பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு IMF ஒப்பந்தத்தில் முக்கிய விடயங்கள் சட்டமாக்கப்படும்

18 ஆவது தடவையாக சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதற்கு தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை- ஜனாதிபதி தெரிவிப்பு சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் ஒப்பந்தத்தின் முக்கிய விடயங்கள் சட்டமாக கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டமூலம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் ஆகிய மூன்று வரைவுகளும் ஜூன் … Read more

கடற்பரப்புகளில் வானிலை, கடல்நிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை:மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் … Read more

ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இளையோர் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியானது அங்கே இடம்பெற்ற முக்கோண இளையோர் ஒருநாள் தொடரை அடுத்து, ஆப்கானிஸ்தான் அணியுடன் இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் … Read more

நாளை முதல் பாடசாலை விடுமுறை

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு நாளை (04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்விச் செயற்பாடுகளின் முதலாம் தவணைக்கான  இரண்டாம் கட்டம் ஏப்ரல் 17 ஆம் திகதி முதல்  மே 12 வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளதோடு, மே 13 முதல் மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. மேலும் முதலாம்  தவணையின் மூன்றாம் கட்டம் மே 25ஆம் … Read more

புத்தாண்டு சுபநேரப் பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரம் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் கொண்டுவரப்பட்ட சுபநேரப் பத்திரத்தை, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார். வளர்பிறை தரிசனம், பழைய ஆண்டிற்கான நீராடல், புத்தாண்டுப் பிறப்பு, புண்ணியகாலம், உணவு சமைத்தல், சுப காரியங்களை ஆரம்பித்தல் கைவிசேடம் பெறுதல், உணவு உண்ணுதல், தலைக்கு மருத்துநீர் … Read more

வெடுக்குநாறி விவகாரத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு 

நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் சந்தப்பட்டவர்களுடன் சுமூகமான கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் ஊடாகவும் வெடுக்குநாறி விவகாரத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு எட்டப்படும் என்று வெடுக்குநாறி மலையில் வைத்து அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஒத்துழைப்புக்களை வழங்குகின்ற ஜனாதிபதிக்கு நன்றி கூறுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிக்கையில், உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதனால் ஆவணங்களை கோரியுள்ளேன். சமய முக்கியத்துவம் … Read more

நியூசிலாந்து அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் ரி20 போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் ரி20 போட்டி ஓக்லேன்ட் நகரின் ஈடன் பார்க் அரங்கில் ஆரம்பமாகியது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுப்பட்டது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் சரித் அசலன்க … Read more

இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியை சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர், நேற்று முன்தினம் (01) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்தனர். இலங்கையில் அரச சேவையில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்த உதவுவது மற்றும் பயனுள்ள கண்காணிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரச நிறுவனங்களின் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் கண்டறிவதே பாரத் லாலின் இலங்கை விஜயத்தின் நோக்கமாகும். மக்கள் சேவைகளை வழங்குவதற்காக தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இந்தியா குறிப்பிடத்தக்க … Read more

ஜனாதிபதி தலைமையில் தேசிய புத்தரிசி விழா

தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் (02) அநுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மஹாபோதிக்கு அருகில் இடம்பெற்றது. அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா, அடமஸ்தானாதிபதி வண. பல்லேகேம ஹேமரதன நாயக்க தேரரின் ஆலோசனைக்கு அமைவாக விவசாய அமைச்சு மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தினால் 56 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னர் காலத்தில் இருந்து நடைபெற்று வரும் இந்த சம்பிரதாயத்திற்கு, நாடு … Read more

விமானப்படை “ஹெரலி பெரலி” வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

நாடு முழுவதும் சென்று மூன்று மில்லியன் பலா மரக்கன்றுகளை நடும் விமானப்படையின் “ஹெரலி பெரலி” வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் அநுராதபுரத்திலுள்ள விமானப்படை முகாமில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பலா சார்ந்த உற்பத்திகளுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும், பலா சார்ந்த உணவு உற்பத்திகளை இலங்கை மக்கள் மத்தியில் பிரபல்யபடுத்துவதுமே இதன் நோக்கமாகும். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் … Read more