Pornhub: ப்ரோன்ஹப் நிறுவனத்தின் உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா: அதிர வைக்கும் பின்னணி

நியூடெல்லி. உலகின் மிகப்பெரிய ஆபாச இணையதளமான Pornhub இன் தலைமை செயல் அதிகாரி (CEO) Ferrous Anton மற்றும் அந்த இணையதளத்தின் தலைமை இயக்க அதிகாரி (COO) ஆகியோர் பதவி விலகியுள்ளனர். அவர்களே தங்கள் விருப்பப்படி ராஜினாமா செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த செய்தி மிகவும ஆச்சரியமானதாக இருக்கிறது. இந்த பதவி விலகலுக்கு பின் இருக்கும் காரணம் என்ன? ராஜினாமா ஏன்? வயது வந்தோருக்கான பொழுதுபோக்கு போர்ட்டலான Pornhub இன் தாய் நிறுவனம் MindGeek இன் CEO ஃபெரஸ் அன்டன் … Read more

அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்குக் கட்டுப்பாடு : செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்

அமெரிக்காவில் தனிநபர் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி உள்ள நிலையில், அங்கு அண்மையில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் துப்பாக்கி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. அதே சமயம் துப்பாக்கி வைத்திருப்பது தனி நபரின் உரிமை என்ற கருத்தும் ஒருபுறம் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருக்க கூடுதல் கட்டுப்பாடு விதிக்கும் மசோதா, செனட் சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 64 வாக்குகளும், எதிராக 34 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து … Read more

உலகின் மிக அழகான பெண் என்கிற பெருமையை பெற்றார் ஆம்பர் ஹெர்ட்!

லண்டனில் உள்ள மேம்பட்ட முக ஒப்பனை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியன் டி சில்வா, அறிவியலின் படி உலகின் மிக அழகான பெண் ஆம்பர் ஹெர்ட் என்று அறிவித்தார்.  டாக்டர் ஜூலியன் டி சில்வா, 2016 ஆம் ஆண்டில், உலகின் மிக அழகான முகம் யாருடையது என்பதைக் கண்டறிய ‘PHI’ என்ற பழங்கால முக மேப்பிங் நுட்பத்தைப் பயன்படுத்தினார்.  மேலும் அவரது ஆராய்ச்சிக்குப் பிறகு, நடிகர் ஆம்பர் ஹியர்ட் ‘உலகத்திலேயே மிக … Read more

ஆப்கன் நிலநடுக்கம்: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 920 ஆக அதிகரிப்பு – மீட்பு பணிகள் தீவிரம்!

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு நகரமான கோஸ்டில் இருந்து 44 கி.மீ தொலைவில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 6.1-ஆக பதிவானது. சுமார் 51 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய மத்தியதரைக் கடல் நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், சுமார் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தானின் … Read more

தரையிறங்கிய பின் தீப்பிடித்த விமானம்; மனம் பதற வைக்கும் வீடியோ

மியாமி சர்வதேச விமான நிலையத்தில், விமானம் ஒன்று தரையிறங்கிய பின் தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரையிறங்கும் கியர் செயலிழந்ததால், ரெட் ஏர் விமானம் 203 ஓடுபாதையில் விபத்துக்குள்ளானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.  செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) விமானம் டொமினிகன் குடியரசின் சாண்டோ டொமிங்கோவில் இருந்து வந்து கொண்டிருந்த நிலையில், இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நேரிட்டுள்ளது. … Read more

விண்வெளியில் ஈரத்துணியைப் பிழிந்தால் என்னவாகும்? வைரலாகும் வீடியோ

விண்வெளியும், அதைச் சுற்றியுள்ள அதிசயங்களும் எப்போதுமே நமக்கு ஆச்சர்யம் அளிக்கக் கூடியவை. ஆனால், நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் விண்வெளியின் பல அம்சங்களை நம்மால் எளிதாக உணர முடிகிறது.  கனடாவைச் சேர்ந்த கிறிஸ் ஹாட்ஃபீல்ட் என்ற விண்வெளி வீரர் விண்வெளியில் ஈரத்துண்டைப் பிழிந்து பரிசோதனை செய்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகியுள்ளது. ஹாட்ஃபீல்ட் ஈரத்துண்டைப் பிழிந்த பிறகு புவியீர்ப்பு விசை இல்லாததால், தண்ணீர் தரையில் விழுவதற்குப் பதிலாக, துண்டைச் சுற்றி ஒரு குழாய் போல உருவாகிறது.  கவனமாகக் கையாளாவிட்டால் … Read more

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 250 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு நகரமான கோஸ்டில் இருந்து 44 கி.மீ தொலைவில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 6.1-ஆக பதிவானது. சுமார் 51 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய மத்தியதரைக் கடல் நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், சுமார் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தானின் … Read more

ஹாங்காங்கின் பிரம்மாண்ட மிதக்கும் உணவகம் ஜம்போ கடலில் மூழ்கியது

ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் உணவகம், ஜம்போ கடலில் மூழ்கிவிட்டதாக வெளியான அறிவிப்பு உலகெங்கிலும் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் உணவகம், 1976 ஆம் ஆண்டு 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டது. உலக பிரபலங்கள் பலரின் மனம் கவர்ந்த இந்த பிரம்மாண்ட ஹோட்டல் ஹாங்காங்கின் அடையாளமாக திகழ்ந்தது என்றால் மிகையில்லை. ஹாங்காங் வரும் பலரும் இந்த ஹோட்டலில் உணவருந்த வருவார்கள். சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பும் இடமாக … Read more

Employment CUT: டெஸ்லா நிறுவனத்தின் 10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மஸ்க்

சர்வதேச பிரபல நிறுவனமான டெஸ்லா ஊழியர்களை பணிநீக்கம் செய்வது தொடர்பான செய்தியை எலோன் மஸ்க் உறுதி படுத்தினார். ஆனால் தற்காலிகமாக பணியமர்த்தப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை தொடரும் என்று மஸ்க் கூறுகிறார்.  இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள எலான் மஸ்க், டெஸ்லா ஊழியர்களை எச்சரிக்கும் விதமாக அவர் சொல்வது வைரலாகிறது. ‘அலுவலகத்தில் இருந்து வேலை செய்யுங்கள் அல்லது வெளியேறி விடுங்கள்’ என்று எச்சரிக்கை பல ஊழியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. டெஸ்லா தனது ஊழியர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை குறைக்கும் என்று எலோன் மஸ்க் கூறியுள்ளார். மூன்று … Read more

தாய்லாந்து சுற்றுலா செல்ல திட்டமா; இந்த செய்தி உங்களுக்குத் தான்

தாய்லாந்தில் விடுமுறையை கழிக்க அல்லது வணிகப் பயணத்தைத் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளவர்கள் என்றால் , இதோ உங்களுக்கான நல்ல செய்தி! தாய்லாந்து அரசாங்கம் தாய்லாந்து பாஸ் மற்றும் கட்டாய மருத்துவக் காப்பீட்டின் நிபந்தனையை நீக்கி, நாட்டிற்குள் பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இந்த தடை தாய்லாந்து குடிமக்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி நீக்கப்பட்டது, இப்போது அது வெளிநாட்டினருக்கும் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார காப்பீடு கட்டாயமில்லை தாய்லாந்தின் கோவிட்-19 சூழ்நிலை நிர்வாகத்திற்கான மையம் (CCSA) இப்போது … Read more