No Salary Hike: கஜானா காலி! பாகிஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது

Pakistan Economic Crisis: பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஷேபாஸ் ஷெரீப்புக்கு, அந்நாட்டின் பொருளாதார மந்தநிலை மாபெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அரசுக் கருவூலத்தில் நிதி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தேசிய சட்டமன்றத்தில் செய்யப்பட்ட சம்பள உயர்வு அறிவிப்பை அடுத்த நாளே அரசாங்கம் திரும்பப் பெறும் சூழ்நிலை உருவானது. சம்பள உயர்வை அறிவித்த புதிய பிரதமர் ஷாபாஸ் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆற்றிய நாடாளுமன்றத்தின் முதல் உரையில் அரசுப் பணியாளர்ர்களின் ஊதியங்கள், ஓய்வூதியங்களை உயர்த்துவதாக அறிவித்தார் என்று எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் … Read more

முன்னாள் காதலனுக்கு காதலி கொடுத்த ஷாக் – அதிர்ந்த போலீஸார்

காதலில் தோல்வி அடைந்தவர்கள் ஏராளம். காதலி மற்றும் காதலர்கள் அவர்களை விட்டுச் சென்றிருக்கலாம் அல்லது அவர்களை ஏமாற்றியிருக்கலாம். இதனால், தங்களை ஏமாற்றியவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்களுக்கு இயல்பாகவே கோபம் இருக்கும்.  மேலும் படிக்க | அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்; அதிர வைக்கும் தகவல்கள் இத்தகைய சூழலில் தங்களை ஏமாற்றியவர்களை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று சிந்திப்பார்கள். அப்படி தான் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணும் நினைத்துள்ளார். இதற்காக முன்கூட்டியே காதலனை பழிவாங்க பலே திட்டம் ஒன்றையும் தீட்டியுள்ளார்.  அவரின் திட்டம் … Read more

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்; அதிர வைக்கும் தகவல்கள்

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. அமெரிக்காவின் பிரபல நகரமான நியூயார்க்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தில் குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர்.  துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் இனவெறி அமெரிக்காவில் மிகவும் பொதுவானது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அமெரிக்கா மனித உரிமைகள் பற்றிய பாடங்களை உலகிற்கு கற்றுக் கொடுக்கும் நிலையில், அதை தனது சொந்த நாட்டில் பின்பற்ற முடியாமல் இருக்கிறது. அமெரிக்காவில் ஆயுதங்களை வைத்திருப்பது சாமானியர்களின் அரசியலமைப்பு உரிமைகளில் ஒன்றாகும். இதனால்  … Read more

பரிசாக வந்த நகையை விற்றாரா முன்னாள் பிரதமர்: புதிய சிக்கலில் இம்ரான் கான்

பாகிஸ்தான் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (எஃப்ஐஏ) பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் ‘பரிசாக பெற்ற நெக்லஸ்’-ஐ விற்றதற்காக முதல் விசாரணையைத் தொடங்கியது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 24 நியூஸ் எச்டி டிவி சேனலின் படி, பாகிஸ்தானின் உயர்மட்ட விசாரணை நிறுவனம், ‘தோஷகானா’ (பாகிஸ்தான் நாட்டின் பரிசுக் களஞ்சியம்) க்கு சொந்தமான பரிசு நெக்லஸை விற்பனை செய்தது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.  அந்த நகையை லாகூரில் உள்ள நகை வியாபாரிக்கு ரூ. 180 மில்லியனுக்கு முன்னாள் … Read more

வானில் தோன்றவுள்ள அரிய நிகழ்வு…ஒரே நேர்க்கோட்டில் வரும் 4 கிரகங்கள்

சூரியக் குடும்பத்தில் உள்ள 8 கோள்கள் சூரியனைச் சுற்றி வருவதோடு தன்னைத் தானே சுற்றி வருகின்றன. எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் இவை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன. 800 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வியாழன் – சனி கோள்கள் வானில் ஒரே நேர்க்கோட்டில் தோன்றின. இதனைத் தொடர்ந்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் வியாழன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் 6 டிகிரி இடைவெளியில் ஒன்றுக்கொன்று நெருங்கி வந்தன. ஏப்ரல் முதல் வாரத்தில் … Read more

வேகமாக மாறி வரும் நெப்டியூனின் வெப்பநிலை; அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

வாஷிங்டன்: நெப்டியூன் கிரகம் சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளாகும். சூரியனிடமிருந்து 8 ஆவது இடத்தில் 4,49,82,52,900 கி.மீ அல்லது 30.07 AU தூரத்தில் அமைந்துள்ளது.  சூரிய குடும்பத்தை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள் நெப்டியூன் பற்றிய சில அதிர்ச்சி தகவல்களை சேகரித்துள்ளனர். நெப்டியூனின் வளிமண்டலத்தின் வெப்பநிலை எதிர்பாராத விதமாக மாறுகிறது என்று ப்ளானெட்டரி சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு கூறுகிறது.  உலகம் முழுவதும் உள்ள பல தொலைநோக்கிகளின் உதவியுடன், நெப்டியூன் … Read more

உக்ரைன் சமாதானப் பேச்சுக்கள் முட்டுச்சந்தை எட்டியுள்ளது: விளாடிமிர் புடின்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய நிலையில், முடிவே இல்லாமல் தொடர்கிறது . ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடக்கிய பிறகு ரஷ்யா மீது உலகின் பல நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இருப்பினும், ரஷ்யா போரில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை.  இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செவ்வாயன்று (ஏப்ரல் 12, 2022) ரஷ்யப் படைகள் வடக்கு உக்ரைனில் இருந்து பின்வாங்கிய பின்னர் … Read more

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் IPLல் இருந்து விலக வேண்டும்: அர்ஜுன ரணதுங்க

இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில்,  இந்தியாவில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்கின்றனர். இலங்கைக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தந்த இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா, தனது நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு, ஐபிஎல்லில் இருந்து வெளியேறி நாடு திரும்புமாறு  கேட்டுக் கொண்டுள்ள அவர், இலங்கையின் இத இக்கட்டான நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நாட்டுக்கு ஆதரவளிக்க … Read more

அதிக பணி நேரம், 6 நாட்கள் வேலை: பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷாபாஸ் ஷரீபின் அதிரடி முடிவுகள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பொறுப்பேற்ற உடனேயே, பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இதில் குறிப்பிடத்தக்க ஒரு முடிவாக, அலுவலர்களுக்கு வாரந்தோறும் ஒரு நாள் விடுமுறையை அறிவித்ததோடு, அரசு அலுவலகங்களின் நேரத்தை 10 மணி நேரமாக அவர் மாற்றியுள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் செவ்வாய்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.  “இனி ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை இல்லை. ஒரு அதிகாரப்பூர்வ வார விடுமுறை மட்டுமே இருக்கும் என பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் … Read more

இலங்கை நெருக்கடி: ஒரு கிலோ மஞ்சள் ரூ.3,853; ஒரு கிலோ பிரெட் விலை ரூ.3,583

இலங்கை  இதுவரை இல்லாத அளவில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால்,  பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நெருக்கடி நிலைக்கான காரணமான அரசு பதவி விலக வேண்டும் என கோருகின்றனர். இதற்கிடையில், பல வாரங்களாக, மிகப் பெரிய அளவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களை நிறுத்துமாறு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களிடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும் பெட்ரோல்-டீசல்  ஆகியவற்றுக்கும் மிகப்பெரிய அளவில் தட்டுப்பாடு … Read more