நிலவு துகள்கள், கரப்பான்பூச்சிகள் ரூ.4 கோடிக்கு ஏலம்; மறுத்து முரண்டுபிடிக்கும் நாசா

1969 ஆம் ஆண்டு நாசாவின் அப்போலோ 11 மிஷனாக நிலவில் இருந்து  இருந்து  47 பவுண்டுகள் (21.3 கிலோகிராம்) எடை கொண்ட பாறை பூமிக்கு கொண்டு வரப்பட்டது.  இந்த பாறையின் துகள்களை வைத்து நிலவின் மண் மற்றும் பாறைகளில் நச்சுத்தன்மையுள்ளதா என்ற ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சில பூச்சிகள், மீன்கள் மற்றும் பிற சிறிய உயிரினங்களுக்கு அந்த நிலவு பாறையின் துகள்கள் உணவாக அளிக்கப்பட்டன. பின்னர் அவை சாகும் வரை அவற்றை கண்காணித்தனர்.  பின்னர் … Read more

கழிவு நீரில் போலியோ வைரஸ் : மீண்டும் பரவுகிறதா போலியோ?

1970  மற்றும் 1980-களில் உலகையே புரட்டிப்போட்ட நோய் இளம்பிள்ளை வாதம். தீவிர மருத்துவ நடவடிக்கைகளினாலும், பரவலான தடுப்பூசி பயன்பாட்டினாலும் போலியோ தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் லண்டன் நகரின் கழிவு நீரில் தற்போது வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் நகரில் கடந்த 1984-ம் ஆண்டு கடைசியாக போலியோ தொற்று கண்டறியப்பட்டது. 2003-ம் ஆண்டு பிரிட்டன் போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டன் நகரில் போலியோ பரவும் அபாயம் உள்ளதாக … Read more

உயிரிழந்த கணவர் மூலம் 2 வருடங்கள் கழித்து குழந்தை! கணவரே பிறந்ததாக கொண்டாடும் பெண்!

இங்கிலாந்து லிவர்பூலில் வசித்து வருகிறார் லூரான். இவரது கணவர் ஜெரிஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த சமயத்தில் தான் குழந்தை பெற்றுக்கொள்ள இந்த ஜோடி திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. அப்போது ஜெரிஷ்க்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை சென்று பரிசோதித்த போது அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனலிக்காமல் அவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் உயிரிழந்தார். மேலும் … Read more

Monkeypox virus: குரங்கு காய்ச்சலை Pandemic என்று குறிப்பிதிட்ட WHN

கொரோனா வைரஸுடன் குரங்கு காய்ச்சலும் தொடர்ந்து வருகிறது. இந்த ஆபத்தான வைரஸ் உலகம் முழுவதும் 58 நாடுகளில் பரவியுள்ளது மற்றும் இதுவரை சுமார் 3,417 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் பதிவாகி உள்ளன. இதற்கிடையில், உலக சுகாதார நெட்வொர்க் இதை ஒரு பாண்டமிக் என்று அறிவித்துள்ளது. ஒரு அறிக்கையின் படி இந்த குரங்கு காய்ச்சலின் பரவல் பல கண்டங்களில் வேகமாகப் பரவி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் குரங்கு காய்ச்சலை ஒரு தொற்றுநோயாக (பாண்டமிக்) அறிவிப்பதன் நோக்கம், அதனால் ஏற்படும் … Read more

Corona vs Unemployment: கொரோனாவினால் எதிர்காலம் இருண்டு போன சீன மாணவர்கள்

கோவிட், லாக்டவுன் மற்றும் வேலையின்மை என சீனாவில்  10.8 மில்லியன் பல்கலைக்கழக பட்டதாரிகளின் எதிர்காலமே இருண்டுவிட்டது.  சீனாவில் இளைஞர்களின் வேலையின்மை பிரச்சனை தற்போது மிக அதிகமாக உள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, “இளைஞர் வேலையின்மை ஏற்கனவே சீனாவின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதத்தை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது, இது 18.4 சதவீதமாக உள்ளது”. போர்ச்சுகலின் மொத்த மக்கள்தொகையை விட சீனாவில் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த  மாணவர்கள் அனைவரும் சீனாவின் வரலாற்றிலேயே வேலையின்மை என்ற … Read more

Viral Marriage: பொம்மையை கல்யாணம் செய்த பெண்: குழந்தையும் பிறந்தது

37 வயதான பெண் ஒருவர் பொம்மையை ‘திருமணம்’ செய்துக் கொண்டார். தற்போது குழந்தையும் பிறந்துள்ளது. அதிசயமான செய்தியாக இது வைரலாகிறது.  பிரேசிலை சேர்ந்த பெண் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மார்செலோ ரோச்சா மோரேஸ் (Meirivone Rocha Moraes) என்ற பெண் பொம்மையை திருமணம் செய்துக் கொண்டார். தனது கணவரின் வருகை, வாழ்க்கையை முழுமையடையச் செய்ததாக  அவர் தெரிவிக்கிறார்.  தன் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருப்பதாக அவர் சொல்கிறார். காதல் என்பது மிக அழகான உணர்வு என்று சொல்லும் இந்த … Read more

சந்தையில் ஏலம் விடப்படும் சிறுமிகள்: மாடுகளை கொடுத்து மணமகள்களை வாங்கும் அவலம்!

உலகம் முழுவதும் திருமண சடங்கு என்பது பல விதமாக நடைபெற்றாலும் அவை அனைத்தும் பெண்களின் வாழ்வியல் சூழலையும், வளர்ச்சியையும் பாதிக்கும் வகையில்தான் அமைகிறது. குழந்தை திருமணம், வரதட்சனை கொடுமைகள் உள்ளிட்ட அனைத்தும் பெண்களை நோக்கியே நகர்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளை பெற்றுதருவற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட பெண்கள், இன்றைய காலகட்டத்தில் உலகின் அனைத்து துறைகளிலும் கால் பதித்து அசாத்தியமான சாதனைகளை புரிந்து வருகிறார்கள். இருப்பினும் பெண்கள் மீதான பொருளியல் பார்வை மறைமுகமாக மனிதர்கள் மத்தியில் இன்றும் … Read more

அம்மாடியோவ்! ஒரு தலையணையின் விலை இத்தனை லட்சங்களா?

நெதர்லாந்தைச் சேர்ந்தவர் டச்சு மருத்துவர் திஜ்ஸ் வான் டெர் ஹில்ஸ்ட் ( Thijs van der Hilst). பிசியோதெரப்பிஸ்ட் ஆன இவர் கடந்த 15 வருடங்களாக ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இவரது ஆராய்ச்சியின் முடிவில் ஒரு பிரத்தியேகமான தலையணையை தயாரித்தார். இந்த தலையணையின் சிறப்பம்சம் என்னவென்றால் அதில் பயன்படுத்தப்பட்ட பருத்தி பஞ்சு எகிப்து தேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டதாம். அதேபோல் பஞ்சுகளை அடைக்க மல்பெரி பட்டு நூலால் நெய்த பட்டுத்துணியை பயன்படுத்தியுள்ளனராம். இது என்ன பிரமாதம் என்று எண்ணுவோருக்கு … Read more

Pornhub: ப்ரோன்ஹப் நிறுவனத்தின் உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா: அதிர வைக்கும் பின்னணி

நியூடெல்லி. உலகின் மிகப்பெரிய ஆபாச இணையதளமான Pornhub இன் தலைமை செயல் அதிகாரி (CEO) Ferrous Anton மற்றும் அந்த இணையதளத்தின் தலைமை இயக்க அதிகாரி (COO) ஆகியோர் பதவி விலகியுள்ளனர். அவர்களே தங்கள் விருப்பப்படி ராஜினாமா செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த செய்தி மிகவும ஆச்சரியமானதாக இருக்கிறது. இந்த பதவி விலகலுக்கு பின் இருக்கும் காரணம் என்ன? ராஜினாமா ஏன்? வயது வந்தோருக்கான பொழுதுபோக்கு போர்ட்டலான Pornhub இன் தாய் நிறுவனம் MindGeek இன் CEO ஃபெரஸ் அன்டன் … Read more

அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்குக் கட்டுப்பாடு : செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்

அமெரிக்காவில் தனிநபர் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி உள்ள நிலையில், அங்கு அண்மையில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் துப்பாக்கி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. அதே சமயம் துப்பாக்கி வைத்திருப்பது தனி நபரின் உரிமை என்ற கருத்தும் ஒருபுறம் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருக்க கூடுதல் கட்டுப்பாடு விதிக்கும் மசோதா, செனட் சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 64 வாக்குகளும், எதிராக 34 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து … Read more