கடல்தொழில் அமைச்சும் நெக்டா நிறுவனமும் தீவிரம் காட்டி … Read more

அனைவரும் இலங்கையர்கள் என்ற வகையில் இன,மத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அர்ப்பணிக்க வேண்டும் – மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

அனைவரும் இலங்கையர்கள் என்ற வகையில் இன,மத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அர்ப்பணிக்க வேண்டும் – மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளை காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவை சந்திக்க நேரிட்டதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, … Read more

டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தை துரிதப்படுத்தும் வேலைத்திட்டம் ஒக்டோபர் 11 முதல் ஆரம்பம்

  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய, டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தைத் துரிதப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தொழில்நுட்ப அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கு இணையாக அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்றுபட்டு டிஜிட்டல் பொருளாதார திட்டத்தை செயற்படுத்தும் முறைமை ஆரம்பிக்கப்படவுள்ளது. தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் பொருளாதார முறைமையின் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு கிடைக்கும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் நம்பிக்கை தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில்  (05) நடைபெற்ற … Read more

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில்; 100 மி.மீ அளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஒக்டோபர் 07ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 06ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவு பலத்த … Read more

“நிகழ்நிலை காப்பு” சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மேலும் இரு மனுக்கள்

“நிகழ்நிலை காப்பு” சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மேலும் இரு மனுக்கள் 2023 ஒற்றோபர் 04 ஆம் திகதி சபாநயகரின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட இரண்டு மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “நிகழ்நிலைக் காப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் இரு மனுக்களின் பிரதிகள் கௌரவ சபாநாயகர் அவர்களுக்குக் கிடைத்திருப்பதாகக் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன் (06) சபையில் அறிவித்தார்.

பெருந்தோட்ட மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி கௌரவிப்பு…

பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அம்மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டியும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும் ‘நாம் – 200’ நிகழ்வின் அறிமுக விழாவும், சின்னம் வெளியீடும் நேற்று (05.10.2023) நடைபெற்றது. நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில், இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற … Read more

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடும்போது உலக அரசியலும் செல்வந்த நாடுகளின் மோதல்களும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும்

உலகில் நூறு வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட பத்தாயிரம் மடங்கு வேகமாக உயிர் பல்வகைத்தன்மையை இழக்கப்படுகிறது. மனித குலம் உள்ளடங்களாக இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் அனைத்து உயிரினங்களும் இருப்பு தொடர்பான நெருக்கடிக்கும் முகம்கொடுத்துள்ளன. ஆசிய பசுபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார சபையின் 05 ஆவது அமர்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. காலநிலை மாற்றம் மற்றும் உயிர் பல்வகைத்தன்மை குறைவடைதல் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடும்போது உலக அரசியலும் செல்வந்த நாடுகளின் மோதல்களும் இரண்டாம் நிலைக்குத் … Read more