டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி! மத்திய வங்கியின் தகவல்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும் போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(03.05.2023) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய  நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 327.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 313.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி இந்தநிலையில் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை, … Read more

மூடப்படும் நான்கு அரச நிறுவனங்கள்: அமைச்சர் வெளியிட்டுள்ள காரணம்

நிதி பற்றாக்குறை காரணமாக நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (03.05.2023) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, பராமரிப்பதற்கு நிதிப் பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக, மக நெகும மற்றும் அதனுடன் இணைந்த நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை  மக நெகும வீதி கட்டுமான உபகரண நிறுவனம், 2004ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது … Read more

இலங்கை வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கை சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் பையில் பெறுமதியான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு இலட்சம் இலங்கை ரூபாய், 100 அமெரிக்க டொலர்கள் மற்றும் 200 அவுஸ்திரேலிய டொலர்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. காலி சமனல மைதானத்திற்கு அருகில் வைத்து நால்வர் பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் தனது பையை தரையில் வைத்துவிட்டு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொள்ளைக் … Read more

பெலாரஸில் உயிரிழந்த இலங்கை மருத்துவ மாணவனின் மரணத்தில் மர்மம் – விசாரணைகள் ஆரம்பம்

பெலாரஸில் பல்கலைகழகத்தில் இலங்கை மருத்துவ மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Grodno State Medical பல்கலைகழகத்தில் கல்வி கற்ற 24 வயதுடைய மருத்துவ மாணவரான திஷான் குலரத்ன என்ற மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டியில் உள்ள பிரதான ஆண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்ற இந்த மாணவன் உயிரியல் பிரிவில் சித்தியடைந்து வைத்தியராக வேண்டும் என்ற நோக்கத்தில் பெலாரஸில் உள்ள Grodno பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளார். இறக்கும் போது … Read more

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட குடு அஞ்சு தொடர்பில் வெளிவரும் தகவல்

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரான ரத்மலானை குடு அஞ்சு தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரான்ஸில் வைன் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் டுபாயில் தண்ணீர் போத்தல்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உட்பட பல வர்த்தகங்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குடு அஞ்சு பிரான்சில் அகதியாக வாழ்ந்து வருவதாகவும், அதனால் இந்த தொழிற்சாலை வேறு ஒருவரின் பெயரில் நடத்தப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் மூலம் மேலும் தெரியவந்துள்ளது. டுபாயில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலை, ஆரோக்கிய மையம், … Read more

உக்ரைன் மீதான போர் தந்திரோபாயங்களில் மாற்றம்: ரஷ்யாவின் பயங்கர திட்டம் அம்பலம்

உக்ரைன் மீதான ரஷ்ய போர் ஓராண்டை கடந்து இன்று 433 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில் உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதல் தந்திரோபாயங்களை ரஷ்யா மாற்றி உள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா சமீபத்தில் ஏவிய 18 ஏவுகணைகளில் 15-ஐ உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமாதான பேச்சுவார்த்தை இந்நிலையில், ரஷ்யாவின் போர் தந்திரோபாயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக … Read more

டெங்கு மற்றும் இரத்த பரிசோதனைகளில் மேற்கொள்ளப்பட்ட மோசடி அம்பலம்!

டெங்கு பரிசோதனை மற்றும் முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனை ஆகிய இரண்டிற்கும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 12 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 நிறுவனங்களுக்கு நோயாளிகளிடம் இருந்து சம்பந்தப்பட்ட சோதனைகளுக்கு கட்டணம் வசூலித்ததற்காக 9.4 மில்லியன் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபையின் (CAA) மூத்த புலனாய்வு அதிகாரி ஏ.யு.ரஞ்சன் தெரிவித்துள்ளார்.  நீதிமன்ற உத்தரவு நுகேகொட, கல்கிசை, மாளிகாகந்த மற்றும் கொழும்பு கோட்டை … Read more

விரைவில் கியூ.ஆர் முறை இடைநிறுத்தப்படும்! வெளியான அறிவிப்பு

QR குறியீட்டின் ஊடாக எரிபொருளை  வழங்கும் முறை விரைவில் இடைநிறுத்தப்படும் என ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  எரிவாயு விலை குறைப்பு மேலும், எரிவாயுவின் விலையும் குறையும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  இதேவேளை, லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை நாளை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு  வரும் வகையில் … Read more

சர்வஜன வாக்கெடுப்பும் தமிழரும்

Courtesy: ச.வி.கிருபாகரன், பிரான்ஸ் ஜனநாயகத்தின் அடிப்படை விதிமுறைகளில் ஒன்றானது தேர்தலும், வாக்களிப்பும். இவை இரண்டும் ஜனநாயக நாடுகளென கூறப்படும் மேற்கு நாடுகளிலும், வேறு சில ஆசிய, ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளிலும் நடை முறைபடுத்தப்படுகின்றன. தேர்தலில் வாக்களிக்கும் முறைகளும், நாடு நிலைமைகளிற்கு ஏற்ப உலகளவிய ரீதியில் வேறுபடும். தேர்தலுக்கும் வாக்களிப்பிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், தேர்தல் என்பது பலரின் கருத்தைப் பெறுவதற்கான ஒரு முறை சாரா செயல்முறையாகும். வேறுபட்ட விதி முறை மறுபுறம், வாக்களிப்பது என்பது … Read more

இலங்கையில் பரவும் புதிய வைரஸ் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

சமகாலத்தில் பலாங்கொட பிரதேசத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பத்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் என சுகாதாரத் துறை தெரிவித்தள்ளது. ஒருவருக்கு காய்ச்சல், போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அரசாங்க மருத்துவமனை அல்லது அரச பதிவு பெற்ற மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுமாறு சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல் அறிகுறிகளுடன் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணியுமாறு … Read more