9 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகும் விஜய்-அஜித் படங்கள்?

தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத நட்சத்திர அந்தஸ்தையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டிருக்கும் இரண்டு டாப் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லை.  ஒரே சமயத்தில் திரை பயணத்தை தொடங்கி கிட்டத்தட்ட 30 வருடங்களாக இந்த இரண்டு நடிகர்களும் தமிழ் திரையுலகில் கோலூன்றி ஆட்சி செய்து வருகின்றனர்.  விஜய் மற்றும் அஜித் படங்கள் வெளியாகும் நாளன்று மொத்த திரையரங்குகளுமே விழாக்கோலமாக காட்சியளிக்கும்.  கட்-அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வது, மாலை போடுவது, வெடி வெடிப்பது, மேளதாளம் என … Read more

அமேசான் காடுகளில் வாழ்ந்த பழங்குடியினத்தின் கடைசி நபர் மரணம்!

அமேசானில் உள்ள ஒரு பழங்குடியின குழுவின் கடைசி நபராக கருதப்பட்ட அடையாளம் தெரியாத பழங்குடி மனிதர் காலமானார். அவரது மரணம் ஆர்வலர்களிடையே பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. கலைகள் மற்றும் மொழிகளின் பாதுகாப்பிற்காக உழைக்கும் பலர், பிரேசிலிய அமேசான் பழங்குடியினர் அனைவரையும் இழந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்தனர். இந்த இழப்பு ஒட்டுமொத்த கலாச்சாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை என அச்சம் வெளியிட்டனர். மரணித்த பழங்குடி மனிதர், Índio do Buraco அல்லது “பதுங்குகுழியின் பழங்குடி மனிதர்” என்று அறியப்பட்டார் என தி … Read more

ஆஹா தமிழ் டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகும் நடிகர் ஜீவா

சென்னை: ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘சர்க்கார் வித் ஜீவா’ எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகிறார். உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக ‘சர்க்கார் வித் ஜீவா’ எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார். விளையாட்டுகளை மையப்படுத்திய ‘கேம் ஷோ’ நிகழ்ச்சிகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு இருப்பதால் … Read more

மலேஷியாவில் கலக்கிய யுவன் ஷங்கர் ராஜா; உலகம் சுற்றும் இசை மேதை!

யுவன் ஷங்கர் ராஜா மீதும் அவரது இசையின் மீதும் ரசிகர்கள் கொண்டுள்ள அன்பிற்கு எல்லையே இல்லை. மலேசியாவில் நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததே இதற்கு சான்று. மலேசியாவில் இதுபோன்ற ஒரு சாதனை நடப்பது இதுவே முதல் முறை. அது மட்டுமின்றி, மலேசியாவில் தொடர்ந்து இரண்டு நாட்கள் இசை நிகழ்ச்சி நடத்திய ஒரே கலைஞர் யுவன் மட்டும் தான். யுவன் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் பேரன்பை இது காட்டுகிறது. … Read more

ஆரோக்கியமாக இருக்க உண்ணாவிரதம்; நண்பரின் அறிவுறையை பின்பற்றும் Elon Musk!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவர் தனது வாழ்க்கை முறை பற்றிய தகவல்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். தற்போது எலான் மஸ்க் தனது உணவுப் பழக்கம் குறித்து கூறியுள்ளார். அவ்வப்போது உண்ணாவிரதம் இருந்து வருவதால் ஆரோக்கியமாக உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார். உண்ணாவிரதம் இருக்குமாறு ஒரு நல்ல நண்பர் தனக்கு அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.  ஜாக் டோர்சி எலோன் மஸ்க்கிற்கு அறிவுரை வழங்கினாரா? எலோன் மஸ்க்கின் இந்த ட்வீட்டை கண்ட … Read more

நடிகர் ஜீவா இனி 'ஆஹா' தொகுப்பாளர்

உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கிவரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக ‘சர்க்கார் வித் ஜீவா’எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார். டிஜிட்டல் தளங்களில் வலைதள தொடர்கள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு இணையாக விளையாட்டுகளை மையப்படுத்திய ‘கேம் ஷோ’ நிகழ்ச்சிகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இதனை துல்லியமாக அவதானித்த ஆஹா டிஜிட்டல் தளம், புது முயற்சியாக ‘சர்க்கார் வித் … Read more

சவாலே சமாளி! நான் ரெடி நீ ரெடியா? பதவியை ராஜினாமா இபிஎஸ் தயாரா? சவால் விடும் ஓபிஎஸ்

சென்னை: பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்! ராஜினாமா செய்ய எடப்பாடி பழனிச்சாமி தயாரா  என ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார். அடிமட்ட தொண்டர்களை சந்திப்போம், அவர்கள் முடிவு செய்யட்டும், பதவி ஆசை இல்லாத என்னை பதவி ஆசை உள்ளவன் என கூறுபவர்களுக்கு சவால் விடுப்பதாக மதுரை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பின்போது ஆதரவாளர்களிடையே ஓபிஎஸ் பேசியதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சமீப காலமாக ஓபிஎஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. … Read more

நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப முடியாதா? ஆர்டெமிஸ் 1 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு

ஆர்டெமிஸ்-1 ராக்கெட் மாலை 6 மணிக்கு செலுத்தப்பட இருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 40வது கவுன்டவுனில், ராக்கெட் ஏவுவது நிறுத்தப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு, ராக்கெட் ஏவப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நாசா அறிவித்துள்ளது. நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதற்காக நாசா ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியிருந்தது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என்பது நாசாவின் திட்டம். இன்று மாலை 6 மணிக்கு திட்டமிடப்பட்ட புறப்பாட்டுக்கு 40 நிமிடங்களுக்கு முன்பு, திரவ ஹைட்ரஜன் கசிவு … Read more

ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தின் புதிய தலைவராக உருவெடுத்தார் இஷா முகேஷ் அம்பானி

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்  தலைவர் முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானியை தனது குழுமத்தின் சில்லறை வணிகத்தின் புதிய தலைவராக அறிமுகப்படுத்தினார். சாதனை பதிவை செய்துள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வணிகப் பிரிவு, ₹2 லட்சம் கோடி வருவாயை எட்டியதாகவும், ஆசியாவின் முதல் 10 சில்லறை விற்பனையாளர்களுள் ஒன்றாக இருப்பதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார். திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இந்தத் தகவலை வெளியிட்டார். மகள் … Read more

பேச்சுலர் இசையமைப்பாளர் சித்து குமாருக்கு திருமணம்

தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் இசையமைப்பாளர்களில் ஒருவரான சித்து குமார், சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், சித்தார்த் ஆகியோரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த சித்து குமார் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக உருவெடுத்து பல முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் … Read more