நாள் முழுவதும் கணினியில் வேலையா… இந்த 7 உணவுகள் அவசியம் டயட்டில் இருக்கட்டும்

கண் பராமரிப்பு: இந்த டிஜிட்டல் யுகத்தில், மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது, ஆனால் இவை நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்றாலும், அவை நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. இந்த நவீன யுக கேஜெட்டுகள் குறிப்பாக கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை. அவற்றின் திரை ஒளி நம் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் அனைத்து விதமான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இது போன்ற தவறான பழக்கவழக்கங்களால், நம் கண்கள் வலுவிழந்து, அதனால் தினமும் கண்களில் எரிச்சல், அரிப்பு போன்ற … Read more

இலங்கை வழியில் செல்லும் வங்க தேசம்; எரிபொருள் விலைகள் 51% அதிகரிப்பு

பங்களாதேஷில் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் மற்றொரு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நேற்று இரவு பெட்ரோல்-டீசல் விலை 51.7 சதவீதம் உயர்த்தப்பட்டது. இது, நாட்டின் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய எரிபொருட்களின் விலை உயர்வு என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. மதியம் 12:00 மணி முதல் அமலுக்கு வந்த புதிய விலையின்படி, ஒரு லிட்டர் ஆக்டேன் விலை தற்போது 135 டாக்காவாக மாறியுள்ளது, இது முந்தைய விலையான 89 டாக்காவை விட … Read more

தீவிரமாக சேதமடைந்த உக்ரைனின் ஜபோரிஜியா அணுமின் நிலையம்: ஒரு உலை மூடப்பட்டது

உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தீவிர சேதத்தினால் ஒரு உலை மூடப்பட்டது. ரஷ்யாவின் படையெடுப்பால் பல மாதங்களாக சிக்கல்களை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு இது மேலும் ஒரு பேரிடியாக இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று (2022 ஆகஸ்ட் 5)  ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீதான கொடிய தாக்குதல்கள் தொடர்பாக உக்ரைனும் ரஷ்யாவும் ஒன்றன் மீது மற்றொன்று குற்றம் சாட்டி வரும் நிலையில், அணுமின் நிலையம் “கடுமையான சேதத்தை” அடைந்தது, இதன் விளைவாக அதன் உலைகளில் ஒன்று … Read more

World War: யுத்தத்தின் கொடூரத்தை உணர்த்திய ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் நாள்

உலக அமைதியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் போரின் காயங்களும் வடுக்களும் என ஜப்பான் தனது எட்டு தசாப்த கால வலி நிறைந்த நாளின் துக்கத்தை அனுசரிக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் புதிய ஆயுதப் போட்டிக்கு அஞ்சும் சர்வதேச நாடுகளின் கவலைகளுக்கு மத்தியில் ஹிரோஷிமாவில் உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலின் 77 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அஞ்சலி நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 6, 1945 அன்று காலை 8:15 மணிக்கு, அமெரிக்காவின் B-29 போர் விமானம் எனோலா கே, … Read more

மந்தமான விற்பனை! செலவுகளை குறைக்க 10 ஆயிரம் ஊழியர்களை நீக்கிய அலிபாபா

Alibaba Fired Employees: சீன தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா, மந்தமான விற்பனை மற்றும் நாட்டில் நிலவும் மந்தமான பொருளாதாரம் ஆகியவற்றின் மத்தியில் செலவினங்களைக் குறைக்க கிட்டத்தட்ட 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, நிறுவனம் அதன் மொத்த பணியாளர்களை 245,700 ஆக குறைத்தது. ஜூன் காலாண்டில் 9,241 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஹாங்சோவை தளமாகக் கொண்ட அலிபாபாவை விட்டு வெளியேறினர். ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் அலிபாபாவின் பணியாளர்கள் 13,616 ஆகக் … Read more

அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதல் நடத்தியது உக்ரைனா ரஷ்யாவா?

ரஷ்யாவின் படையெடுப்பால் பல மாதங்களாக சிக்கல்களை எதிர்கொண்டு வரும் உக்ரைனின் சிக்கல்கள் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. வெள்ளிக்கிழமையன்று ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீதான கொடிய தாக்குதல்கள் தொடர்பாக உக்ரைனும் ரஷ்யாவும் ஒன்றன் மீது மற்றொன்று குற்றம் சாட்டுகின்றன. உக்ரேனிய அணுமின் நிலையத்தின் மீது ஷெல் துப்பாக்கி தாக்குதல் நடைபெற்றது. ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியாவை ரஷ்யா மீது குற்றம் சாட்டும் உக்ரைன், இந்த “பயங்கரவாதச் செயலுக்கு” மாஸ்கோ பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் … Read more

வட கொரியாவில் யாருக்குமே காய்ச்சல் இல்லை! இதென்ன புதுக்கதை?

சியோல்: கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வட கொரியாவில் தற்போது  யாருக்குமே காய்ச்சல் இல்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவில் ஜூலை 30ஆம் தேதிக்குப் பிறகு புதிதாக காய்ச்சல் எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாடு தெரிவித்துள்ளது. சில மாதங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டுவந்த நாட்டில்  4.77 மில்லியன் காய்ச்சல் நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளதாக வட கொரியா கூறுகிறது, அதே நேரத்தில் ஏப்ரல் பிற்பகுதியில் இருந்து 74 பேர் இறந்துள்ளனர். இருப்பினும், கோவிட் நோயால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதை வடகொரியா … Read more

கனவு நனவான தருணம் : ஒரே விமானத்தில் விமானியான தாய் – மகள்

ஹோலி என்ற பெண்மணி தனது கல்லூரிப்படிப்பை முடித்தவுடன் அமெரிக்காவின் சவுத் வெஸ்ட் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக தனது விமானப் பயணத்தைத் தொடங்கினார். ஒரு விமானி ஆக வேண்டும் என விரும்பிய அவர், தனது மகள் கெல்லிக்கு இரண்டு வயதாக இருந்தபோது, விமானி ஆவதற்குப் பயிற்சி மேற்கொண்டார்.  அவருக்கு கெல்லி உட்பட 3 குழந்தைகள் இருந்தாலும் ஹோலி தனது கனவைக் கைவிடவில்லை.  ஹோலி கடந்த 18 வருடங்களாக விமானியாகப் பணியாற்றி வருகிறார். தாயைக் கண்டு தானும் விமானி … Read more

கோவிட்-19 தடுப்பூசியால் மரணம்! இறப்புக்கும் தடுப்பூசிக்கும் இடையில் தொடர்பு உறுதி

SARS-CoV-2 vs Guillain-Barre Syndrome: தென்னாப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவரின் பதிவு செய்யப்பட்ட மரணம் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உயிரிழந்தவர், தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர் என்றும், அவர் குய்லின்-பாரே சிண்ட்ரோம் எனப்படும் அரிய நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர் என்றும், தென்னாப்பிரிக்காவின் சுகாதார கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. நோயாளியின் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் இடையே தொடர்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்த சுகாதார கண்காணிப்பு … Read more

போர்ப்பயிற்சித் தொடங்கிய சீனா : தைவான் கடற்பகுதியில் உச்சக்கட்ட பதற்றம்

தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதி வரும் நிலையில், அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். அவரது இந்தப் பயணம் சீனாவைக் கொந்தளிப்படைய வைத்துள்ளது.  இதுகுறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சன்யிங், அமெரிக்காவுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படுமெனத் தெரிவித்தார். இந்த நிலையின் தைவானின் கடற்பரப்பைச் சுற்றி சீனா ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளதால் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் … Read more