கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்… கை விரித்த சீனா…

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால், மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்தனர், ஆனால் அது நடப்பதாக தெரியவில்லை. பாகிஸ்தானில் பணவீக்கம் இதுவரை இல்லாத சாதனை அளவை எட்டியுள்ளது. CPI தரவுகளின்படி, பணவீக்க விகிதம் 13.4% ஐ எட்டியுள்ளது. பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், தற்போது பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இந்த நிலைமை புதிய அரசாங்கத்திற்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. பாகிஸ்தானில் மாவு, பருப்பு, பழங்கள், காய்கறிகள், பால், முட்டை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென … Read more

பிரதமர் மாளிகை முற்றுகை: ஹெலிகாப்டரில் தப்பிச்சென்ற ராஜபக்சவின் குடும்பம்

இலங்கையில் வலுக்கும் வன்முறை பேராட்டங்களுக்கு மத்தியில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீட்டு வாயில்களை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆயுதம் ஏந்திய படையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் தப்பிச்செல்லும் காட்சிகள் வெளிவந்து பரபரப்பை கிளப்பியுள்ளன.  முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடி காரணமாக பல வாரங்களாக நடைபெற்ற போராட்டங்களினால் மோசமான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் மனித உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளியேறும் இலங்கைப் பிரதமர் … Read more

இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் விசுவாசிகளுக்கும், அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் இடையில் வலுவான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.  கொழும்பு மற்றும் பிற நகரங்களில் நடந்த வன்முறைகளில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டங்களில் ஆளும் கட்சி எம்.பி ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர். ராஜபக்ச ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி கவிழ்ந்தது. … Read more

மலக் கழிவுகளை உண்ண வைக்கும் மதபோதகரின் அதிரவைக்கும் பின்னணி

தாய்லாந்தில் தன்னுடைய மலக் கழிவுகளை தொண்டர்களை உண்ண வைக்கும் மதபோதகர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தாய்லாந்தின் சாயாஃபம் மாகாணத்தில் உள்ள அடர்ந்த காட்டின் நடுவில் 74 வயதான தாவீ நன்லான் என்பவர் வசித்து வந்துள்ளார். உலகில் உள்ள அனைத்து மதங்களுக்கும் தான் தந்தை என அழைத்துக் கொள்ளும் அவருக்கும் குறிப்பிட்ட சில பின்தொடர்பாளர்கள் இருந்துள்ளனர். அவரை பின்தொடர்பவர்கள் அனைவரும் மதபோதகரின் சிறுநீர் மற்றும் கழிவுகளை சாப்பிட வேண்டும். கேட்பதற்கே கொடுமையாக இருக்கும் இந்த … Read more

ரஷ்ய அதிபரின் ரகசிய காதலி கர்ப்பம்; 69 வயதில் அப்பா ஆக போகும் புடின்

ரஷ்யா-உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என கூறப்படும், முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, புட்டினின் ‘ரகசிய’ குழந்தைகளுடன் ரகசிய காதை அலினா கபேவா சுவட்ஸர்லாந்தில் தலைமறைவாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டாத தகவல்கள் வெளியாகின.   புடினுக்கு ஏற்கனவே 38 வயதான முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவா மூலம் குறைந்தது இரண்டு மகன்கள் இருப்பதாக தி சன் … Read more

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌ச ராஜினாமா

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.இதனைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை … Read more

1945ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரைப் போல், இப்பொழுதும் வெற்றி நமதே: புடின்

மாஸ்கோ:உக்ரைனில் மாஸ்கோவின் ராணுவ நடவடிக்கை மேற்கத்திய கொள்கைகளுக்கு எதிராக சரியான நேரத்தில் சரியான திசையில் எடுக்கப்பட்ட என்று  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார்.உக்ரைனில் தனது நாட்டின் நடவடிக்கையை இரண்டாம் உலகப் போரில் சோவியத் நடத்திய போருடன் ஒப்பிட்டதாக  ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட 77 வது ஆண்டு நினைவு நாளில் முன்னாள் சோவியத் நாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்த புடின், 1945 ஆம் ஆண்டைப் போல், இப்பொழுதும் வெற்றி நமதே … Read more

ஒருவேளை நான் மரணமடைந்தால்…சர்ச்சையை எழுப்பிய எலன் மஸ்க்

வித்தியாசமான ட்விட்டர் பதிவுகளின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்ப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் அவர், அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தையும் 44 பில்லியன் டாலருக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். தற்போது எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்து போனால்….இதைத் தெரிந்து கொள்வதும் நல்லதே எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட்டிற்கு முன்னதாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் … Read more

டிவிட்டரில் டிரம்ப் மறுபிரவேசம் நடக்குமா: இல்லை சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்பாரா டிரம்ப்

மைக்ரோ பிளாகிங் தளமான ட்விட்டர் தனக்கு விதித்தத் தடையை நீக்க வேண்டும் என்ற அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வழக்கை  நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எனவே இப்போது டிரம்ப் ட்விட்டருக்கு திரும்புவது கடினமானது ட்விட்டருக்கு திரும்ப விரும்பிய டொனால்ட் டிரம்ப் ட்விட்டருக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தொடர்ந்த வழக்கை கலிபோர்னியாவில் உள்ள மாவட்ட நீதிபதி நிராகரித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதியை ட்விட்டர் தளத்தில் தடை செய்வது முற்றிலும் சட்டபூர்வமானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  தற்போது டிவிட்டரை … Read more

COCA-COLA: போதை மருந்துக்கு மாற்றாகிய பானம்; கொக்கோ கோலா உருவான கதை

இன்றைய காலகட்டத்தில், கோகோ கோலா என்பது கிட்டத் தட்ட அனைவருக்கும் அறிமுகமாகியுள்ள ஒரு குளிர் பானம். ஆனால் குளிர்பானமாக தயாரிக்கப்பட்டது என்று தாம் நாம் அனைவரும் நினைத்திருப்போம். ஆனால், இந்த பானம் பார்மஸிஸ்டாக பணிபுரிந்த காயமடைந்த சிப்பாய் ஒருவரால் தயாரிக்கப்பட்டது. பல வருட கடின உழைப்புக்குப் பிறகு, கோகோ கோலா ஃபார்முலா தயாரிக்கப்பட்டது. காயமடைந்த இந்த ராணுவ வீரர் தனது வலியைக் குறைக்க மருந்துகளை உட்கொண் நிலையில் படிப்படியாக போதைக்கு அடிமையானார். போதைப் பழக்கத்திலிருந்து விடுபட தயாரிக்கப்பட்ட … Read more