இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கம்!

இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது டுவிட்டர், வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயற்படவில்லை.     அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இன்றும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பிலான புகைப்படங்கள், காணொளிகளை பொது மக்கள் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் வெளியிட்டு அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. Source link

நாட்டில் நாளைய தினம் இடம்பெறவுள்ள மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

இலங்கையில் நாளைய தினம் மின் துண்டிப்பை மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. அந்தவகையில், A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலய பகுதிகளுக்குக் காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 5.30 மணிவரை 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும், மாலை 5.30 மணிமுதல் இரவு 11.30 மணி வரை 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும். மேலும், P,Q,R,S,T,U,V, W ஆகிய வலய பகுதிகளுக்குக் காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை 2 … Read more

கொழும்பு உட்பட பல பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தையும் மீறி பாரிய மக்கள் போராட்டம்

கொழும்பில் ஊரடங்கு சட்டத்தையும் மீறி மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஹோமாகம, மஹரகம, யக்கல, குருணால் உட்பட பல பகுதிகளில் ஒன்று கூடியுள்ள பெருமளவு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர். மக்களின் எழுச்சிப் போராட்டங்களை தடுக்கும் வகையில் அவசர கால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இன்று முதல் திங்கட்கிழமை காலை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொருட்படுத்தாத மக்கள் தமது எதிர்ப்பினை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.  இதேவேளை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் … Read more

ஊரடங்கு காலத்தில் விமான பயணம் செய்பவர்களுக்கான அறிவிப்பு

இலங்கையிலிருந்து வெளிநாடு போகும் அனைத்து பயணிகளும் ஊரடங்குச் சட்ட காலத்தில் தங்களின் விமான பயண ஆவணத்தைக் காண்பித்து விமான நிலையத்துக்குப் பயணிக்கலாம் என சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தலைவர் அறிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் ஊரடங்குச் சட்டத்தின் போது தங்கள் வீடுகளுக்குச் செல்ல போர்டிங் பாஸை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனாலேயே விமான … Read more

மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் அதிபர்களுக்குக் கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. ஏப்ரல் 04 முதல் 08 வரையிலான காலக்கட்டத்தில் தேர்வுகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே மாணவர்களைப் பாடசாலைக்கு அழைக்க அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  Source link

உயர் தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவித்தல்

2022 கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை எதிர்வரும் ஒக்டோபரில் நடத்துவதற்கும் டிசம்பரில் இடம்பெற வேண்டிய 2022 ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகளை 2023 ஜனவரியில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன் தெரிவித்தார். கடந்த இரு ஆண்டுகளாக நிலவிய கொரோனா அச்சுறுத்தலால் தேசிய பரீட்சைகளை குறிப்பிட்ட காலப்பகுதியில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக சகல பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இதற்கமைய, 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சைகள் … Read more

பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது

2022 இல் அரச மற்றும் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெற வேண்டுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதமும், கல்விப் பொதுதராதர சாதாரணத்தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு முற்பகுதியிலும் இடம்பெறுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.  Source link

அடுத்தடுத்து நிறுத்தப்படும் விமானங்கள்! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் திடீர் முடிவு

எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி முதல் சில விமானங்கள் சேவையிலிருந்து நிறுப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் திடீரென முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதன்படி கொழும்புக்கும் பஹ்ரைனுக்கும் இடையேயான UL201 மற்றும் UL202 விமானங்களை நிறுத்த முடிவு எட்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்புக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் கடந்த 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  தொடர்புடைய செய்தி….. ரஷ்யாவிற்கான விமான சேவை … Read more

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை (Photos)

இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள், எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும், எரிபொருள் நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் வரிசைகளில் மக்கள் நிற்பதுடன், இதன்போது மோதல்களும் பதிவாகியிருந்தன. சில போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன, இதற்கு பதிலடியாக போராட்டக்காரர்களை … Read more

பொறுத்தது போதும்! பிரபல கிரிக்கெட் வீரரின் பதிவு

“பொறுத்தது போதும்” என பிரபல கிரிக்கெட் வீரரும், புகழ்பூத்த சர்வதேச கிரிக்கெட் மத்தியஸ்தர் ரொசான் மஹானாம தெரிவித்துள்ளார். சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தகுதியற்ற அதிகார பேராசை கொண்ட ஆட்சியாளர்களினால் இந்த நாடு பாரியளவு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது என்பதனை கனத்த இதயத்துடன் தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார். தேசப்பற்றாளர்கள் என பிரச்சாரம் செய்து வரும் அரசியல் தலைவர்களை விடவும் தாம் இந்த நாட்டை நேசிப்பதாகவும் பற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தருணத்தில், … Read more