"மக்களுக்கு சில்க் ஸ்மிதா பற்றிய எண்ணமே வேற மாதிரி இருக்கு!" – `சில்க் ஸ்மிதா' பட இயக்குநர் ஜெயராம்

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அறிமுக இயக்குநர் ஜெயராம் இயக்கத்தில் நடிகை சந்திரிகா ரவி சில்க் ஸ்மிதாவாக நடிக்கவிருக்கிறார். இவர் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகியிருந்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர், ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படத்தில் ‘மா பாவா’ பாடலுக்கு நடனமாடி பெரிதும் பரிச்சயமானார். ஏற்கெனவே, நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையிலிருந்து இன்ஸ்பயராகிதான் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற இந்தித் … Read more

தமிழ்நாடு கேட்டது ₹5,060 கோடி; கிடைத்தது ₹450 கோடி; மத்திய அரசின் செயல்பாடு சரியா?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க “எப்போதும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு, மிக்ஜாம் புயல் நிவாரண விஷயத்தில் இன்னும் மோசமாக வஞ்சித்திருக்கிறது. ஒரு பேரிடர் காலத்தில் மக்களுக்கான நியாயமான நிவாரணத் தொகையாக ரூ.5,060 கோடி கேட்டோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு எந்தச் சிறப்புத் தொகையையும் வழங்காமல், மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ஒதுக்கிய 450 கோடி ரூபாயை மட்டுமே கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தொகை புயல் பாதிப்பே இல்லாமல் போனாலும், ஒன்றிய … Read more

“பத்திரிகையாளர்களைக் குறிவைத்து தாக்குகின்றனர்… அச்சமாக இருக்கிறது!" – காஸா பத்திரிகையாளர்

போர்க் காலத்தின்போது ஒரு நாட்டுக்கு ராணுவம் அவசியம் என்பதைப்போல, பத்திரிகையாளர்களும் அவசியமானவர்களே. காரணம், போரில் அரங்கேறுகின்ற கொடூரங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவருவது இவர்களே. அவ்வாறு இல்லையென்றால், பாலஸ்தீனத்தின்மீது ஒரு மாதத்துக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் கொடூர தாக்குதல்கள் வெளியே தெரியவந்திருக்காது. ஆனால், தற்போது இஸ்ரேல் நடத்திவரும் இந்தப் போரில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது கேள்விகள் எழுகின்றன. இஸ்ரேல்-ஹமாஸ் போர் கடந்த சில நாள்களுக்கு முன்புகூட, காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், தனது வீடு முற்றிலுமாக அழிந்ததாகவும், அதில் … Read more

`அறிவுக்கடவுள் சரஸ்வதி; அவள் எழுதியதாகப் பதிவு இருக்கிறதா?’ – ஆண்டாள் பிரியதர்சினி

சமீபத்தில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில், மகளிர் இலக்கிய அரங்கத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் ஆண்டாள் பிரியதர்சினி. ‘இலக்கியப் பரப்பில் பெண்ணின் மொழி’ என்கிற தலைப்பில் அவர் உரையாற்றினார். “இலக்கியப் பரப்பு மற்றும் பெண்ணின் மொழி என்பதை முரண் தொகையாக நான் பார்க்கிறேன். இலக்கியப் பரப்பிலே காலம்காலமாகப் பெண்ணுக்கு மொழி கிடையாது என்று சொல்லப்பட்டது. மௌனம்தான் அவளின் மொழி. அவளுடைய அதிகபட்சமான மொழியே … Read more

"ஜம்மு-காஷ்மீர் நரகத்துக்குச் செல்லட்டும்… மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டனர்" – ஃபரூக் அப்துல்லா

மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க அரசு, 2019-ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த அடுத்த சில மாதங்களில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் பிரிவு 370-ஐ அங்கு ரத்து செய்து, மாநிலத்தையும் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக உடைத்தது. இதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள்மீதான விசாரணையை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த செப்டம்பரில் முடித்தது. Article 370 – உச்ச … Read more

Vettaiyan: `வேட்டையன்' – வெளியானது ரஜினி படத்தின் புதிய வீடியோ!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் அறிவிப்பு வீடியோ! ரஜினி, த.செ.ஞானவேல் கூட்டணியின் ‘தலைவர் 170’ படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் எனப் பலரும் நடிக்கின்றனர். திருவனந்தபுரத்தில் தொடங்கி மும்பை, சென்னை, திருநெல்வெலி, நாகர்கோவில், உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. மும்பையில் அமிதாப் பச்சனின் காம்பினேஷனில் படப்பிடிப்பு நடந்தது. இதையடுத்து … Read more

அதீத பணிச்சுமை: 2 அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

நீண்ட நேரப் பணியை முடித்து வீடு திரும்பிய சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மாணவராகப் பணிபுரிந்திருக்கிறார் மருது பாண்டியன் (30). மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய ஆள்கள் இல்லாததால் கூடுதலாக டேட்டா ஆபரேஷன் பணியையும் பார்த்திருக்கிறார். doctor குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெண் கர்ப்பம்; இழப்பீடு, விசாரணை – என்ன நடந்தது? டிசம்பர் … Read more

`வாழைப்பழத் தோல் இருந்தால் மல்லி பூத்துக்குலுங்குமா?’ – மண்புழு விஞ்ஞானி விளக்கம்!

வீடுகளில் செடி வளர்க்க விரும்புபவர்களின் முதல் சாய்ஸாக இருப்பது பூக்கள் தான். முதலில் பூக்களை வளர்த்து பார்ப்போம் அது நன்றாக வளர்ந்தால் பின்னர் மற்ற செடிகளை வளர்ப்போம் என்பதுதான் பெரும்பாலானவர்களின் தேர்வாக இருக்கும். அப்படி பூக்கள் வளர்க்க முடிவு செய்த பிறகு எந்த பூ என்ற கேள்விக்கு பிரதான விடையாக இருப்பது இரண்டு பூக்கள் தான். ஒன்று ரோஜா, மற்றொன்று மல்லி. பலரும் இந்த செடிகளை வாங்கி வைத்துவிட்டு தண்ணீர் ஊற்றினால் போதும் என்று இருந்துவிடுவார்கள், ஆனால் … Read more

Suriya: இந்தித் திணிப்பு; அண்ணா சாலை, தலைமைச் செயலகப் படப்பிடிப்பு! – புறநானூறு படத்தின் அப்டேட்

சூரரைப் போற்று படத்துக்குப் பிறகு இயக்குநர் சுதா கொங்கரா தமிழில் இயக்கும் படத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். புறநானூறு எனப்பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில், துல்கர் சல்மான், நஸ்ரியா விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘இசை’ ஜீ. வி. பிரகாஷ் குமார். அவர் இசையமைக்கும் 100 -வது படம் இது. இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து … Read more