ஜனாதிபதி நாளை இரண்டு மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டம் நாளை (01) காலை 10.00 மணிக்கு கொட்டகலை பொது மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன் ஆரம்பமாகவுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இதில் இணைந்துகொள்ளவுள்ளதுடன், பெருந்தோட்ட மக்கள் பெருந்திரளானோரின் பங்கேற்புடன் இந்த மே தினக் கூட்டமும் பேரணியும் இடம்பெறவுள்ளது. மலையக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸாகும். இதன் … Read more

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் தொடர்பில் எந்தப் பிரச்சனையும் இல்லை

பொய்யான கூற்றுகளுக்கு ஏமாறாதீர்கள் – மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அதனுடன் தொடர்புபட்டதாக மண்சரிவுகளோ அல்லது வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளோ இதுவரை பதிவாகவில்லை. மழையுடன் ஏற்படும் சிறிய நீரூற்றுக்களை காண்பித்து மக்களை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிப்பதாக மின்சக்தி மற்றும் வல சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத் தெரிவித்தார். உமா ஓயா பிரதேசத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் விரிசல்கள் மற்றும் … Read more

பணம் செகலுத்தினால் மாத்திரமே மே பேரணிக்கு இ.போ.ச பஸ்கள் விடுவிக்கப்படும் – அமைச்சர் பந்துல

பணம் செலுத்தினால் மாத்திரமே நாளைய மே மாதம் பேரணிகளுக்கு பஸ்கள் விடுவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், மே பேரணிக்கு பல்வேறு தரப்பினருக்கு பஸ்களை வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் … Read more

பங்களாதேஷில் நடைபெற்ற பிராந்திய செயலமர்வில் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஆற்றிய உரை..

“தெற்காசியாவிலிருந்து தொழிலாளர் புலம்பெயர்வோர் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள்” எனும் தலைப்பிலான பிராந்திய மாநாடு ஏப்ரல் 23ஆம் திகதி பங்களாதேஷில் இடம்பெற்றது. இம் மாநாட்டில், இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் மேற்பார்வைப் பணிப்பாளர் நாயகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் அவர்கள் விரிவுரை ஆற்றினார். தெற்காசிய சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பு மற்றும் அரசியல் உரையாடல் குறித்த ஆசிய நிகழ்ச்சித் திட்டமான கொன்ராட் அடினாவர் ஸ்டிஃப்டுங் (KAS) ஆகியவற்றுடன் இணைந்து பங்களாதேஷின் சர்வதேச … Read more

காங்கேசன்துறை துறைமுகத்தை ஆரம்பிக்கும் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

காங்கேசன்துறை துறைமுகத்தை உணர வைக்கும் வேலை திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அதன் சகல மதிப்பீடுகளுக்கான நிதி, மானியத்தை வழங்குவதற்கு இந்திய அரசாங்கத்தின் இணக்கப்பாட் டைத் தெரிவித்துள்ளதுடன், அதன் நிதி மானியத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், அதனுடன் சம்பந்தப்பட்டச ரன் ஒப்பந்தங்தந்களில் கையெழுத்திட முன் வருவதற்கும் நிதி, பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தல் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்திய கடன் நிதி உதவியின் கீழ் துறைமுக சீர்திருத்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக … Read more

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நாட்டில் மீண்டும் கறுவா விளைச்சலை விரிவுபடுத்தத் திட்டம்

“டில்மா சினமன்” வர்த்தக நாமத்தின் அறிமுக விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு விவசாயத்திற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடந்த காலங்களில் நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பயிராக இருந்த கறுவாச் செய்கையை பிரபலப்படுத்தும் வேலைத்திட்டம் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள் ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் (28) இடம்பெற்ற டில்மா சினமன் வர்த்தக நாமத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் … Read more

49 சுற்றுலாத் தலங்களை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட ஏற்பாடு – சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்டயனா கமகே.

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தலங்களை இனங்கண்டுள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவற்றை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். சுற்றுலாத்துறையில் இடம்பெறும் மோசடிகளையும், ஊழல்களையும் தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் தனியான குழுவொன்றை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் … Read more

யாழில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் குறைந்த வருமானம் பெறும் தெரிவு செய்யப்பட்ட 131652குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் வேலைத்திட்டம் கடந்த 20 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. யாழ் மாவட்ட செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கை பின்வருமாறு:

அயன மண்டங்களுக்கு இடையிலான ஒடுங்கு வலயம் நாட்டின் வானிலையைப் பாதித்து வருகின்றது.

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஏப்ரல் 30 ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 29 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. அயன மண்டங்களுக்கு இடையிலான ஒடுங்கு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக் கோளத்திலிருந்தும் வீசும் காற்றுகள் ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையைப் பாதித்து வருகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. … Read more

பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வெற்றிகரமாக செயல்பட முடியாததனால் அரசாங்க பல்கலைக்கழகங்களின் கட்டமைப்பில் பாரிய தொழில் முரண்பாடு  உருவாக்கப்பட்டுள்ளது. 2022 ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை இப்பிரச்சனைக்கு பொருத்தமான அரசாங்க பல்கலைக்கழக கட்டமைப்பில் தரம் 12 காக இம் முரண்பாட்டை தீர்ப்பதற்கு அவசியமான அமைச்சரவை தீர்மானம்,  அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை மற்றும் தொழிற்சங்கங்களுடனான, கலந்துரையாடலின் பின்னர்  2024.04.01 அன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  மேலும் பல்கலைக்கழக கட்டமைப்பில் கல்வி சாரா … Read more