கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை தங்கம்

டுபாயில் இருந்து தங்கத்துடன் இலங்கை வந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் நேற்று அவரை கைது செய்துள்ளதாக சுங்கப் பேச்சாளர் பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார். கொழும்பில் வசிக்கும் 35 வயதான வர்த்தகரான இவர் அடிக்கடி விமானங்களில் சென்று வியாபாரம் செய்து வருவதாக தெரியவந்துள்ளது. சூட்கேஸ்களில் சுற்றப்பட்டிருந்த தங்கம் இவர் டுபாயில் இருந்து EK-650 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் நேற்று … Read more

இலங்கையிலிருந்து டொலர்களை சம்பாதிப்போருக்கு கிடைக்கவுள்ள விசேட அனுமதி

வெளிநாட்டை தளமாகக் கொண்ட வாடிக்கையாளர்களுடனான வணிகங்கள் மூலம் டொலர்களை கொடுப்பனவாக பெறும் இலங்கையையர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிகளை வழங்குமாறு கோரி புதிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார விடுத்துள்ளார். மேலதிக விபரங்களுக்கான தொடர்பு “வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடனான நேரடி ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையிலிருந்து சேவைகளை ஏற்றுமதி செய்யும் தனிநபர்களை சேர்த்துக்கொள்ளவும் மற்றும் மின்சார கார் அனுமதிக்கு தகுதி பெறுவதற்கு டொலர்களில் பணம் பெறவும் கோரும் அமைச்சரவை … Read more

கனடாவுடன் இராஜதந்திர போரில் இறங்கிய இலங்கை-செய்திகளின் தொகுப்பு

யுத்த வெற்றியின் 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீண்டும் கனடாவுடனான இராஜதந்திரப் போரில் இறங்கியுள்ளது. நேற்றைய தினம் கனடா பிரதமர், 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தமிழர் இனப்படுகொலை நினைவு தினம் மற்றும் யுத்தம் நிறைவடைந்த தினத்தை நினைவுகூரும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, உள்நாட்டில் நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு உதவாது எனக் கருதும் கனேடிய பிரதமரின் அறிக்கையை இலங்கை கண்டிப்பதாக வெளிவிவகார … Read more

ஈழத் தமிழர்களுக்கு பொதுவாக்கெடுப்பு: தீர்மானத்தை முன்வைத்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்

ஈழத் தமிழர்களுக்கு ஜனநாயக ரீதியாக ‘பிரதிநிதித்துவம்’ மற்றும் ‘நீடித்த அமைதியான அரசியல் தீர்வுக்கு’ பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை அனுப்ப வலியுறுத்தி வரும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டெபோரா ரோஸ் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்சன் ஆகியோரினால் (18.05.2023) அன்று இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆயுதப் போரின் இறுதி வாரங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் பலியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. … Read more

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா…!

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக முன்னாள் இராணுவ தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினருடனான கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதித் தேர்தல் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தம்மை போட்டியிடுமாறு பலர் கோரியுள்ளனர். அதனடிப்படையில் தேவை ஏற்பட்டால் மற்றும் வாய்ப்பு … Read more

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

எவ்விதமான முன் அறிவிப்பும் இன்றி ஒருநாள் சேவைப் பணிபுறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.  நேற்று (18.05.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் அதிகளவு புகை வெளியேற்றம் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் இருந்து, அதிகளவு புகை வெளியேறுவது தொடர்பில், மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த சோதனை நடவடிக்கைகள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நடவடிக்கை … Read more

சிங்கப்பூரில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்! விசாரணையில் வெளியான தகவல்

சிங்கப்பூரில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கை பெண் ஒருவர் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். தங்கொடுவ – மொட்டேமுல்ல பகுதியைச் சேர்ந்த 41 வயதான நதிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் சிங்கப்பூருக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற நிலையில், அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர்களிடம் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெளியான காணொளி இது குறித்து உயிரிழந்த பெண் உரிய தரப்பினரிடம் முறைப்பாடு செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் … Read more

சகோதரர்களுக்கு இடையில் மோதல் – கொழும்பின் புறநகரில் துப்பாக்கிச் சூடு

கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தை பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடவத்தை, சூரியபாலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் நின்றிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த இடத்திற்கு வந்த மூவர் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த நபர்கள் காயமடைந்த நபரின் மனைவியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் … Read more

உயர் மட்ட பாதுகாப்பில் இலங்கையின் விமான சேவை

இலங்கையில் விமானப் பாதுகாப்பை மிக உயர்ந்த மட்டத்தில் பேணுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பினால் நடத்தப்பட்ட விமானப் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கணக்காய்வின் மூலம் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையைப் போலவே இலங்கையின் வான்வெளியும் மிகவும் பாதுகாப்பானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இந்த சர்வதேச கணக்காய்வு … Read more

பிரதமர் அலுவலகத்திற்கு தவறான தகவல்: வவுனியா பிரதேச செயலாளருக்கு எதிராக முறைப்பாடு

பிரதமர் செயலகத்திற்கு தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளதால் தனது நடமாடும் சுதந்திரம் உட்பட தனது உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக செயற்பாட்டாளர் ஒருவர் வவுனியா பிரதேச செயலாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் காணியற்ற அரச ஊழியர்களுக்கு காணி வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களில் பலர் அதற்கு தகுதியற்றவர்கள் என தெரிவித்து பிரதேச செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் சமூக … Read more