5 States Election Result: பஞ்சாப் தேர்தல் முடிவுகள்… முன்னணியில் இருப்பது யார்! | Live Updates

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்… முன்னணி நிலவரம்! பஞ்சாப் தேர்தல்: பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் 77 இடங்களிலும், ஆம் ஆத்மி 20 இடங்களிலும், அகாலி தளம் 15 இடங்களிலும், பாஜக மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்து. தற்போது நடைபெற்றுவரும் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத்தின் பதவிக்காலம் … Read more

விவசாய நிலம் குத்தகைக்கு ஒப்பந்தம் செய்வது அவசியமா?

‘‘நண்பருக்கு என் விவசாய நிலத்தை ஐந்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விட விரும்புகிறேன். ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியமா?’’ தி.லோகேஷ், அரக்கோணம். சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர், என்.ரமேஷ் பதில் சொல்கிறார். ‘‘அதிகம் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு மட்டுமல்ல, நீண்ட காலம் பழகிய நண்பர், உறவினர்களாக இருந்தாலும், சட்டப்படி யான குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியம். ‘தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் 1955 சட்டப்பிரிவு-4 பி (2)’-ன்படி நிலத்தைக் குத்தகைக்கு எடுக்கும்போது, சில விதிமுறை … Read more

இன்றைய ராசி பலன் | 10/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் … Read more

`உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க மோடி இரவும் பகலும் உழைக்கிறார்!' – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

உக்ரைனில் தவித்துக்கொண்டிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசாங்கம் ஆபரேஷன் கங்கா என்ற துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ரஷ்யப் படைகளின் தாக்குதலால் உக்ரைன் நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், உக்ரைனில் தங்கியிருக்கும் அண்டை நாட்டு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ரஷ்யா உக்ரைன் போர் இந்த நிலையில், இந்திய அரசின் மீட்புப் பணிகள் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “இந்தியா தான் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மக்களை வெளியேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளது. பிரதமர் மோடி … Read more

“இந்த நூற்றாண்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று" – உக்ரைன் எம்.பி

உக்ரைன் ரஷ்யா இடையே நடந்து வரும் யுத்தம் 10 நாள்களைக் கடந்தும் தொடர்கிறது. போர் சூழலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு அண்டை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் போர் சூழல் தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடனும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் தொலைபேசியில் உரையாடினார். அப்போது போர் நிறுத்தம் வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்தார். ரஷ்யா விவகாரம் – மோடி இந்த நிலையில், இது தொடர்பாக உக்ரைன் நாடாளுமன்ற … Read more

`ஃபேஸ்புக் நட்பு' – பெண் கொடுத்த புகாரில் சிக்கிய காவலர் சஸ்பெண்ட்!

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஷோபனா (27). இவர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஷோபனா கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனது சொந்த ஊர் வந்தவாசி. எனக்கும் வினோத்குமார் என்பவருக்கும் கடந்த 8.12.2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. காவலர் விக்னேஷ்வருடன் ஷோபனா நாங்கள் இருவரும் காதலித்து வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் நான் 7 மாதம் கர்ப்பமாக இருந்தபோது என்னுடைய வீட்டுக்கு தெரிந்தது. குழந்தைப் … Read more

`மத்திய அரசின் உபரி நிலங்களை பணமாக்க 5 ஆயிரம் கோடியில் புதிய திட்டம்!' – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுத்துறை நிறுவனங்களின் வசம் உள்ள உபரி நிலங்கள் மற்றும் உபயோகத்தில் இல்லாத கட்டடங்களைப் பணமாக்குவது தொடர்பாக ஓர் அமைப்பை உருவாக்குவது குறித்த முக்கிய முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்த அமைப்பு, `தேசிய நில பணமாக்கல் கழகம் (என்.எல்.எம்.சி)’ என்றழைக்கப்டுகிறது. இதன் மூலம், பொதுத்துறை நிறுவனங்களின் வசம் உள்ள உபரி நிலங்களான … Read more

32 ஆண்டுகள் சிறை… பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தொடங்கி, அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், திரைப் பிரபலங்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பிவருகின்றனர். ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, “தேசப்பிதா மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கூட 14 ஆண்டுகள் கழித்து விடுவிக்கப்பட்டார். ஆனால், … Read more

பேஸ்புக் வலை; திருமண ஆசைகாட்டி 68 வயது மூதாட்டியிடம் ரூ.11 லட்சத்தை ஏமாற்றிய நைஜீரிய வாலிபர்!

சமூக வலைதளங்கள் வந்த பிறகு மோசடிகளும் அதிகரித்துவிட்டன. நட்பு கோரிக்கை விடுத்து அதை ஏற்கும் பெண்களிடம் திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லி லட்சக்கணக்கில் பணத்தைப் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. மும்பையில் அது போன்ற ஒரு மோசடியில் 68 வயது மூதாட்டி சிக்கி ஏமாந்திருக்கிறார். மும்பையில் வசிக்கும் 68 வயது மூதாட்டி ஒருவருக்கு அவரது பேஸ்புக்கில் செபஸ்டியான் என்ற பெயரில் ஒரு நட்பு கோரிக்கை வந்திருக்கிறது. தான் லண்டனில் கட்டுமானத்தொழில் செய்து வருவதாக அந்த … Read more

திருவண்ணாமலை: மின்சாரம் பாய்ச்சி இளைஞரைக் கொல்ல முயற்சி; காப்பாற்ற வந்தவர் உட்பட இருவர் பலி!

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ளது சொரகொளத்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ்(26) என்பவருக்கும், ஏழுமலை(45) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு தனது நிலத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் கட்டில் மீது படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார் சரண்ராஜ். நள்ளிரவில் அங்கு வந்த ஏழுமலை, அருகில் உள்ள மின் கம்பத்தில் மின் ஒயரை மாட்டி எடுத்துவந்து, தூங்கிக் கொண்டிருந்த சரண்ராஜ் மீது மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றுள்ளார். அப்போது திடீரென விழித்த … Read more