உலக அழிவு நெருங்குகிறதா… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்

உலக அழிவு குறித்த அச்சுறுத்தல் என்பது நீண்ட காலமாக மனிதர்களுக்கு பீதியை கொடுத்து வருகிறது. பூமி கிரகத்தின் தற்போதைய நிலைமையைப் புரிந்து கொள்வதற்காக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஒரு புதிய ஆய்வு, உலக அழிவின் அச்சுறுத்தல் நினைத்தத்தை விட மோசமாக உள்ளதாக ஆய்வு ஒன்றி தெரிய வந்துள்ளது. நிபுணர்களால் முன்னர் நினைத்ததை விட மோசமானது என்று நம்புகிறது. ஃபிரான்டியர்ஸ் இன் தி எகாலஜி அண்ட் என்விரான்மெண்ட் என்னும் சுற்றுசூழல் குறித்த இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில், சுமார் 3300 விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உலகின் எந்த உயிரினங்களையும் பாதுகாக்க மனித குலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உலகளாவிய அளவில் பல்லுயிர் இழப்பு என்று வரும் போது,  இது எத்தனை இனங்கள் அல்லது உயிரினங்கள் அழிந்து போயுள்ளன என்பது குறித்த தெளிவான தகவல் நம்மிடம் இல்லை என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு உயிரினமும் வேகமாக அழிய அழிய உலகத்தின் அழிவு நெருங்கிறது என்பதை மனித குலம் உணர வேண்டும். 

மேலும் படிக்க | நீலத்திலிருந்து சிவப்பாக மாறிய பூமி; நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி புகைப்படம்

இது வரை அழிந்து போன இனங்கள் குறித்து மினசோட்டா பல்கலைக்கழகத்தின் ஆய்வின் இணை ஆசிரியரான ஃபாரஸ்ட் இஸ்பெல் ஒரு செய்திக் குறிப்பில்,  “இனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் வகைகளைக் கருத்தில் கொள்ளும்போது, ​​1500 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 30% இனங்கள் உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன அல்லது அழிந்துவிட்டன என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்” என தெரிவித்தார். தற்போது மனிதர்கள் பூமியில் மேற்கொள்ளும் சுரண்டல்கள் மற்றும் ஏற்படுத்தும் சுற்று சூழல் பாதிப்புகள் மூலம் உலகம் வேகமாக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்தின் இணை ஆசிரியர் அகிரா மோரி கூறுகையில், முன்னதாக, 2019ல் நடத்தப்பட்ட ஆய்வுகள் 12.5 சதவீத உயிரினங்கள் மட்டுமே அழிந்துவிட்டன என்று ஆய்வில் தெரிகிறது என குறிப்பிட்டார். மேலும், “அதிக அளவில் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம்” கடல் வாழ் உயிரினங்களை அழித்தள்ள நிலையில், ​​”மனித குலம் பூமியை அதிகப்படியாக சுரண்டுவது” ஆகியவை பூமியில் உள்ள உயிரினங்களை இழப்பதற்கு முக்கிய காரணிகள் என்றும் மோரி விளக்கினார்.

“பல்லுயிர் என்பது ஒவ்வொரு பகுதி மற்றும் பிராந்தியத்தில் வெவ்வேறாக இருப்பதால், இருப்பதால், உலகெங்கிலும் உள்ள பிராந்திய நிபுணர்களின் கருத்துக்களை ஒன்றிணைத்து எங்கள் ஆய்வு, முன்பு எப்போது இல்லாத வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் கூறினார். சமூக மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய நிலைப்பாட்டில் இருந்து, எதிர்கால சர்வதேச கொள்கை விவாதங்களுக்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம் என்று நான் நம்புகிறேன்.” என்று மோரி கூறினார்.

மேலும் படிக்க | அணுகுண்டு வெடிக்கும்; உலகம் இருளில் மூழ்கும்: நாஸ்ட்ராடாமஸின் பீதியூட்டும் கணிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.