வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது மற்றும் ஒரு வருட காலத்திற்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை வழங்குவது தொடர்பான அறிவித்தலொன்றை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022 ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் 2022 ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2022 ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் 2022 … Read more

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸூடன் சந்திப்பு

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 09ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். தூதுவர் சுங்கை அன்புடன் வரவேற்ற அமைச்சர் பீரிஸ், இலங்கையிலான அவரது பதவிக் காலத்தின் போது தூதுவருடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்தார். அமெரிக்காவை ஒரு முக்கிய பங்காளியாக இலங்கை கருதுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் … Read more

கச்சத்தீவு திருவிழா நாளை ஆரம்பம்

கச்சத்தீவு திருவிழா நாளை (11) ஆரம்பம் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இந்திய பக்தர்கள் 100 பேர் கலந்து கொள்யவுள்ளனர். இந்திய-இலங்கை இடையே கடல் எல்லையான கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் இந்திய-இலங்கை பக்தர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பது வழக்கம். இந்திய-இலங்கை பக்தர்களிடையே இணக்கமான உறவை மேம்படுத்த பாரம்பரியமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலால் இந்த திருவிழாவில் பக்தர்கள் அதிகமாக … Read more

பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு  பிணை

இந்தியாவின் முன்னள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு  பிணையில் செல்ல இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதித்துள்ளது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் தனக்கு பிணை வழங்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த வந்த நீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை வழங்குவதில் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்தது. இதற்கு இந்திய  அரசு வழக்கறிஞர் சிபிஐ … Read more

வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 'மித்துறு பியஸ' மூலம் ஆலோசனை சேவை   

வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பெண்களுக்கு சுகாதார அமைச்சுக்கு உட்பட்ட  ‘மித்துறு பியஸ’ ஆலோசனை சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இலவசமாக சேவை வழங்கப்படும். சேவை நாடுபவர்களின் இரகசியத் தன்மையைப் பாதுகாப்பதுடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட உயரிய சேவை வழங்கப்படுமென பொதுச் சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேத்ராஞ்சலி மாபிட்டிகம தெரிவித்தார். அரச வைத்தியசாலைகளில் வாரநாட்களில் காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரை இந்தச் சேவை வழங்கப்படும். சில நிலையங்களில் வார … Read more

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்துக்கு அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் அனுமதி

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்துக்கு அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்துக்கு அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் அனுமதி தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நேற்று (08) அனுமதி வழங்கப்பட்டது.   இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் … Read more

கொழும்பில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் எட்டு பெண்கள், எட்டு நிமிடங்கள் என்னும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வுகள் நேற்று முன்தினம் (08) தினம் நடைபெற்றன. இதன்போது முன்னுதாரணமாக திகழும் வைத்தியர் பபாஸ்ரீ ஜினிக்கே, சஞ்சினி முனவீர, சௌந்தரி டேவிட் டொட்றிக்கே, றோயல் ரெமன்ட், குமுது பிரியங்கா, சிரோமல் கூரே, அனோக்கா அபேரத்தின மற்றும் புலணி ரணசிங்க ஆகிய எட்டு பெண்மணிகளால் நாட்டை தலைமைத்துவம் செய்யும் பொறுப்பு கிடைக்கப்பெற்றால் தாம் ஆற்றும் பணிகள் குறித்து எட்டு நிமிடங்கள் … Read more

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய உல்லாச படகுச் சேவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்துவைப்பு

யாழ் மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் முகமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் உல்லாசத்துறை ஆடம்பர படகு சேவையின் வெள்ளோட்ட நிகழ்வு இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ் குடாநாட்டின் சுற்றுலா பயணிகளின் எண்ணங்களை நிறைவேற்ற “விக்டோரியா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்” (Victoria international private Limited) மற்றும் “லியானா கடல் உணவு” தனியார் கூட்டு நிறுவனம் ஆகியன இணைந்து (Liyana sea food) முன்னெடுத்துள்ள கடல் சுற்றுலா படகான “விக்லியா” (“VICLIYA”) படகின் … Read more

இரத்தினபுரி பிரதேச சபையின் நூலகத்தின் e-library   சேவை ஆரம்பித்து வைப்பு

இரத்தினபுரி பிரதேச சபையின் நூலகத்தின் நு-டுiடிசயசல  சேவை நேற்று(8) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவினால் ஆரம்பித்த வைக்கப்பட்டது. https://library.macroit.lk  என்ற இணையத்தளத்தில் பிறவேசித்து நூல்களை வாசிக்க முடியும். இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னால் அமைச்சர் ரஞ்ஜித் பண்டார, இரத்தினபுரி பிரதேச சபை தலைவர் சுதத் திசாநாயக்க, மாகாண பிரதான செயலாளர் சுனில் ஜயலத் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.