'வலிமை' முதல் காட்சி தாமதம் – திரையரங்கு கண்ணாடி, மேற்கூரைகளை உடைத்து ரசிகர்கள் ரகளை

திரையரங்கு உள்ளே அனுமதிக்காமல் தாமதப்படுத்தியதாகக் கூறி ஆவேசமடைந்த ரசிகர்கள் கண்ணாடி மற்றும் மேற்கூரைகளை உடைத்தனர். அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘வலிமை’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் ‘வலிமை’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து திரையங்குகளிலும் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. தமிழகத்தின் பல திரையரங்குகளில் ரசிகர்களுக்காக அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட்டன. இதனையொட்டி ஒவ்வொரு தியேட்டருக்கு முன்பாகவும் பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க நடிகர் அஜித் … Read more

போதை பொருள் ஹேங், மிரள வைக்கும் பைக் சாகசம், ஹாலிவுட் தரத்தில் ஆக்ஷன் : வலிமை முதல் பார்வை

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் இரண்டாவது முறையாக இணைந்த ‛வலிமை' படம் இன்று(பிப்., 24) உலகம் முழுக்க 4000 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித் படம் வருவதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்தின் முதல்காட்சிக்கு பின் வலிமை படம் எப்படி இருந்தது என்பதை இங்கு சுருக்கமாக பார்க்கலாம். ஆன்லைன் மூலம் போதை பொருள் கடத்தல் நடக்கிறது. அதை நேர்மையான போலீஸ் அதிகாரியான அஜித் எப்படி தடுக்கிறார். இதன் உடன் தன் குடும்பத்தை … Read more

நம்பர் ஒன் நடிகையாக ஆசைப்படவில்லை : சமந்தா

தென்னிந்திய படங்களில் நடித்து வந்த சமந்தா, தற்போது பாலிவுட், ஆங்கில படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு அவரது சினிமா மார்க்கெட் ஏறுமுகத்தில் செல்ல தொடங்கியிருக்கிறது. அதோடு புஷ்பா படத்தில் சிங்கிள் பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய சமந்தா, சமீபத்தில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்ற டீசர்ட் அணிந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தநிலையில் நம்பர் ஒன் நடிகையாகும் ஆசை உள்ளதா? என்று ரசிகர்கள் அவரிடத்தில் கேட்ட கேள்விக்கு, அப்படியொரு ஆசை இல்லை என்று … Read more

முடிவுக்கு வந்த சூப்பர் நிகழ்ச்சி : வின்னர் யார் தெரியுமா?

சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு விளையாடி வரும் கலகலப்பான நிகழ்ச்சி 'சூப்பர் டாடி'. ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகி வந்த இந்நிகழ்ச்சியில் ராமர், மதுரை முத்து, வேல்முருகன், வினோத் உள்ளிட்ட பலரும் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு விளையாடி வந்தனர். இந்நிகழ்ச்சியின் இறுதிபோட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இதில், பிரபல நடிகரான கிங் காங் மற்றும் அவரது மகன் துரை முருகன் முதலிடத்தை பிடித்து வின்னர் டைட்டிலை வென்றனர். அவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டது. … Read more

120 படங்களை இயக்கியவர்: சீன இயக்குனர் சோர்யுவான் காலமானார்

பிரபல சீன இயக்குனர் சோர்யுவான். ஜாக்கி சானின் ஆஸ்தான இயக்குனர். அவரது பல படங்களை இயக்கியவர். அவருடன் பல படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். குறிப்பாக போலீஸ் ஸ்டோரியில் ஜாக்கி சானுக்கு இணையான கேரக்டரில் நடித்திருந்தார். 87 வயதான சோர்யுவான் முதுமையின் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதனை அவரது குடும்பத்தினர் தற்போது அறிவித்துள்ளனர். சோர்யுவானுக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.ஹாங்காங்கை சேர்ந்த … Read more

ஸ்பிளீட் ஸ்கிரீன் முறையில் முதன்முறையாக உருவாகும் ‘பிகினிங்‘ – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஸ்பிளீட் ஸ்கிரீன் முறையில் தமிழில் முதன்முறையாக உருவாகும், ‘பிகினிங்‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘நான் மகான் அல்ல’, ‘இமைக்கா நொடிகள்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் வினோத் கிஷன். இதேபோல் ‘96’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கவுரி கிஷன். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் ‘பிகினிங்’. இந்தப் படம் பிளவு திரை, அதாவது ஸ்பிளீட் ஸ்கிரீன் (split screen) திரைப்படமாக உருவாகி வருகிறது. திரையில் ஒரே நேரத்தில் இரண்டு காட்சிகள் … Read more

திரைப் பயணத்தில் 20 வருடங்களை நிறைவு செய்த ஸ்ரீகாந்த்

2002ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி வெளிவந்த ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இந்த படத்தை சசி இயக்கி இருந்தார். ஸ்ரீகாந்த் ஜோடியாக பூமிகா நடித்திருந்தார். அதன் பிறகு பார்த்திபன் கனவு, நண்பன், கனா கண்டேன், வர்ணஜாலம், போஸ், உயிர், வல்லமை தாராயோ, இந்திரவிழா, ஏப்ரல் மாதத்தில், துரோகி, மந்திர புன்னகை, நம்பியார் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது உன் காதல் இருந்தால், காக்கி, மஹா, சம்பவம், தீங்கிறை, பெட் உள்பட பல … Read more

”மகேஷ் பாபுவுக்கு வில்லனாக விக்ரம் நடிக்கிறாரா?”- விக்ரம் மேனேஜர் விளக்கம்

மகேஷ் பாபுவுக்கு வில்லனாக விக்ரம் நடிக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில், இதுதொடர்பாக விக்ரமின் மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார். ’மகான்’ படத்தினைத் தொடர்ந்து ‘கோப்ரா’, ‘துருவ நட்சத்திரம்’ படங்கள் அடுத்தடுத்து விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளன. இப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘விக்ரம் 61’ படத்தில் நடிக்கும் விக்ரம் அடுத்ததாக, தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. ’கீதா கோவிந்தம்’ இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் தற்போது ’சர்காரு வாரி … Read more

காத்து வாக்குல ரெண்டு காதலை வாங்கிய உதயநிதி

நயன்தாராவும், அவரது காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்து நடத்தும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், நடன இயக்குர் கலா உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் … Read more

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்‘ படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுக்கும் பாலிவுட் ஸ்டார்! படக்குழு தகவல்

பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்துக்கு, நடிகர் அமிதாப்பச்சன் கதை சொல்பராக, வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள, பான் இந்தியா திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். பாக்கியஸ்ரீ, சச்சின் கெடேக்கர், ஜெகபதி பாபு, பிரியதர்ஷினி உட்பட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீரியட் படமான இது, ஐரோப்பிய பின்னணியில் நடக்கும் காதல் கதையைக் கொண்டது. நடிகர் பிரபாஸ், விக்ரம் ஆதித்யா … Read more