95 சதவீதம் குரங்கு அம்மை இதன் மூலம்தான் பரவுகின்றன! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவலின் தாக்கத்தால் உலக நாடுகளே தத்தளித்து வருகின்றன. இன்று வரை கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கங்களோடு காணப்படுகின்றதே தவிர நாடுகளை விட்டு முழுவதும் வெளியேறவில்லை கொரோனா பாதிப்பு. இதற்கிடையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே குரங்கு அம்மை குறித்து புரளிகளும், வதந்திகளும் அதிக அளவில் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வந்தன. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக குரங்கு அம்மையின் பரவல் தீவிரமெடுத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இதுவரை உலகம் முழுவதும் உள்ள … Read more

Russia Ukraine Crisis: போர்க்களத்தில் மலரும் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம்

சர்வதேச அளவில், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை மற்றும் அரிசியின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் என்ற நிலையில், பல மாதங்களாக தொடரும் ரஷ்யா உக்ரைன் இடையிலான போரினால், உக்ரைனின் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் தானியங்களின் விலை உயர்வுக்கும், தேவையை பூர்த்தி செய்வதில் சுணக்கமும் ஏற்பட்டுள்ளது. உக்ரேனின் துறைமுகங்களில் 25 மில்லியன் டன் கோதுமை மற்றும் பிற தானியங்கள் தேங்கிக் கிடப்பதால் யாருக்கும் பயனின்றி தானியங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இரு … Read more

China's New Plan: சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதியில் நெடுஞ்சாலை அமைக்க சீனா திட்டம்

சீனா: அசல் கட்டுப்பாட்டுக் கோட்டு (எல்ஏசி) அருகே சீனா மேற்கொள்ள உள்ள புதிய தந்திரம் முன்னுக்கு வந்துள்ளது. கடந்த வாரம் பெய்ஜிங் வெளியிட்ட நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டத்தின் படி, சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதி வழியாக புதிய நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. அந்த திட்டத்தின் படி, இந்திய எல்லையை ஒட்டி நெடுஞ்சாலை அமைக்கப்படும் எனத் தெளிவாக தெரிகிறது. பாங்காங் ட்சோவில் பாலம் மற்றும் பூட்டானில் ஒரு கிராமத்தை கட்டிய பிறகு, சீனா இப்போது எல்ஏசியில் புதிய … Read more

பிரிட்டனில் கடும் வெப்பம்… உருகிய ரயில்வே சிக்னல்.. அவதியுறும் மக்கள்

இங்கிலாந்தில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. வரலாறு காணாத கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைக்கின்றது. சில நாட்களாக தொடர்ந்து உக்கிரம் அடையும் வெயில் ஐரோப்பாவினையே முடக்கி போட்டுள்ளது எனலாம். சாலையில் மக்கள் நடமாட்டமும் மிக குறைவாகவே உள்ளது. பல நிறுவனங்கள், பள்ளிகள் விடுமுறை அறிவித்திருக்கின்றன. இந்தியாவில் வெயில் காலங்களில், இந்த அளவிற்கும் அதிகமாக வெப்பம் பதிவாகும். ஆனால், ஐரோப்பாவில் இது வரலாறு காணாத அளவாகும். ஐரோப்பாவில் வாழும் மக்களுக்கு குளிரை மட்டும் தாங்கும் வகையில் … Read more

ரணில் விக்கிரமசிங்கே முன் உள்ள சவால்கள் என்னென்ன?

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும், அதனால் மக்கள் போராட்டம் எழுச்சி பெற்றதும் நாம் அறிந்ததே. அதிபர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த கோத்தபய ராஜபக்ச, கடந்த 9-ம் தேதி பொதுமக்கள் அதிபர் இல்லத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து, ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். பொதுமக்களின் போராட்டம் ராஜபக்சக்களுக்கு எதிராக மட்டும் அல்ல. ரணில் விக்கிரமிங்கசிங்கேவுக்கு எதிராகவும் தான் go home gota, go Ranil go ஆகிய முழக்கங்களைத் தான் போராட்டக்காரர்கள் முன்னெடுத்தனர். இலங்கை அதிபர் மாளிகை … Read more

பிரிட்டன் பிரதமர் பதவி – இறுதிச்சுற்றில் ரிஷி சுனக் – லிஸ் டிரஸ்

இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கடந்த 7-ம் தேதி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இதனைத் தொடர்ந்து, புதிய பிரதமர் பதவிக்கு வர 8 எம்.பி.க்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு சுற்றுகளாக எம்.பி.க்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.  ஒவ்வொரு சுற்றிலும் குறைந்த வாக்குகளைப் பெறுபவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனார். இதுவரை நடைபெற்ற 4 சுற்று வாக்குப்பதிவிலும், இந்திய … Read more

உலக அழிவு நெருங்குகிறதா… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்

உலக அழிவு குறித்த அச்சுறுத்தல் என்பது நீண்ட காலமாக மனிதர்களுக்கு பீதியை கொடுத்து வருகிறது. பூமி கிரகத்தின் தற்போதைய நிலைமையைப் புரிந்து கொள்வதற்காக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஒரு புதிய ஆய்வு, உலக அழிவின் அச்சுறுத்தல் நினைத்தத்தை விட மோசமாக உள்ளதாக ஆய்வு ஒன்றி தெரிய வந்துள்ளது. நிபுணர்களால் முன்னர் நினைத்ததை விட மோசமானது என்று நம்புகிறது. ஃபிரான்டியர்ஸ் இன் தி எகாலஜி அண்ட் என்விரான்மெண்ட் என்னும் சுற்றுசூழல் குறித்த இதழில் வெளியிடப்பட்ட … Read more

நிலவில் நீல் ஆம்ஸ்டாங் இறங்கியது போலியா? இதோ உண்மைகள்!

விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் நிலவில் தரையிறங்கி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அது நடக்கவில்லை என்றும், இது அமெரிக்க அரசாங்கத்தால் செய்யப்பட்ட புரளி என்றும் இன்னும் சில கருத்துக்கள் நிலவி வருகிறது.  ஜூலை 20, 1969 அன்று அப்பல்லோ 11 மிஷன் இரண்டு மனிதர்களை நிலவில் தரையிறக்கியது. மைக்கேல் காலின்ஸ் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் சந்திர மாட்யூலை இயக்கினர், இது விண்கலத்தில் இருந்து பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கியது. அவர்களில் … Read more

Video: ரஷ்ய ஷெல் தாக்குதலில் எரியும் பயிர்கள்; அணைக்க போராடும் உக்ரைன் விவசாயிகள்

கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதியில் இருந்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் அல்லகளுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் உக்ரைன் இணைய முயற்சிப்பதை எதிர்த்து, அந்நாட்டின் மீது ரஷ்ய படையினர், சுமார் 5 மாத காலங்களாக தொடர்ந்து தாக்குல் நடத்தி வருகின்றனர். இந்த போரில், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனினும், இந்த போரில், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் … Read more

தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கொடுக்கும் மசோதாவை நிறைவேற்றியது அமெரிக்கா

வாஷிங்டன்: தன்பாலின திருமண அங்கீகாரத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் என்ற கவலைகளை போக்கும் விதமாக, அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வதர்கு கூட்டாட்சி பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதாவை நிறைவேற்றியது. திருமணத்திற்கான மரியாதைச் சட்டம் ஒரே பாலின திருமணங்கள் மற்றும் ஓரின விருப்பம் கொண்டவர்களின் அமைப்புகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும். நாட்டின் ஒரு மாகணத்தில் செய்யப்படும் இதுபோன்ற திருமணங்களை நாட்டின் பிற மாகாணங்களும் அங்கீகரிக்க வகை செய்யும் மசோதா இது … Read more