அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நபரொருவருக்கு 13,138 ரூபா

நபரொருவருக்கான அத்தியவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு மாதத்திற்கு குறைந்த பட்ச செலவு Minimum Expenditure per person per month to fulfill the basic needs) 13,138 ரூபா என குடிசன மதிப்பீட்டு; புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 ஜூலை மாதத்திற்காக நபரொருவருக்கு மாதாந்த ஜீவனோபாயத்தையே இவ்வாறு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கிணங்க 2022 ஜூலை மாதத்தின் மதிப்பீட்டிற்கு இணங்க 4பேரைக் கொண்ட குடும்பத்திற்கு மாதமொன்றிற்கு குறைந்தது அத்தியவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 52,552ரூபா அவசியமாகும். அதேவேளை கொழும்பு … Read more

இரண்டாம் எலிசபெத் மகாராணியாரின் இறுதிக் கிரியை: 500 முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு

திங்கள்கிழமை (செப். 19) நடைபெறவுள்ள ,பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியாரின் இறுதிக் கிரியைகளில் 500க்கும் அதிகமான அரச தலைவர்கள் அடங்கலாக முக்கியத்தவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக விமானங்களின் மூலம் வருகை தருமாறு அரசத் தலைவர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பா கண்டத்தில் உள்ள பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்பெயின், நோர்வே, சுவீடன், டென்மார்க், மொனோக்கோ போன்ற நாடுகளின் அரச குடும்பத்தவர்களும் மகாராணியாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வார்கள். மகாராணியார் அரச தலைவராக பணியாற்றிய கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய … Read more

திங்கட்கிழமை பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் திங்கட்கிழமை (19) அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள பொது விடுமுறைக்கு அமைவாக பாடசாலைகளுக்கும் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மறைந்த பிரிட்டன் 2வது எலிசபெத் மகாராணி துக்க தினத்திற்கு அமைவாக அரசாங்கம் அரச நிறுவனங்களுக்கு விடுமுறையை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவிப்பை அமுல்படுத்துவதற்கு நிதியியல் உளவறிதல் பிரிவினால் நிருவாகத் தண்டப்பணங்களை விதித்தல்/ சேகரித்தல்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக்கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்களின் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டப்பணங்கள் நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய இணங்கியொழுகாமையின் தன்மை மற்றும் கடுமை என்பனவற்றினை பரிசீலனையிற்; கொண்டு விதித்துரைக்கப்படலாம். அதற்கமைய, பணம் தூயதாக்குதலுகெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனர் என்ற வகையில் நிதியியல் உளவறிதல் … Read more

கருவாடு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொள்ளும் பெண்களுக்கு கருவாடு பதனிடும் இயந்திரம் – கடற்றொழில் அமைச்சர்

கிளிநொச்சியில் நன்னீர் மீன் கருவாடு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் பெண்களின் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக கருவாடு பதனிடும் இயந்திரம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்றைய தினம் வழங்கப்பட்டது. இரணைமடுவில் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை தேசிய நீரியல் வளங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி நிலையத்திற்கு கள விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேற்படி சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என … Read more

தொழு நோய் சமூகத்தில் பரவும் அபாயம்..

தொழு நோய் சமூகத்தில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொழு நோய் தடுப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார். இந்த ஆண்டில் (2022) மாத்திரம் ஐநூற்று ஐம்பத்து ஏழு(557) நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 85பேர் அடையாளம்; காணப்பட்டுள்ளார்கள். அதில் 25 வீதமானவர்கள் சிறுவர்கள் என வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் அடையாளங்காணப்படாக தொழு நோயாளர்கள் தற்போது சமூகத்தில் இருக்கின்றனர் சுமார் ஐயாயிரம் நோயாளர்கள் இவ்வாறு மறைந்திருப்பதாகவும் தொழு … Read more

தேசிய சபை தொடர்பான பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகம் மற்றும் ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது

பாராளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள “தேசிய சபை” என்ற பெயரிலான பாராளுமன்ற குழு தொடர்பான பிரேரணை எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதிக்கான ஒழுங்குப் புத்தகம் மற்றும் ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தக் குழுவின் தலைவர் பதவி சபாநாயகருக்கு வழங்கப்படவிருப்பதுடன், இதன் உறுப்பினர்களான பிரதமர், பாராளுமன்ற சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியின் முதற்கோலாசான் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களால் தீர்மானிக்கப்பட்டவாறு இலங்கையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து ஒன்பதாவது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முப்பந்தைந்துக்கும் (35) … Read more

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்பயணத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் இலங்கையை கடல்சார் வர்த்தகத்தின் மையமாக மாற்றுவோம் – ஜனாதிபதி

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிசெய்து, உலகிற்குத் திறந்துவிடுவதன் மூலம் பலம்வாய்ந்த ஆசியாவை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்பயணத்தை உறுதிப்படுத்தி இலங்கையை கடல்சார் வர்த்தக கேந்திரமாக நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி … Read more

செப்டெம்பர் 23ஆம் திகதி இரண்டாவது எலிசபத் மகாராணியின் மறைவு குறித்த அனுதாபப் பிரேரணை

பாராளுமன்றத்தில் புதிதாக அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள “தேசிய சபை” என்ற பெயரில் அறியப்படும் பாராளுமன்றக் குழு தொடர்பான பிரேரணை எதிர்வரும் 20ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை விவாதிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (14) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. செப்டெம்பர் 09ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒழுங்குப் … Read more