இரவு 11 மணிக்குப் பிறகு சாலையில் நடந்து சென்ற தம்பதி; ரூ.1,000 அபராதம் விதித்த போலீஸ் -என்ன நடந்தது?

கர்நாடகாவில் இருக்கும் பா.ஜ.க அரசு, மாணவிகள் புர்கா அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு வர தடைவிதித்திருக்கிறது. அடுத்து காதல் ஜிஹாத், பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்போவதாகவும் கூறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பெங்களூரு நகரில் கார்த்திக் என்பவர் தன் மனைவியுடன் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்குச் சென்றுவிட்டு இரவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் சாலையில் நடந்து சென்றபோது இரவு 12:30 மணியாகி இருந்தது. அப்போது அவர்களை போலீஸார் மடக்கி இரவு 11 மணிக்கு பிறகு சாலையில் நடந்து சென்றதற்காக … Read more

”வீட்டை காலி பண்ணச் சொல்லிட்டாங்க; 4,000 கிளிகள் எங்க போகும்?” – பதறும் ‘பறவை மனிதர்’ சேகர்

சட்டமா? சென்டிமெண்டா? என  நீதித்துறை வட்டாரத்தில் உள்ளவர்களை யோசிக்க வைத்திருக்கிறது இப்படியொரு வழக்கு. சென்னை ராயப்பேட்டையில் வாடகை வீட்டில் வசித்துவருகிறவர் ’பேர்ட் மேன்’ என அழைக்கப்படும் சேகர். 22 வருடங்களுக்கும் மேலாக பறவைகளுக்கு உணவு அளிக்கும் பறவைகள் நேய செயலைச் செய்துவருகிறார். கிட்டத்தட்ட, ஒரு நாளைக்கு மட்டுமே 4,000 கிளிகள் இவரது வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட்டு இளைப்பாறி செல்கின்றன. ஆனால்,  வீட்டின் உரிமையாளர்  இந்த வீட்டை விற்பனை செய்யப்போவதாகவும் அதனால், இந்த வீட்டை காலிசெய்யவேண்டும் என்று … Read more

பிக் பாஸ் 6 நாள் 62: வெளியேறப் போகும் மற்றொரு பெண் போட்டியாளர்; கமல் சொன்ன `அன்னம்' பழமொழி!

‘டிவிங்கிள் ஸ்டார்’ டாஸ்க்கில், சன்மானம் தரும் விஷயத்தில் சார்பு அரசியலும், பதில் மொய் கலாசாரமும் தலைவிரித்தாடியது என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். விருது வழங்குதலின் போது இது அப்படியே தலைகீழாக மாறி விட்டது. சன்மானம் அதிகமாக வாங்கியவர்கள்தான் விருதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை. கமல் இது தொடர்பான விசாரணையின் போது ‘ஒரு கலைஞனை சக கலைஞன்தானே முதலில் அங்கீகரிக்க வேண்டும்..?! கலைஞனாக ஆவதற்கு முதல் தகுதியே ஒரு நல்ல ரசிகனாக இருப்பதுதான். திறமைக்குத்தான் முதல் இடம் … Read more

FIFA World Cup Round Up 2022: சாதனையுடன் விடைபெறும் ரொனால்டோ; மொராக்கோவின் வரலாற்று வெற்றி!

அமெரிக்க பத்திரிகையாளருக்கு அஞ்சலி செலுத்திய FIFA : நேற்று முன்தினம், அர்ஜென்டினா vs நெதர்லாந்து இடையேயான காலிறுதிப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அமெரிக்க பத்திரிகையாளரான கிராண்ட் வால், திடீரென உயிரிழந்தார். இவரது மறைவிற்கு ஃபிஃபா, நேற்று பிரான்ஸ் vs இங்கிலாந்து இடையேயான காலிறுதிப் போட்டியில் அஞ்சலி செலுத்தியது. முன்னதாக 49 வயதான இவர், உலகக் கோப்பை குரூப் சுற்று ஆட்டத்தை பதிவு செய்வதற்காக LGBTQ – வை ஆதரிக்கும் வகையில் வானவில் நிற டி-ஷர்ட் அணிந்து கொண்டு … Read more

"மோடி, அமித் ஷாவைப் போல் அனைத்து கிராமங்களுக்கும் செல்லுங்கள்!" – காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவுரை

இந்தியாவில் இந்த ஆண்டில் மட்டும் நடைபெற்ற ஏழு மாநில சட்டமன்றத் தேர்தலில், ஐந்து மாநிலங்களில் பாஜக-வும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தலா ஒரு மாநிலத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதுவும் மார்ச்சில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில்கூட வெற்றிபெறாமல் படுதோல்வியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து சோனியா காந்தி விலகிய பிறகு, மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் தலைவரானார். மல்லிகார்ஜுன கார்கே அதன்பிறகு தற்போது நடந்து முடிந்த இமாச்சல், … Read more

BANvIND: இஷானிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற வங்கதேசம்; இயல்பு நிலைக்குத் திரும்பும் இந்தியா!

திரில்லர் போட்டிகளுக்கெல்லாம் விடுமுறை விட்டுவிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு நாள் போட்டிகளில் இந்தியா எப்படி விளையாடுமோ அப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. வங்கதேசம், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து என்று வரிசையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இறங்கு முகத்தில் இருந்த இந்திய அணி அதிகாரப்பூர்வமாக தற்போது தன்னுடைய ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டத் தொடங்கியுள்ளது. கடைசி வரை போய் போராடி ஜெயிப்பது, கடைசி பந்து போடும் வரை யார் வெற்றி பெறுவார் என்றே தெரியாமல் இருப்பது போன்ற … Read more

`அம்பேத்கர் மக்களிடம் பிச்சை எடுத்து பள்ளி நடத்தினார்'-சர்ச்சையாகப் பேசியதாக அமைச்சர் மீது மை வீச்சு

மகாராஷ்டிரா உயர் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் சந்திரகாந்த் பாட்டீல். இவர் அவுரங்காபாத் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்டு பேசும்போது பாபாசாஹேப் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா புலே ஆகியோர் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசினார். “அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா புலே ஆகியோர் பள்ளி தொடங்கியபோது அரசை எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் மக்களிடம் சென்று `நான் பள்ளி தொடங்குகிறேன், தயவு செய்து பணம் கொடுங்கள்’ என்று பிச்சை எடுத்து பள்ளியை நடத்தினர்” என்று தெரிவித்திருந்தார். சந்திரகாந்த் பாட்டீல் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. … Read more

கோழிக்கோட்டிலிருந்து துபாய் சென்ற விமானத்தில் பாம்பு; 7 மணி நேரம் அச்சத்துடன் காத்துக்கிடந்த பயணிகள்

கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று துபாய் புறப்பட்டுச் சென்றது. விமானம் துபாய் சென்றவுடன் ஊழியர்கள் சரக்கு இருந்த பகுதியை திறந்தபோது அதில் ஒரு பாம்பு இருந்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்து மிகவும் பத்திரமாக பயணிகள் இறக்கப்பட்டனர். பாம்பு பிடிப்பவர்களின் துணையோடு பாம்பு பிடிக்கப்பட்டது. ஆனால் பயணிகளின் உடைமைகள் அவர்களுக்கு கிடைப்பதில் அதிக நேரம் எடுத்துக்கொண்டது. பயணிகள் 7 மணி நேரத்திற்கும் … Read more

"உதயநிதியை அமைச்சராக்குங்கள்; அவர் நடித்த படங்களை பார்க்கச் சொல்லாதீர்கள்!"– அண்ணாமலை தாக்கு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புத்தூரில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க-வின் பல்வேறு அணிகள் பிரிவுகள் சார்பில் ’மாற்றத்திற்கான மாநாடு’ நடந்தது.  இந்த மாநாட்டில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர்  பொன் பாலகணபதி, முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்  கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில்  பேசிய அண்ணாமலை, “தமிழக அரசின் செயல்பாட்டில் கோளாறு உள்ளது. ’டார்க்கெட்’ வைத்து கல்லா கட்டும் அமைச்சர்கள், தமிழகத்தை சாராயம் ஓடும் மாநிலமாக மாற்றியுள்ளனர். மாநாட்டில் … Read more

பெங்களூரில் ‘Bee Hotels’ – தேனீக்களை காக்க புது முயற்சி; இயற்கை மீது பேரன்பு!

நமது காதருகே ‘குய்ய்ய்…’ என, தனது குட்டி இறக்கைகளால் ‘ஹை ஸ்பீடில்’ பறந்து செல்லும், தேனி, குளவி, வண்டுகளை நாம் இன்றும் கிராமங்களில் காண்கிறோம், அந்த சப்தத்தை கேட்கிறோம். என்றாலும், வானுயர்ந்த கட்டடங்கள், திரும்பிய திசையெல்லாம் ‘டிராபிக் ஜாம்’ என, பெங்களூரு, சென்னை போன்ற வளர்ந்த நகரப்பகுதிகளில், ஹாரன் சப்தத்தை தவிர, தேனீக்கள் போன்ற சிற்றுயிர்களின் சப்தத்தையும், அவற்றை கண்ணில் பார்ப்பதும் அரிதான ஒன்றாகி வருகிறது. அயல் மகரந்த சேர்க்கை. ஆண்டுக்கு ரூ.11 லட்சம்… இனிப்பான லாபம் … Read more