IRCTC Nepal Tour: நேபாளம் சுற்றி பார்க்க வாய்ப்பு வழங்கும் ஐஆர்சிடிசி

Naturally Nepal Tour Package: ஐஆர்சிடிசியின் இயற்கையான நேபாள டூர் பேக்கேஜ் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கும். ஆறு நாள், ஐந்து இரவுகள் கொண்ட டூர் பேக்கேஜில் காத்மாண்டு மற்றும் பொக்ரா ஆகிய இடங்களுக்கான பயணத்திற்கான கட்டணம் ரூ.38,400 மட்டுமே. இந்திய இரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) 6-நாள் மற்றும் 5-இரவு பயண திட்டத்திற்கு “நேபாளத்தின் இயற்கை” என்று அறிவித்துள்ளது. நேபாளத்தின் மிகவும் பிரபலமான கோயில்கள் மற்றும் கட்டிடக்கலை அதிசயங்களைச் சுற்றிப் பார்க்க அருமையான சந்தர்ப்பம் … Read more

ஒரு டிரில்லியன் டாலர் கற்பனை நகரத்தை உருவாக்கும் சவூதி அரேபியா: பொறியியல் அதிசயம்

மேற்கு ஆசிய நாடான சவூதி அரேபியா மிகப்பெரிய பொறியியல் அதிசயத்தை நகர வடிவில் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எண்ணெய் வளம் மிக்க நாடான செளதி அரேபியா, கார்பன் இல்லா நகரத்தை உருவாக்குகிறது, இந்த அதிசய நகரத்தில் வேலை, வாழ்க்கை, விவசாயம் மற்றும் பொழுதுபோக்கு என அனைத்து வசதிகளும் இருக்கும்.170 கிலோமீட்டர் அளவில் நீண்டுள்ள நகரம் இது. இந்த அற்புதமான அதிசய நகரத்தின் கட்டுமானம் 2030க்குள் முடிக்க வேண்டும் என்பது அரசின் திட்டம். மாய நகரம் பற்றிய … Read more

Breaking: பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Earthquake in Philippines: பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், மணிலாவில் நிலநடுக்கம் வலுவாக உணரப்பட்டது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், லூசான் தீவில் புதன்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரிய சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை என்றாலும் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வடக்கு … Read more

ஆறாய் ஓடும் நெருப்புப் பிழம்பு – பிரமிக்க வைக்கும் வீடியோ

ஹவாய் தீவில் உள்ள 5 எரிமலைகளில் கிலாவியா எரிமலையும் ஒன்றாகும். இந்த எரிமலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று இந்த எரிமலை வெடித்து நெருப்புப் பிழம்பு வெளியேறி வருகிறது. எரிமலையில் இருந்து வெளியேறும் நெருப்புப் பிழம்பு ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல் வெளியேறி வருகிறது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை பிரமிக்க வைத்துள்ளது. இந்த எரிமலை சீற்றத்தை ஹவாய் எரிமலை ஆய்வகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் … Read more

UK PM Election : ரிஷி சுனக் – லிஸ் டிரஸ் இடையே அனல் பறந்த விவாதம்

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து,  புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  புதிய பிரதமர் பதவிக்கு வர 8 எம்.பி.க்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு சுற்றுகளாக எம்.பி.க்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சுற்றிலும் குறைந்த வாக்குகளைப் பெறுபவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனார். புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில், இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை … Read more

நீண்ட காலமாக உடலுறவு கொள்ளவில்லை: வதந்திகளுக்கு விளக்கமளிக்கும் எலோன் மஸ்க்

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், தனது தனிப்பட்ட வாழ்க்கைக்காக அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பெறுவார். அதேபோல அவரும் தனது சமூக ஊடகங்களில் பல விஷயங்களையும் வெளிப்படையாகப் பேசுவார். நீண்ட காலமாக உடலுறவு கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். வதந்திகளுக்கு விளக்கமளிக்கும் எலோன் மஸ்க்கின் இந்த விளக்கம் பலனளிக்குமா என்று நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர். கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவி நிக்கோல் ஷனஹானுடனான விவகாரம் குறித்த செய்திக்கு பதிலளித்த எலோன் மஸ்க் தனது பாலியல் வாழ்க்கை குறித்து தெரிவித்துள்ளார். தான் … Read more

Asteroid Bennu: சிறுகோள் பென்னுவின் ஆச்சரியமான மர்மங்களை அவிழ்க்கும் நாசா

சிறுகோள் பென்னு மர்மம்: மர்மங்கள் நிறைந்த சிறுகோள் பென்னுவின் பகல்-இரவு சுழற்சி 4.3 மணி நேரத்தில் முடிகிறது, காலையில் 127 டிகிரி வெப்பத்தால் நெருப்பாய் தகிக்கும் என்றால், இரவில் -23 டிகிரி வெப்பநிலையில் கல்லாய் உறையும் என்று நாசா வெளியிட்டுள்ள தகவல் ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது. சில காலத்திற்கு முன்பு, நாசா பென்னு என்ற சிறுகோளின் மேற்பரப்பில் OSIRIS-REx வாகனத்தை செலுத்தியது. இந்த வாகனம் அங்கிருந்து அனுப்பும் தகவல்கள் விஞ்ஞானிகளுக்கும் ஆச்சரியங்களை அள்ளித் தருகிறது. இன்னும் சில நாட்கள் விஞ்ஞானிகள் இந்த சிறுகோளை ஆய்வு செய்வார்கள். … Read more

Apologised Pope Francis: இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பு கோரும் போப் பிரான்சிஸ்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வாடிகன் நகரத்தின் இறையாண்மையுமான போப் பிரான்சிஸ், கனடாவின் பழங்குடியின மக்களுக்கு எதிராக பல கிறிஸ்தவர்கள் செய்த கலாச்சார அழிவுகள் மற்றும் கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்டார். நவீன உலகில் மதகுருக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் போப் பிரான்சிஸ். கடந்த பல நூற்றாண்டுகளாக மதங்களின் பெயரால் உலகெங்கும் நிகழ்ந்த அட்டூழியங்களை அடையாளப்படுத்தி, அவற்றை ஏற்றுக் கொண்டு வரலாற்றின் அங்கமாக அங்கீகரிப்பதன் அவசியத்தை போப் பிரான்சிஸ் உணர்ந்திருக்கிறார்.  Dear … Read more

குரங்கு அம்மைக்கு பெரியம்மை தடுப்பூசி – ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மைத் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர், தெலங்கானாவில் ஒருவர் என 5 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குரங்கு அம்மையை சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதனிடையே, பெரியம்மைக்கான தடுப்பூசியை குரங்கு அம்மைக்கு பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து … Read more

கோத்தபய ராஜபக்ச தலைமேல் தொங்கும் கத்தி; மனித் உரிமை அமைப்பு அளித்த புகார்

இலங்கையில் இருந்து தப்பி சிங்கப்பூரில் வசிக்கும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு சிக்கல்கள் அதிகரிக்கலாம். இலங்கையின் முன்னாள் அதிபரை கைது செய்யுமாறு தென்னாபிரிக்க மனித உரிமைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் அமைப்பு சிங்கப்பூரில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இலங்கையில் பல தசாப்தங்களாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் ராஜபக்சேவின் பங்கு குறித்து, அந்த நேரத்தில் ராஜபக்சே நடத்திய அடக்கு முறை காரணமாக போர்க் குற்றவாளியாக கருத வேண்டும் எனவும், அவரை  கைது … Read more