இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களுக்கு மூக்கு வழி தடுப்பு மருந்து

கொரோனா தொற்றாளர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தக்கூடிய தடுப்பு மருந்துக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தக்கூடிய தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பு மருந்து சுமார் 4 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதில் பக்க விளைவுகளோ, விரும்பத்தகாத பிற விளைவுகளோ ஏற்படவில்லை. இந்த தடுப்பு மருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இந்த தடுப்பு … Read more

மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன்இ எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதுஇ பாடசாலை மாணவர்கள் மத்தியில் நுட்பமான வழிகளில் பல்வேறு போதைப் பொருட்கள் பரிமாற்றப்படுகின்றன. எனவே இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்;. பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் … Read more

அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன (Dinith Chinthaka Karunaratne) அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று (8) அரசாங்க தகவல் திணைக்களத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஸ பெல்பிட மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னணி பத்திரிக்கை ஆசிரிய  பீடத்தின் அங்கத்தவராகவும் பணியாற்றியதோடு, ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பொருளாதார நெருக்கடி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் தொடர் நிகழ்ச்சித்திட்டங்களை….

நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியின் பாரதூரமான நிலைமை தொடர்பில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெளிவுபடுத்த அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைமையின் கீழ் தொடர் நிகழ்ச்சித்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் நேற்றுக் (06) கூடியபோதே இவ்வாறு முன்மொழியப்பட்டது. இதில் கடந்த யூலை 27ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட “ 2022ஆம் ஆண்டின் அரையாண்டு … Read more

37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர். பதியேற்ற புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு: 01. ஜகத் புஷ்பகுமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்02. ரஞ்சித் சியபலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர்03. லசந்த அழகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்04. திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்05. கனக ஹேரத் – தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர்06. ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் … Read more

“பாராளுமன்ற சார சங்ஹிதா” புலமை இலக்கிய நூலின் இலத்திரனியல் பிரதி பாராளுமன்ற இணையத்தளத்தில்

பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் “பாராளுமன்ற சார சங்ஹிதா” புலமை இலக்கிய நூலின் இலத்திரனியல் பிரதி பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. https://www.parliament.lk/ta/secretariat/academic-journal எனும் இணைப்பின் ஊடாக “பாராளுமன்ற சார சங்ஹிதா” புலமை இலக்கிய நூலின் முதலாவது மற்றும் இரண்டாவது தொகுப்பை பார்வையிட முடியும். சட்டவாக்க செயற்பாடுகள், நிலைபேறான அபிவிருத்தி, தேர்தல் முறைமை மற்றும் அதன் திருத்தங்கள், பாராளுமன்ற அறிக்கையிடலும் வெகுஜன ஊடகமும், பொதுமக்கள் தொடர்பு மற்றும் இலங்கை பெண்கள் அரசியலில் புதிய போக்கு ஆகிய … Read more