முடிவுக்கு வருகிறது ஃபார்ம்வில் விளையாட்டு: டிசம்பர் 31க்குப் பிறகு ஃபேஸ்புக்கில் இருக்காது

ஃபேஸ்புக் பயனர்களிடையே மிகப் பிரபலமாக இருந்து வந்த ஃபார்ம்வில் விளையாட்டு வருகிற டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கப்படவுள்ளது. ஃபேஸ்புக் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வந்த சமயத்தில் கேண்டி க்ரஷ் போல பிரபலமான இன்னொரு எளிமையான விளையாட்டு ஃபார்ம்வில் (Farmville). விவசாயம் செய்து சம்பாதிப்பது தான் இந்த விளையாட்டின் எளிய அமைப்பு. பப்ஜி யுகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஃபார்ம்வில் பிடிக்காமல் போகலாம் ஆனால் ஃபார்ம்வில்லை உருவாக்கிய ஸிங்கா நிறுவனத்துக்கு அது மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. ஃப்ளாஷ் … Read more

Free Fire redeem code: அதிரடி சலுகைகளை பெற்றிடுங்கள்… முற்றிலும் இலவசமாக!

தினமும் பிரீ பையர் கேம் விளையாடுபவர்களுக்கு இலவச குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடுகளைக் கொண்டு கேமர்கள் சலுகைகள் பெற முடியும். பிற நாட்களைப் போலவே, இன்றும் (பிப்ரவரி 10) Garena Free Fire விளையாட்டிற்கான பல குறியீடுகளை வெளியாகியுள்ளது. இந்த குறியீடுகள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி நீங்கள் பல சலுகைகளைத் திறக்கலாம். குறியீடுகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி வரையே இந்த குறியீடுகள் செல்லுபடியாகும் என்பது நினைவுக்கூரத்தக்கது. Redmi … Read more

கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சவால்: பேடிஎம் உருவாக்கியுள்ள புதிய ப்ளே ஸ்டோர்

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனமே ப்ளே ஸ்டோர் போன்ற ஒரு தளத்தைத் தொடங்கியுள்ளது. ஆண்ட்ராய்ட் மினி ஆப் ஸ்டோர் என்கிற இந்தத் தளம் இந்தியாவில் செயலிகளை உருவாக்குபவர்களுக்கு ஆதரவாகவும், அவர்களது பொருட்களை மக்களிடம் எடுத்துச் செல்ல ஏதுவாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் தங்கள் தளத்தில் சூதாட்ட விதிமுறைகளை மீறியதாகக் கூறி ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலியை கூகுள் நீக்கியது. ஆனால், கூகுளின் ஒருதலைப்பட்சமான விதிமுறைகளுக்குக் கட்டுப்பட நிர்பந்திக்கப்படுவதாகவும், அது சந்தையில் … Read more

Redmi Smart Band Pro: அடேங்கப்பா… இவ்ளோ ஸ்பெஷலா இந்த ஸ்மார்ட் பேண்ட்… விலை என்னவா இருக்கும்?

சீன டெக் நிறுவனமான சியோமி, ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுடன், ரெட்மி ஸ்மார்ட் டிவி, ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தகவல் சாதனங்கள் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடப்தக்கது. இந்நிலையில், ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ குறித்த முழு விவரங்களை காணலாம். இந்தியாவில் சியோமி தரப்பில் வெளியிடப்பட்ட மி பேண்ட் 4, மி பேண்ட் 5, மி பேண்ட் 6 ஆகிய மூன்று ஸ்மார்ட் … Read more

இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்யும் நோக்கியா

இந்தியாவில் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் நோக்கியாவின் புதிய மாடல் ஸ்மார்ட் டிவிகள் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது. நோக்கியா நிறுவனத்தின் தொலைக்காட்சிப் பெட்டித் தயாரிப்புகள் கடந்த ஆண்டு முதன் முதலாக இந்தியாவில் விற்பனைக்கு வந்தன. 43 மற்றும் 65 இன்ச் மாடல்கள் முதலில் அறிமுகம் செய்யப்பட்டன. இவை ஆண்ட்ராய்ட் இடைமுகம் கொண்டவை. தற்போது அறிமுகமாகவுள்ள புதிய தொலைக்காட்சிப் பெட்டிகள் 32 இன்ச் மற்றும் 50 இன்ச் ஆகிய இரு மாடல்களில் … Read more

இந்தியாவில் ட்ரூகாலர் செயலியைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 15 கோடி

ட்ரூகாலர் செயலியை இந்தியாவில் தினமும் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 15 கோடி என்றும், மாதந்தோறும் கிட்டத்தட்ட 18.5 கோடி பேர் பயன்படுத்துவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் தலைமை அலுவலகம் கொண்டுள்ள ட்ரூகாலர் நிறுவனம் பெங்களூரு, கூர்கான், மும்பை மற்றும் கென்யா நாட்டின் தலைநகரான நைரோபி உள்ளிட்ட நகரங்களில் கிளை அலுவலகங்கள் வைத்துள்ளது. மொபைலில் வரும் அழைப்பு யாரிடமிருந்து வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ட்ரூகாலர் செயலி உதவுகிறது. மோசடி செய்திகள், அழைப்புகளைக் கண்டறிய ட்ரூகாலர் துணை … Read more

'ஒழுக்கமற்ற, அநாகரிக உள்ளடக்கம்'- டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் தடை

ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாகக் கூறி, சீனாவைச் சேர்ந்த டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறும்போது, ”வீடியோக்களைப் பகிர்ந்துகொள்ளும் செயலியான டிக்டாக் மீது சமூகத்தின் பல்வேறு தரப்புகளிடம் இருந்து புகார் வந்தது. வீடியோக்களில் ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான உள்ளடக்கம் இருப்பதாகப் புகார் கூறப்படுகிறது. இதனால் டிக்டாக் செயலிக்குப் பாகிஸ்தானில் தடை விதிக்கப்படுகிறது. முறையற்ற உள்ளடக்கங்களை டிக்டாக் சரிசெய்து கொள்ளும் விதத்தில் திருப்தி ஏற்படுமானால், தடையை விலக்கிக் கொள்வது … Read more

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் புதிய ஆடியோ அம்சங்கள்; பயனர்களிடையே வரவேற்பு

இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் என்னும் வசதியில் புதிய ஆடியோ அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்குப் பயனர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. டிக் டாக் செயலிக்குப் போட்டியாக ஃபேஸ்புக் தரப்பு, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்கிற சமூக வலைதளத்தை அறிமுகம் செய்தது. டிக் டாக் போலவே குறு காணொலிப் பதிவுகளுக்கான தளம் இது. ஆரம்பத்தில் 15 விநாடிகளாக இருந்த காணொலி அளவு, பின்பு 30 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டது. அதேபோல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸுக்கு எனத் தனிப் பொத்தானும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் அண்மையில் … Read more

நேரடிச் செய்தி, ரீட்வீட்டுகளில் புதிய அம்சம்: ட்விட்டர் திட்டம்

நேரடி இன்பாக்ஸ் செய்தி, ரீட்வீட்டுகளில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த ட்விட்டர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் ஒரு பயனருக்குக் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டுமெனில் அவருக்கு ரிக்வெஸ்ட் அனுப்ப வேண்டும். அதை அவர் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம். இல்லையெனில் ரிப்போர்ட் அல்லது பிளாக் செய்ய முடியும். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யாவிட்டால், அந்தச் செய்தி படிக்கப்பட்டதா இல்லையா என்பதைக் குறுஞ்செய்தி அனுப்பிய பயனரால் அறிந்துகொள்ள முடியாது. அத்துடன் குறுஞ்செய்தி அழைப்பை ஏற்றுக்கொண்ட … Read more

ப்ளே ஸ்டோரில் 10 கோடி பயனர்களைக் கடந்த இந்தியச் செயலி

இந்தியக் காணொலிப் பகிர்வுச் செயலியான ரொபோஸோ கூகுள் ப்ளே ஸ்டோரில் 10 கோடி பயனர்களைக் கடந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் அறிவிப்பின் படி, கடந்த ஜூன் மாதம் கூகுள் ப்ளே ஸ்டோரில், சமூகதளச் செயலிகளில் முதலிடத்தை ரொபோஸோ ஏற்கெனவே பெற்றிருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலிகளை மக்கள் தேடுவது அதிகரித்துள்ளதால் இந்த நிலை என்று தெரிகிறது. ரொபோஸோவின் உரிமையாளரான க்ளான்ஸ் நிறுவனத்துக்கு இந்த விஷயம் இன்னொரு மைல்கல் என்று கூறப்படுகிறது. “10 கோடி பயனர்களைத் தாண்டிய முதல் இந்திய குறு … Read more