அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு மேலும் 500 சிசு செரிய பஸ்கள்..

அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்கு மேலும் 500 சிசு செரிய பஸ் சேவைகளை வழங்கி அதன் எண்ணிக்கையை 2000 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியுள்ளேன் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு … Read more

கல்விப் பொது தராதர பத்திர (சாதாரண தரப் ) பரீட்சை முடிவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

தற்போது இடம்பெற்றவரும் 2023ம் வருடத்துக்கான 2024 மே மாதத்தில் கல்வி பொது தராதரப் பத்திர சாதாரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான அப்பரீட்சை முடிவடைந்தவுடன் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்காக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம் ஜெயந்தவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்ததும் அதன் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆகக் குறைந்தது மூன்று மாதங்கள் செல்லும். இக்காலப் பகுதியினுள் … Read more

இந்த ஆண்டு 20 புனிதத் தலங்களை வர்த்தமானியில் வெளியிடத் திட்டம்…

கடந்த ஆண்டு 19 புனிதத் தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது… வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட புனிதத் தலங்களின் மொத்த எண்ணிக்கை 130… இந்த ஆண்டு 20 புனிதத் தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் 09 வழிபாட்டு தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஹம்பாந்தோட்டை உத்தகந்தர ரஜமஹா விகாரை, குருநாகல் தம்பதெனிய ரஜமஹா விகாரை, மொனராகலை பிரிவு பியங்கல ரஜமஹா விகாரை, புத்தளம் வெஹெரகல ரஜமஹா விகாரை, … Read more

சரிந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் சவாலை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் – மனுஷ நாணயக்கார

நாட்டின் பொருளாதார சவாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் அரசியல் சவாலாக எடுத்துக் கொள்ளாமல், நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்காக ஏற்றுக்கொண்டது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார் . ஹம்பாந்தோட்டை அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை விளையாட்டரங்கில் கடந்த (10) அன்று ஆரம்பமான ‘ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் பதினான்காவது கட்டத்தின் அங்குரார்பண நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் “சிலரால் தாங்கள் இடதுபுறம் அல்லது வலதுபுறம் … Read more

07 பில்லியன் ரூபா செலவில் மேலும் பல வீதி அபிவிருத்திப்பணிகள்…

07 பில்லியன் ரூபா செலவில் மேலும் பல வீதி அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் காலநிலைக்கு சீரமைவான விவசாய நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மட்டக்களப்பில் இடம் பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 06 பில்லியன் ரூபா செலவில் வீதி அமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 07 பில்லியன் ரூபா செலவிலான வீதி அபிவிருத்திப்பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக … Read more

தென் மாகாணப் பாடசாலைகளுக்காக சிங்கள மற்றும் ஆரம்ப பிரிவுகளுக்கு ஆசிரியர் நியமனம்…

தென் மாகாணப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாற்குறைகளை நிவர்த்திப்பதற்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்யும் முதற் கட்டத்தின் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு தென் மாகாண ஆளுநர் தலைமையில் வெலிகம நகர சபை வளாகத்தில் (10) இடம்பெற்றது. இதன்போது தென் மாகாண பட்டதாரி ஆசிரியர் பரீட்சைக்குத் தோற்றி அதில் சித்தியடைந்த 8400 பட்டதாரிகளில் மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர் நியமனத்திற்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்ட 3230 பேரில் சிங்கள மற்றும் ஆரம்ப வகுப்புப் பாடங்களுக்காக 870 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. … Read more

மன்னாரில் பனம் பழத்தின் இளைய நுங்குத் திருவிழா !

மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மன்னார் அலுவலகம், வன்னி மாவட்ட மண் அறக்கட்டளை அமைப்பின் அனுசரணையுடன் பருவ கால நுங்குத் திருவிழா (10) மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தில் நடைபெற்றது. இதன்போது நுங்கு திருவிழாவில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மன்னார் மாவட்ட மக்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சுடும் வெயிலிலும் வெப்பத்திலும் நுங்குகளை உடனுக்குடன் வெட்டி அருந்தி தாகம் கலைத்தனர். இதுவரை செயற்கை மாற்றம் செய்யப்படாத மரங்களுள் ஒன்றான … Read more

11வது கினாமி மிஷிடகா நினைவு தடகளப் போட்டியில் இலங்கை வீரன் தங்கப் பதக்கம்

ஜப்பானில் நடைபெற்ற 11வது கினாமி மிஷிடகா நினைவு தடகளப் போட்டியில் இலங்கை வீரர் காலிங்க குமாரகே தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலேயே முதலிடம் பெற்று காலிங்க குமாரகே தங்கப் பதக்கம் வென்றுள்ளார். போட்டியை நிறைவு செய்ய காலிங்க குமாரகே 45.92 வினாடிகளை எடுத்துள்ளார். இதேவேளை, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட நதிஷா ராமநாயக்க நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் போட்டியை முடிக்க எடுத்துக்கொண்ட நேரம் 54.02 வினாடிகள் … Read more

ஆரம்பப் பரிவு மாணவர்களின் உணவு நிகழ்ச்சித் திட்டத்திற்காக ரூபா. 26 பில்லியன் நிதி ஒதுக்கீடு – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த

நாட்டில் ஆரம்பப்பரிவில் கல்வி பயிலும் சகல மாணவர்களையும் உள்ளடக்கிய 17 இலட்சம் மாணவர்களுக்காகவும் ரூபா 26 பில்லியன் ஒதுக்கப்பட்டு பாடசாலைகளில் பகலுணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடர்ந்தும் முன்நடாத்திச் செல்லும் பின்னணியில், சிலர் அரசியல் மேடைகளில் இருந்து அறிவிப்புக்களை விடுப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாட்டின் சகல பாடசாலைகளிலும் பகலுணவு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கும் அரசியல் வாதிகள் அது குறித்து, புள்ளிவிபர ஆய்வொன்றை செயன்முறை ரீதியாக மேற்கொண்டு இவ்வறிவித்தல்கள் விடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் விசேட செயலமர்வு

மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடுவதற்கான விசேட செயலமர்வு இன்று(13) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறித்த செயலமர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளுக்கான முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைமையில் மாத்தறை … Read more