ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் – பொலிஸ் குழுக்கள் விசாரணை

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவரின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுவினர் இன்று காலை கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பல பொலிஸ் … Read more

காவத்தமுனை வடிகான் புனரமைப்பு – தவிசாளர் ஏ.எம்.நௌபர் நேரில் விஜயம்

  கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட காகித நகர் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஹிஸ்புல்லாஹ் நான்காம் குறுக்கு வீதி வடிகான் அமைப்பு வேலைத்திட்ட பணிகள் மீண்டும் அரம்பிக்கப்பட்டுள்ளன.உலக வங்கியின் 4.17 மில்லியன் ரூபா கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையினால் காவத்தமுனை ஹிஸ்புல்லாஹ் நான்காம் குறுக்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ள 176.7 மீட்டர் நீளமுடைய இவ்வடிகான் அமைப்பு வேலைத்திட்டமானது கேள்வி மனுவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும் இரு ஒப்பந்தக்காரர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு … Read more

2022.02.11 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கியினால் 2022.02.11 அன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:  

உலகம் முழுவதும் கொரோனா: 41.20 கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41.20 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221 நாடுகளில் பரவியுள்ள நிலையில், மக்களை தொடர்ந்து பாதித்து வருகின்றது. இதனால் உலக நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்துகின்றன. ஆனாலும், இந்த வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து மக்களை பாதித்து வருகிறது. இதற்கமைய, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 20 இலட்சத்து … Read more

“மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை அல்லது அளவு ஒரு பொருட்டல்ல…” ஜனாதிபதி தெரிவிப்பு

பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை மற்றும் அளவு என்பன ஒரு பொருட்டல்ல என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் அதே சமயம், நாட்டின் அபிவிருத்திப் பணிகளும் முன்னெக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, சுமார் இரண்டு வருடக் காலமாக நாட்டை மூடி வைத்ததால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, தற்போது படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது என்றும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார். “ஜனாதிபதி மீது … Read more

தேசிய பல்கலைக்கழகமாக வவுனியா வளாகம் மாற்றம்… “சமூக மாற்றத்தை எதிர்கொள்ளும் புத்திஜீவிகளை கல்வியினூடாக உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள்…”

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், “வவுனியா பல்கலைக்கழகம்” என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தலைமையில் இன்று (11) இடம்பெற்றது. இதன்படி, இந்நாட்டின் 17ஆவது அரச பல்கலைக்கழகமாக “வவுனியா பல்கலைக்கழகம்” வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம், 1997ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மொழி பாடநெறி:சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களின் மொழித்திறன் ஆற்றலை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்களில் தமிழ்மொழி மூலம் கடமை புரியும் உத்தியோகத்தர்களின் சிங்கள மொழித்திறன் ஆற்றலை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் சிங்களப்பயிற்சியைப் பூர்த்தி செய்த கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி அந் நூர் மண்டபத்தில் இடம்பெற்றது. மொழித்திணைக்களத்தின் போதனாசிரியர் எம்.எம்.செயினுதீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அதிதிகளாக … Read more

அனுராதபுரம் சல்காதுவ மைதானத்தில் (09) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தின் முதலாவது கூட்டத்தின்போது கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை

அனுராதபுரம் சல்காதுவ மைதானத்தில் (09) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தின் முதலாவது கூட்டத்தின்போது கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை இன்று அனுராதபுரத்தில் இருந்து புதிய பயணத்தை ஆரம்பிக்கின்றோம். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக ஞாபகம். போரில் வெற்றி பெற்ற பின்னர் 2010ஆம் ஆண்டு இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை அனுராதபுரத்தில் இருந்து ஆரம்பித்தோம். அதேபோன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களும் அனுராதபுரத்தில் இருந்து தனது ஜனாதிபதி … Read more

குவைத் நிதியத்தில் இருந்து மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கான கடன் ஒப்பந்தம் கொழும்பில் வைத்து கைச்சாத்து

அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் நெதல் ஏ. அல்-ஒலாயன் தலைமையிலான குழுவினர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கும் அவற்றைச் சித்தப்படுத்துவதற்குமான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தனர். கிழக்கு, தெற்காசிய மற்றும் பசுபிக் நாடுகளுக்கான நடவடிக்கைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் யூசுப் அல்-படரை உள்ளடக்கிய விஜயம் செய்திருந்த குழுவினர், இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இலங்கையின் கல்வி அமைச்சர் … Read more