இன்றைய ராசி பலன் | 19/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் 2022 Source link

`The Kashmir Files' – “90-களில் நான் முதல்வராக இருந்தேனா?" – விமர்சனங்களுக்கு உமர் அப்துல்லா பதில்

பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்.’ இந்தத் திரைப்படம், 1990-களின் காலகட்டத்தில் காஷ்மீரில் பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் காஷ்மீரைவிட்டு வெளியேறி, அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த சம்பவங்களையும் அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. படக்குழுவினருடன் மோடி `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்த பிரதமர் மோடி, இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார். இந்தப் படத்தை வெகுவாகப் … Read more

“எனக்குக் கெடு விதிக்க அவர் என்ன பிரம்மாவா?" – அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி… தொடரும் வார்த்தை போர்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும், தி.மு.க – வின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் வார்த்தை யுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “355 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கும் பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனத்துக்கு முறைகேடாக 4,472 கோடி ரூபாய் மதிப்பில் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார். செந்தில் பாலாஜி ட்வீட் இதற்குப் பதிலளிக்கும் விதமாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “2019-ல் அ.தி.மு.க ஆட்சியில் தான் … Read more

“மாணவிகளுக்கு ரூ.1,000 திட்டம் வரவேற்கத்தக்கது தான், ஆனால்..!" – தமிழக பட்ஜெட் குறித்து ராமதாஸ்

தமிழக சட்டப்பேரவையில், 2022 – 2023 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்திருந்தார் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். இந்த தமிழக பட்ஜெட் குறித்து பல அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸூம் முகநூல் வாயிலாக தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் வரவேற்கத் தக்கவையாக இருந்தாலும் கூட, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான … Read more

''என்மீது குற்றச்சாட்டு வராமல் இருந்தாதான் ஆச்சரியப்படணும்.. '' – மனம் திறக்கும் அருண்பாண்டியன்.

எண்பதுகளின் தமிழ் சினிமாவில் ஃபிட் அண்ட் ஸ்மார்ட் ஆக அறிமுகமானவர் அருண்பாண்டியன். `ஊமை விழிகள்’, `இணைந்த கைகள்’ எனத் திரும்பிப்பார்க்க வைத்தவர். விஜயகாந்தின் பல படங்களைத் தயாரித்தவர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விஜய்யின் ‘சர்கார்’, அஜித்தின் ‘விஸ்வாசம்’, ‘சதுரங்க வேட்டை’, ‘பரியேறும் பெருமாள்’ என படங்களை ஓவர்சீஸில் ரிலீஸ் செய்தவர். இப்போது கருணாஸின் ‘ஆதார்’, அதர்வாவின் ‘ட்ரிக்கர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சென்னையில் இல்லாத நாட்களில் ஊரில் விவசாயம் செய்து வரும் அருண்பாண்டியனிடம் பேசினேன். ‘ஆதார்’ … Read more

கோலிவுட் ஸ்பைடர்: வாடிவாசல் டீமின் ப்ளான்; இயக்குநரை தட்டிக்கொடுத்த அஜித்; தனுஷ் எடுத்த புது முடிவு!

* `அந்நியன்’, `தசவதாரம்’ உள்பட பெரிய படங்களைத் தயாரித்தவர் ‘ஆஸ்கார் பிலிம்ஸ்’ ரவிச்சந்திரன் கடந்த ஏழு ஆண்டுகளாகவே சினிமா தயாரிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். ‘ஆஸ்கார் பிலிம்’ஸின் சரிவு பலரையும் திகைக்க வைத்தது. முகமே வெளிக்காட்டாமல் இருந்ததால் சினிமா உலகில் இருக்கும் பலருக்குமே அவர்தான் ரவிச்சந்திரன் எனத் தெரியாது. ‘சரி இப்போது அவருக்கென்ன?’ என கேட்கிறீர்களா.. பழைய பிரச்சனைகளை தள்ளி வைத்துவிட்டு விரைவில் படம் ஒன்றை தயாரிக்கப் போகிறார் ரவிச்சந்திரன். இதனால் கே.கே நகரில் உள்ள அவரது ஆபீஸ் … Read more

விபத்தில் காயம்; கால்பந்து விளையாட முடியாத ஏக்கத்தில் கல்லூரி மாணவர்‌ தற்கொலை? – போலீஸ் விசாரணை!

விருதுநகர் பட்டு தெருவைச் சேர்ந்தவர்கள் சிவராஜன்-லதா தம்பதியினர். இவர்களின் மகன் செல்வக்குமார் (22). விருதுநகரில் உள்ள கல்லூரி ஒன்றில் உடற்கல்வியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய செல்வக்குமார், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பின்னர், அவர் அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதான மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் … Read more

“ராவணனைப் போன்றோர் கீதையைப் பற்றி பேசுகிறார்கள்!" – குஜராத் அமைச்சரை விமர்சித்த டெல்லி அமைச்சர்

பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில், மாநில கல்வியமைச்சர் ஜிது வகானி, பள்ளி பாடத்திட்டத்தில் பகவத்கீதையை சேர்ப்பது குறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “2022/23 கல்வியாண்டு முதல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பகவத்கீதை இருக்கும். பகவத்கீதையின் மதிப்புகள், கொள்கைகள் மற்றும் முக்கியத்துவம் ஆகியவை அனைத்து மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பகவத்கீதை 6-ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும்” … Read more