மூன்றாம் பிறை நெகிழ்வலைகள்: விஜி, சீனு, சுப்பிரமணி, ஊட்டி – வளர்ந்த குழந்தைக்குத் தாயுமானவனின் கதை!

சமகால இளைய தலைமுறையினர், கமல்ஹாசனின் சினிமா கிராஃபை எத்தனை தூரம் பின்பற்றியிருப்பார்கள் என்று தெரியவில்லை. அந்த வரிசையின் கடைசியில் உள்ள தசாவதாரம், விஸ்வரூபம் போன்றவற்றைப் பலர் பார்த்திருக்கலாம். இன்னும் சிலர் முன்னே சென்று ‘ஹேராம்’ போன்ற கிளாசிக் படங்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், கமல் என்னும் கலைஞனின் முழுமையான பரிமாணத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் அவரின் திரைப்பயணத்தில் உள்ள மிகச்சிறந்த திரைப்படங்கள் அனைத்தையும் அவர்கள் பார்த்தாக வேண்டும். அப்போது கூட முழுமையாகப் பார்க்க முடியமா என்று தெரியவில்லை. அதன் விஸ்தீரணம் … Read more

வேலூர்: `பாமக-வினர் கள்ள ஓட்டு போட முயன்றனர்' – திமுக-வினரின் குற்றச்சாட்டால் பரபரப்பு!

வேலூர் மாநகராட்சி 24-வது வார்டில் தி.மு.க சார்பில் எம்.சுதாகர், பா.ம.க சார்பில் ஆர்.டி.பரசுராமன் போட்டியிடுகிறார்கள். இந்த வார்டில் அ.தி.மு.க வேட்பாளரின் மனு குளறுபடி காரணமாக நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதனால் அ.தி.மு.க போட்டியிடவில்லை. இந்த நிலையில், தி.மு.க மற்றும் பா.ம.க இடையே கடும் போட்டி நிலவியது. இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே இருக்கட்சியினர் இடையே சலசலப்பு இருந்துவந்தது. வேலூர்: தி.மு.க-வினர் போராட்டம் மேலும் வாக்குப்பதிவும் மந்தமான நிலையிலேயே இருந்தது. மாலை 5 மணியளவில், வாக்குச்சாவடியை பா.ம.க-வினர் கைப்பற்றி கள்ள … Read more

வீரபாண்டியபுரம் விமர்சனம்: `நான் மகான் அல்ல', `ஜீவா' எடுத்த சுசீந்திரனுக்கு என்னாச்சு?

கணக்கன்பட்டிக்கும், நெய்க்காரப்பட்டிக்கும் இடையே அரசியல் தகராறில் கொலைகள் தொடர்கின்றன. அதில் ஒரு சிறுமி காணாமல் போவதில் ஆரம்பிக்கும் கதை அப்படியே நூல் பிடித்து ஜெய், மீனாக்‌ஷி கோவிந்தராஜன் கோயில் திருமணத்தில் வந்து முடிகிறது. ஆனால், திருமணம் செய்யாமல், கிரிக்கெட் வீரர் தோனி போல “But I had other ideas” என ஜெய்க்கு வேறு சில யோசனைகள் வருகின்றன. மீனாக்‌ஷியின் தந்தையிடமே சென்று மீனாக்ஷியை ஒப்படைக்கிறார். ஒப்படைத்தால் மட்டும் வெத்தலை பாக்கு வைத்து பாராட்டவா போகிறார்கள் என்பது … Read more

மூட்டை நிறைய சில்லறை…“ஒரு சுஸூகி ஸ்கூட்டர் குடுங்க!'' அஸாமில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவம்

இருசக்கர வாகனம் வாங்குவது என்பது பெரும்பாலான இந்தியர்களின் கனவு. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் இருசக்கர வாகனத்தோடு நம்மால் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும். சின்ன வயதில் டிவிஎஸ் 50 -ன் கம்பியைப் பற்றியவாறு அப்பாவோடு பயணித்தது தொடங்கி தன் காதலியைப் பின் இருக்கையில் அமரச் செய்து ஒட்டிச் செல்வது வரை… சினிமா காட்சிகள் யோசித்தால்கூட ஒரு இருசக்கர வாகனம் இன்றி காட்சி இருக்காது. அப்படியான இருசக்கர வாகனத்தை வாங்குவதற்கு நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம்? அஸாம் மாநிலம் பர்பேட்டாவைச் சேர்ந்த … Read more

`கண்ணே கலைமானே' 40ஆவது ஆண்டு காணும் மூன்றாம் பிறை; சிறப்பு போட்டோ ஆல்பம்!

மறைந்த இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி 1982 இல் வெளியாகியது ‘மூன்றாம் பிறை ‘. இத்திரைப்படம் வெளியாகி, 40 ஆண்டுகளைக் கடந்துள்ளது. மனநிலை பிறழ்ந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியும் அதற்கு ஈடாக கமஹாசனும் தங்களுடைய உச்ச நடிப்பை இந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருப்பார்கள். இசை இளையராஜா. 5 பாடல்கள் இந்தப் படத்தில். பலரின் நினைவுகளில் நீங்காது நிற்கும் ‘கண்ணே கலைமானே’ பாடல் கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல். இந்தியச் சினிமாவின் மிகச் சிறந்த … Read more

`500 புத்தகங்கள் வாங்கணும்' – இயக்குநர் வசந்தபாலன் #ChennaiBookFair

“ஒரு 500 புக் இருக்கு… 5 மட்டும் எப்படி சொல்ல முடியும்” என ஆரம்பிக்கும் போதே உற்சாகமாக ஆரம்பிக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். வெயில், அங்காடித் தெரு, காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களின் இயக்குநர். “அரிதான புத்தகங்கள் தான் என்னுடைய முதல் சாய்ஸ் ஆக இருக்கும். வழக்கமா புத்தகக் கடைகளில் கிடைக்காத புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரும். அப்படியான அரிதான புத்தகங்களைத் தேடி தேடி வாங்குவேன். காயிதே மில்லத் கல்லூரியில் நடக்கும் ஆரம்பக்கால புத்தக கண்காட்சிகளில் இருந்தே … Read more

சென்னை: வழக்கம்போல் மந்தம்… காத்தாடும் வாக்குப்பதிவு மையங்கள்! – 1 மணி நிலவரம் என்ன?!

தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக, இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட 200 வார்டுகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 5,794 வாக்கு மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 27,800-க்கும் அதிகமான அதிகாரிகளும், 18,000 அதிகமான காவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். வாக்குப்பதிவு மையம் மொத்தமுள்ள 5,794 வாக்குச்சாவடிகளில், 1,061 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 182 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை … Read more

விற்பனைக்கு வந்த `புஷ்பா' சேலை; குஜராத் நபரின் ட்ரெண்டி ஐடியா!

நீலாம்பரி சேலை, ஓவியா ஹேர்கட் என பிரபலங்களின் உடைகளையும், ஆபரணங்களையும் தேடித் தேடிப் பின்பற்றுவதெற்கென ஒரு தனிக் கூட்டமே உண்டு என சொல்லலாம். அந்த வரிசையில் இப்போது இடம் பிடித்திருக்கிறது `புஷ்பா சேலை’. புஷ்பா `ஊ சொல்றியா’ சர்ச்சை: இந்த இலக்கணங்களைத் தாண்டி `புஷ்பா’வில் மட்டும் புதிதாக என்ன இருக்கிறது? `புஷ்பா’ படத்தில் அதிரடி நாயகனாக அல்லு அர்ஜுன் கலக்கி இருப்பார். வில்லனாக ஃபகத் பாசில், ராஷ்மிகாவின் நடிப்பு, வைரலான சமந்தா நடனமாடிய பாடல் என ஒரு … Read more

நெல்லை: ஆர்வத்துடன் வாக்களித்த 101 வயது முதியவர்! – அனைத்துத் தேர்தல்களிலும் வாக்களித்த பெருமிதம்!

நெல்லை மாநகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நாளில் பல சுவாரஸ்யங்கள் நடந்து வருகின்றன. புதிதாக வாக்கு செலுத்தும் இளம் வாக்காளர்கள் ஒருபக்கம் ஆர்வத்துடன் வாக்களிக்கும் நிலையில், மூத்த வாக்காளர்களும் அவர்களுக்கு இணையாக உற்சாகமாக வாக்குச் சாவடிக்கு வருகிறார்கள். 80 வயது மூதாட்டி பீமா பீவி அந்த வகையில், மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 101 வயது முதியவர் முண்டன் என்பவர் தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்து வாக்களித்தார். தனக்கு 101 வயது ஆவதாக அவர் தெரிவித்த நிலையில், அவரது … Read more