Ameer: `திட்டமிட்டு அவமானப்படுத்திவிட்டு…' – ஞானவேல் ராஜா அறிக்கை பற்றி சசிகுமார்

பருத்திவீரன் தொடர்பான சர்ச்சையில்  பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.  அதாவது , “ பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே ‘அமீர் அண்ணா என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன் அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை … Read more

கனடா நண்பர் வீட்டில் துப்பாக்கிச்சூடு; கொலை மிரட்டல்… சல்மான் கானுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!

மும்பையில் வசிக்கும் நடிகர் சல்மான் கானுக்குக் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாகக் கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய், இந்தக் கொலை மிரட்டல்களை விடுத்துக்கொண்டிருக்கிறான். பல முறை மிரட்டல் விடுத்திருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், நடிகர் சல்மான் கானைக் கொலைசெய்ய மும்பைக்குத் தனது அடியாட்களையும் அனுப்பிவைத்தான். இதையடுத்து சல்மான் கானுக்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. சல்மான் … Read more

“நேர்மையான இளைய மகனும், வஞ்சகம் செய்கிற மூத்த மகனும்..!" – எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டி கதை

தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறித்தவ அமைப்பின் நிகழ்ச்சி கோவை கருமத்தம்பட்டி பகுதியில் நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி  கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தேர்தல் நேரத்தில் திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் மீது தாங்க முடியாத வரிச்சுமையை திணித்தார்கள். எடப்பாடி பழனிசாமி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிகம் உள்ள கோவையில் தொழில் நடத்துவதில் அதீத சிக்கல்கள் எழுந்தன. அந்த சமயத்தில் … Read more

Ameer: “என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் குறிப்பிடுவேன்!" – ஞானவேல்ராஜா அறிக்கை

பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் அப்படத்தை இயக்கிய அமீர் இருவருக்கும் இடையேயான மோதல்தான் தற்போது தமிழ் சினிமாவின் ‘டாக் ஆஃப் தி’ டவுனாக இருக்கிறது. பலரும் இயக்குநர் அமீருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தற்போது வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் , “ பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே ‘அமீர் அண்ணா என்றுதான் … Read more

திருவள்ளூர் பெருமாள் கோயில் திருவிளக்கு பூஜை: தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் வைத்திய வீரராகவர்!

திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீஅஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஶ்ரீவீரராகவ ஸ்வாமி கோயில். இங்குதான் வேண்டிய வரம் அருளும் வீரராகவப் பெருமாள் எழுந்தருளி உள்ளார். வைத்திய வீரராகவர் என்ற பெயரில் பெருமாள் இங்கு அழைக்கப்படுகிறார். உடலாலும் மனதாலும் பீடிக்கப்பட்ட தீராத நோய்களை இவர் தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை. னாய் பாதிக்கப்பட்டவர் சிறிய உலோகத் தகட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைச் செதுக்கி, நோய் தீருமாறு வேண்டிக்கொண்டு அதை … Read more

Doctor Vikatan: சர்க்கரைநோய்க்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் தேவையா?

Doctor Vikatan: என்  அம்மாவிற்கு வயது 60 ஆகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, கீழே விழுந்ததன் காரணமாக முதுகுத்தண்டுவட எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு நான்கு மாதங்களாக ஓய்வில் இருந்தார். நான்கைந்து நாள்களாக தலைச்சுற்றல் இருந்தது, ரத்தப் பரிசோதனை செய்ததில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது தெரிய வந்தது. மருத்துவர் அறிவுரையின்படி இப்போது மாத்திரை எடுத்து வருகிறார். ஒருமுறை சர்க்கரை மாத்திரை எடுத்துக் கொண்டால் தொடர்ந்து ஆயுள் முழுவதும் சாப்பிட வேண்டுமா அல்லது சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தால் மாத்திரைகளை … Read more

மயிலாடுதுறை: `என்ன செய்தார் எம்.பி., எஸ்.ராமலிங்கம்?’ – உங்கள் கருத்து என்ன?!

மயிலாடுதுறை தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ராமலிங்கத்தின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி ஆராய்ந்து ‘என்ன செய்தார் எம்.பி?’ என்கிற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருக்கிறது. கட்டுரையைப் படிக்க… என்ன செய்தார் எம்.பி?- எஸ்.ராமலிங்கம் (மயிலாடுதுறை) “எளிமையானவர்தான், ஆனால், திறமையானவராக இல்லையே?!” எஸ்.ராமலிங்கத்தின் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன… பதிந்து, முடிவைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த சர்வேயில் … Read more

`தமிழகத்தில் ஒவ்வொரு கோயிலிலும் சொத்துகளைத் திருடிவருகிறார்கள்' என்ற நிர்மலா சீதாராமனின் விமர்சனம்?

பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க “அர்த்தமில்லாத குற்றச்சாட்டு. பரம்பரை பரம்பரையாக இருந்த அறங்காவலர்கள், கோயில் சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்தியது தெரியவந்ததால்தான் அறநிலையத்துறை ஆரம்பிக்கப்பட்டது. தளபதி ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மட்டுமே 5,500 கோடி ரூபாய் சொத்துகள் மீட்கப்பட்டிருக்கின்றன. 1,000 கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் புனரமைப்புப் பணிகள் நடந்திருக்கின்றன. உலோகச்சிலை, கற்சிலை எனப் பல சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் அரசாக தி.மு.க திகழ்ந்துகொண்டிருக்கிறது. மதத்தையும் … Read more

`தேசியத் தலைவர் பிரபாகரன்' – திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கமென்ட்டும், ரியாக்‌ஷனும்!

தி.மு.க எம்.பி-யான தமிழச்சி தங்கபாண்டியன், தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், `நீங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமை ஒருவருடன் உணவு சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், அது யாராக இருக்கும்?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “மேதகு தேசியத் தலைவர் பிரபாகரன்” என்று பதிலளித்தார். ’அவரிடம் நீங்கள் என்ன கேட்பீர்கள்?’ என்ற கேள்விக்கு, “முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு மன்னிப்புக் கோருவேன்” என தமிழச்சி தங்கபாண்டியன் பதிலளித்திருந்தார். முள்ளிவாய்க்கால் இந்த வீடியோவை பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், தனது எக்ஸ் ட்விட்டர் … Read more

"சுஷாந்த் சிங் இறந்த வீட்டை நான் வாங்கினேனா?" – `தி கேரளா ஸ்டோரி' அடா சர்மா விளக்கம்

கடந்த 2020-ம் ஆண்டு பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் சர்ச்சையாகவே  இருக்கிறது. இதனிடையே சமீபத்தில் சுஷாந்த் சிங்கின் வீட்டை  இந்தி நடிகையான அடா சர்மா வாங்கியிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. சுஷாந்த் சிங் இந்நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அடா சர்மா. இதுகுறித்து பேசியவர், “நான் தற்போது வசிக்கும்  வீடே எனக்குக் கோயில் போன்றது. சிறுவயதிலிருந்து நான் இந்த வீட்டில்தான் வாழ்கிறேன். வேறு வீட்டுக்குக் … Read more