கடும் அச்சத்தில் தென்னிலங்கை அமைச்சர்கள் – தம்மை காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக மக்கள் கொந்தளித்துள்ள நிலையில் தமது வீடுகளும் தாக்கப்படும் என அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் உடனடியாக ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறும் இல்லை என்றால் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தின் போது தங்கள் வீடுகளும் சுற்றிவளைக்கப்படும் என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனாதிபதி தலைமையில் அலரிமாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஆளுங்கட்சியின் விசேட குழு கூட்டத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு … Read more

மேல் மாகாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது!

மேல் மாகாணம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை ஆறு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. கொழும்பிலும் நேற்று இரவு போராட்டங்கள் முன்னெடுப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை ஆறு மணியுடன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.   Source link

பொருளாதார நெருக்கடியால் கொந்தளிக்கும் மக்கள்! – பதவியை இராஜினாமா செய்த பிரபலம்

 பொருளாதார நெருக்கடி தொடர்பில் மக்களின் கோபம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் (MB) உறுப்பினர் சமந்த குமாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சமந்த குமாரசிங்க நாட்டின் மிகப் பெரிய மூலிகை அழகுசாதனப் பொருட்கள் நிறுவனங்களில் … Read more

கோட்டாபய அரசின் பிழையான முடிவு! – அயல் நாட்டின் கடுமையான நிலைப்பாடு (Video)

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி என்பது தற்போது ஏற்பட்ட ஒன்று அல்லவென பிரித்தானியாவில் இருக்கும் பொருளாதார நிபுணர் பாலகிருண்ன தெரிவித்துள்ளார். கோவிட் பரவல் காலப்பகுதியில் இருந்தோ, உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாகவோ இலங்யைில் பொருளாதார நெருக்கடி ஏற்படவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஆரம்ப காலங்களில் இருந்தே வந்துள்ளது. விடுதலைப் புலிகளுடனான போரில் அவர்களை அழிப்பதற்காக 22 நாடுகளிடம் இருந்து … Read more

மோசமடையும் இலங்கையின் நிலை! – சஜித் விசேட அறிவிப்பு

மிரிஹானவில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்கும் நபர்களுக்கு ஆதரவாக 600 சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி என்ற வகையில், தங்கள் வாழ்க்கையை கடுமையாகப் பாதித்த அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு ] ஐக்கிய மக்கள் சக்தி துணை நிற்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதார நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை … Read more

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்

இலங்கையில் பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட்ளளது. இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில்  அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  இது தொடர்பான விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்டுள்ளது.  2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் பொது அவசர நிலையை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். Source link

நாளைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு(Photo)

இலங்கை மின்சார சபையினால் நாளைய தினம் (02) மின்துண்டிப்பை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட கோாிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. அதன்படி நாளைய தினம் 8 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களுக்கும் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின்துண்டிப்பு தொடர்பான அட்டவணை வருமாறு, Source link

இன்றும் தொடர்கிறது மக்கள் போராட்டம்! பேருவளையில் குழுமிய மக்கள்

அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது  மேலும்  தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இன்றும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பேருவளை நகரிலும் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.  எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சார தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.   Source link

ஆளுங்கட்சி எம்பியை நோக்கி முட்டை வீச்சு தாக்குதல்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த வாகனம் மீது இன்று முட்டை வீச்சு தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.  வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த வேளை இவ்வாறு  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவர் ஆளுங்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. Source link

ராஜபக்ஷர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொதுமக்களின் சீற்றம் அதிகரிக்கிறது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக சமூக ஊடகங்களில் மக்கள் சீற்றம் வேகமாக அதிகரித்து வருகிறது. மின்வெட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு தொடர்வதை அடுத்து, சமூக ஊடகங்களில் ராஜபக்சக்களுக்கு எதிரான கோபம் அதிகரித்து வருகிறது. சமூக ஊடக பயனர்கள், பல முக்கிய பிரமுகர்கள் உட்பட, தற்போதைய விடயங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் ராஜபக்ஷ நிர்வாகத்தை வெளிப்படையாக விமர்சித்துள்ளனர். இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக ‘வெள்ளை துணி’ … Read more