மாத்தறையில் மாபெரும் மக்கள் போராட்டம் முன்னெடுப்பு (Photos)

மாத்தறையில் அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெருந்திரளான மக்கள் கைகளில் தீப்பந்தம் மற்றும் தேசிய கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் இவ்வாறு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். Source link

சஜித்தின் கோரிக்கையை புறக்கணித்த தினேஸ்! நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்ற எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கோரிக்கையை அரசாங்க கட்சி ஏற்றுக்கொள்ளாத நிலையில் நாடாளுமன்ற அமர்வு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது கருத்துக்களை வெளியிட்டனர். இந்தநிலையில் பிற்பகல் 2.30க்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்திருந்தார். இதனை கருத்திற்கொண்டு பிற்பகல் 2.10 அளவில் நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைப்பதாக அவையின் தலைவர் தினேஸ் … Read more

வெளிநாடுகளில் உள்ள சில இலங்கைத் தூதரகங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் சில  தற்காலிகமாக மூடப்படுகின்றன. அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.  இதன்படி, நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் ஈராக்கின் பாக்தாத் ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்களையும், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணை தூதரகத்தையும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   Source link

மோசமடையும் இலங்கை நிலைமை! வெகுவிரைவில் வெடிக்கப்போகும் ஆயுத மோதல் – பேராசிரியர் எச்சரிக்கை

இலங்கையில் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படாவிட்டால் சிங்கள மக்களுக்கு இடையில் ஒரு சிவில் யுத்தம் வருவதற்கான ஒரு சாத்தியம் இருக்கும் என அமெரிக்காவின் சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் எச்சரிக்கை விடுத்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி போன்றவர்கள் இதேபோன்று சிந்திப்பார்களாக இருந்தால் அவர்கள் மக்களின் போராட்டத்திற்கு பயந்து அரசியலில் இருந்து விலகப் போவதில்லை. பதவியை விட்டு … Read more

ஜனாதிபதிக்கு சென்றது மற்றுமொரு இராஜினாமா கடிதம்! பதவி விலகும் அரச முக்கியஸ்தர்

திறைசேரி செயலாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக எஸ்.ஆர்.ஆடிகல அறிவித்துள்ளார். மேலும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை நேற்றைய தினம் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி இன்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்தை சேர்ந்த பலரும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வருகின்றனர். இதேவேளை நாட்டில் பொது மக்கள் தாம் … Read more

நாடாளுமன்ற சுற்றுவட்டாரத்தில் வெடித்தது போராட்டம் (Live)

நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நாடாளுமன்றத்திற்கு எதிரே உள்ள ஒரு பாதை மூடப்பட்டுள்ளது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன. ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். Source link

குடும்பத்துடன் ஹெலிகொப்டர் மூலம் சென்ற அரசியல்வாதி…!

 கேகாலை நிதஹாஸ் மாவத்தையில் இன்று காலை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கேகாலை சுதந்திர மாவத்தையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடிக்கொண்டிருந்த போது தனியார் விமான சேவைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று கேகாலை மாநகர சபை மைதானத்தில் தரையிறங்கியுள்ளது. கேகாலையைச் சேர்ந்த பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரும் அவரது குடும்பத்தினரும் ஹெலிகொப்டரில் அப்பகுதியை விட்டு வெளியேறியதாக கேகாலை பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறித்த உலங்குவானூர்தி புறப்பட்டு கண்டி நோக்கி பயணித்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். கேகாலை மாவட்ட … Read more

குற்றவாளிகள் தப்பிக்க முன்னர் விமான நிலையத்தை உடன் மூடுங்கள்! பகிரங்க கோரிக்கை

தற்போதைய சூழ்நிலையில் குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் விமான நிலையத்தை மூட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். Source link

போராட்டத்தில் ஈடுபடுவோர் எதிர்காலத்திலும் கைது செய்யப்படுவர்! பொலிஸார் விசேட அறிவிப்பு

வன்முறை மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் குழுக்கள் கைது செய்யப்படுவது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. போராட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபட்ட  பலர்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலர் காணொளி ஆதாரங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எதிர்வரும் காலங்களிலும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அந்த பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைதியான முறையில் எவரேனும் போராட்டம் நடத்தலாம், எனினும் அது கலவரம் மற்றும் வன்முறையாக மாறினால்   கலவரம் மற்றும் வன்முறைச் … Read more

கொழும்பிலுள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் டொலர் ஒன்றின் பெறுமதி 410 ரூபா

கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள சூதாட்ட விடுதியொன்று ஊரடங்கு காலப்பகுதியிலும் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைய நாட்களில் மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் குறித்த சூதாட்ட விடுதி தொடர்ந்தும் இயங்கியுள்ளது. வெளியே பொருத்தப்பட்டுள்ள விளக்குகளை அணைத்துவிட்டு, சூதாட்ட விடுதியை வெற்றிக்காக நடத்தி சென்றுள்ளார்கள் என தெரியவந்துள்ளது. எனினும், அப்போது அங்கு அதிகளவான மக்கள் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. அன்றைய தினங்களில் … Read more