ஊரடங்கால் தவிக்கும் ஷாங்காய் மக்கள்…உணவுக்காக ஜன்னல் வழியே கூச்சலிடும் அவலம்

சீனாவின் ஷாங்காய் நகரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அங்கு தீவிர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஷாங்காய் நகரில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஊரடங்கின் காரணமாக நகரில் உள்ள இரண்டரை கோடி மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். ஷாங்காய் மக்களுக்குத் தேவையான பொருட்கள் உரிய நேரத்தில் அளிக்கப்படாததால் ஏராளமானோர் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இன்றித் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. … Read more

ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி; மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்: இம்ரான் கான்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து, பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான  நாடாளுமன்ற அமர்வு திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும். முன்னதாக அமர்வு திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  முன்னதாக, பிரதமருக்கான வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது.  இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் 2 மணிக்கு பிரதமருக்கான … Read more

உக்ரைனுக்கு சென்ற பிரிட்டன் பிரதமர்…அதிபர் செலன்ஸ்கியுடன் ஆலோசனை

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 45-வது நாளாக தொடர்கிறது.  இதனைத் தொடர்ந்து, ரஷ்யா மீது உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இந்த சூழலில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார். கீவ் நகரில் அதிபர் செலன்ஸ்கியை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட அவர், கீவ் நகர வீதிகளை நடந்தே பார்வையிட்டதோடு மக்களுடனும் கலந்துரையாடினார். மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்; ஜெலென்ஸ்கி கூறுவது … Read more

நாளை கூடுகிறது பாகிஸ்தான் நாடாளுமன்றம்! பிரதமராக ஷபாஸ் ஷெரிப் தேர்வு?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடந்த வாரம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.  இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்றிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைப்பெற்றது. அப்போது நாடாளுமன்றத்தின் 342 உறுப்பினர்களில் 174 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதன் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. இதனால், பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.  அதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கானை நீக்கி அந்நாட்டு … Read more

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்க திட்டம் ரெடி! மத்திய வங்கி கவர்னர் நம்பிக்கை

இலங்கையில் தற்போது பொருளாதார நெறுக்கடியால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியா உட்பட உலக நாடுகள் இலங்கைக்கு உதவிக் கரங்களை நீட்டியுள்ளன. இருப்பினும் கொடுத்த கடன் உதவிகள் தண்ணீர் போன்று செலவாகி மீண்டும் நிதி பற்றாக்குறையால் இலங்கை வாடுகிறது. மீண்டும் மீண்டும் 1000 கணக்கான கோடிகளை நிதியுதவியாக அளிக்க எந்த நாடாகினும் சற்று தயங்கும்தான். அவ்வாறு இக்கட்டான சூழ்நிலையில் உதவவும் முடியாமல் அண்டை நாடுகள் தவிக்கின்றன. சுற்றுலா துறையையே பிரதானமாக நம்பி இருந்த இலங்கையால் தற்போது கிடைக்கும் … Read more

Srilanka Crisis: வரும் நாட்களில் வரிகள் மேலும் உயரும்; இலங்கை நிதி அமைச்சர் கொடுக்கும் அதிர்ச்சி

இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. உச்சக்கட்ட பொருளாதார நெருக்கடியால் அந்த நாடே திவாலாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத விலைவாசி உயர்வால் வாழ வழியில்லாமல் இலங்கைத் தமிழர்கள், தமிழ்நாட்டுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.  இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய 3 பில்லியன் அமெரிக்க டொலர் தேவை  என்றும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் வரி விகிதங்களை உயர்த்த நேரிடும் எனவும்  அலி சப்ரி கூறியுள்ளார். இலங்கை நிதி அமைசர் ஐ.எம்.எப்வுடன் கலந்துரையாட எதிர்வரும் 18ம் தேதி … Read more

ரஷ்யா உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்; ஜெலென்ஸ்கி கூறுவது என்ன

கிவ்: பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமைதியை நிலைநாட்டுவதில் உறுதியாக இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சனிக்கிழமை தெரிவித்தார்.  கிராமடோர்ஸ்கில் உள்ள ரயில்  நிலையம் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார். கிராமடோர்ஸ்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதற்கு ஒரு நாள் கழித்து அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் அவர் … Read more

இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது, பாகிஸ்தானின் புதிய பிரதமர் யார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறறது. அந்த வகையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு அதிபர் பாராளுமன்றத்தைக் கலைத்தார். இம்ரான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் இம்ரான்கான் தோல்வி அடைந்தார். இம்ரான்கானுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, பாராளுமன்ற வளாகத்தை விட்டு இம்ரான்கான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் … Read more

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு பத்து லட்சம் பேருக்கு அனுமதி: சவுதி அரேபியா

இந்த ஆண்டு மொத்தம் பத்து லட்சம் பேருக்கு ஹஜ் யாத்திரை செய்ய அனுமதி கொடுப்பதாக சவூதி அரேபியா இன்று (2022, ஏப்ரல் 7, சனிக்கிழமை) அறிவித்தது.  கொரோனா வைரஸின் தாக்கத்திற்குப் பிறகு தொற்றுநோய் கட்டுப்பாடுகள் தீவிரமாக இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் புனித யாத்திரையும் முடங்கியது.   இந்த ஆண்டிற்கான ஹஜ் புனித யாத்திரை பற்றி தகவல் தெரிவித்த சவுதி அரேபியாவின் ஹஜ் அமைச்சகம்,, “இந்த ஆண்டு ஹஜ்  பயணத்திற்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு யாத்திரீகர்கள் என … Read more

இந்தியாவை பிடிக்குமென்றால் அங்கேயே போய்விடுங்கள்: இம்ரான் கானை சாடிய நவாஸ் ஷரீப் மகள்

மிக அரிய நிகழ்வாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8, 2022) அன்று இந்தியாவை புகழ்ந்தார். இதற்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் ஷெரீப், இம்ரான் கானை கடுமையாக சாடியுள்ளார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸின் (பிஎம்எல்-என்) துணைத் தலைவரான மரியம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், இந்தியாவை அவ்வளவு பிடிக்கும் என்றால், நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்குச் செல்லுமாறு கூறினார். “அதிகாரம் கையை விட்டு போவதைக் கண்டு ஒருவருக்கு … Read more