வேட்டையன் படத்தில் அறிமுக பாடல்

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈசிஆர் சாலை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினி – ராணா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது. இப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் குறித்து வெளியாகி உள்ள ஒரு செய்தி ரஜினி ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது முன்பெல்லாம் ரஜினி நடிக்கும் படங்களில் அறிமுக பாடல் இருக்கும். அந்த பாடலோடுதான் ரஜினி என்ட்ரி கொடுப்பார். … Read more

அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மாரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்.. என்னதான் நடக்கிறது?

சென்னை: தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரபலங்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வருவது ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சமீபத்தில் தான் லொள்ளு சபா சேஷு மற்றும் வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் மாராடைப்பால் உயிரிழந்தனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் அருள்மணியும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகரும்

அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற ரம்யா பாண்டியன்

பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். சில படங்களிலும் நடித்தபோதும் சோசியல் மீடியாவில்தான் இவர் ஆக்ட்டிவாக இருக்கிறார். தொடர்ந்து தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ரம்யா பாண்டியன், சமீபகாலமாக ஆன்மிக தலங்களுக்கு தான் செல்லும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு தனது குடும்பத்தாருடன் சென்றிருக்கிறார் ரம்யா பாண்டியன். தங்க கோயில் முன்பு தான் மட்டுமின்றி தனது குடும்பத்தாருடனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் … Read more

Actor Prashanth: GOAT தளபதி விஜய் படம்தான்.. இருந்தாலும்.. பிரஷாந்த் பகிர்ந்த சுவாரஸ்யம்!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங் முன்னதாக கேரளா, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் தற்போது ரஷ்யாவின் மாஸ்கோவில் படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. அங்கு

வைரலாகும் பஹத் பாசிலின் டவல் டான்ஸ்

பஹத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள ஆவேசம் திரைப்படம் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டமாக இன்று திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. கடந்த வருடம் மலையாளத்தில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி ஹிட் அடித்த ரோமாஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பஹத் பாசில் பெங்களூருவை சேர்ந்த ஒரு தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களின் நடித்து வரும் பஹத் பாசில் இந்த படத்தின் புரமோசனையும் கூட வித்தியாசமாகவே செய்து வருகிறார். … Read more

GOAT OTT: விஜய்யின் 'கோட்' படத்தின் ஓடிடி ரிலீஸ் இந்த தேதியிலா?.. அப்போ ஆயுத பூஜைக்கு டபுள் தமாக்கா!

சென்னை: இந்த ஆண்டு தமிழ் சினிமா முதல் பாதியில் எந்த அளவுக்கு வெற்றிப்படங்கள் கிடைக்கவில்லை என புலம்பித் தவிக்கிறதோ அதெல்லாம் இன்னும் சில மாதங்களில் மாறிவிடும் நிலைமை வரும் என்றே தெரிகிறது. பல முன்னணி நடிகர்களும் இப்போதே 2024ன் இரண்டாம் பாதியில் வரும் ஒவ்வொரு மாதத்துக்கும் தங்கள் படத்துக்கான சீட்டை பிடித்து வைக்க ஆரம்பித்துள்ளனர். ஜூன் மாதம்

ஏ.ஆர்.முருகதாஸ் – சல்மான்கான் படத்தின் தலைப்பு வெளியானது

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ். தமிழைத் தாண்டி ஹிந்தியில் கஜினி, ஹாலிடே, அகிரா ஆகிய வெற்றி படங்களை இயக்கி அங்கும் முத்திரை பதித்தார். தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதுதவிர ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக சமீபத்தில் அறிவித்தனர். சஜித் நாடியாவாலா இதனை தயாரிக்கிறார். தற்போது இந்த படத்திற்கு 'சிக்கந்தர்' என தலைப்பு வைத்துள்ளதாக ரமலான் பண்டிகையான இன்று அறிவித்துள்ளனர். … Read more

எனது உடலின் அந்த பாகத்தை வைத்து கிண்டல் செய்திருக்கிறார்கள்.. ஓபனாக பேசிய அபிராமி

சென்னை: கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அபிராமி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். 1995ஆம் ஆண்டு வெளியான காத்தபுருஷன் என்ற படத்தின் மூலம்தான் அவர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பத்ரம், ஸ்ரதா, மில்லினியம் ஸ்டார்ஸ் உள்ளிட்ட படங்களில் நடிகையாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். தமிழிலும் குறிப்படத்தகுந்த நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த அவர் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். இப்போது மீண்டும்

மெகா – பவர் சகோதரர்களுக்கு ஒன்றாக வாழ்த்து சொன்ன த்ரிஷா

கடந்த 20 வருடங்களாகவே முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தனது புதிய இன்னிங்ஸை வெற்றிகரமாக துவங்கியுள்ளார். கடந்த வருடம் போலவே இந்த வருடமும் அஜித்துடன் விடாமுயற்சி, கமல் நடிக்கும் தக் லைப் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து ஐடென்டிட்டி என்கிற படத்திலும் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு … Read more

தலைவர் 171க்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்வளவா?.. விஜய்க்குத்தானே இதை சொன்னாங்க?

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். த.செ.ஞானவேல் இயக்கிவரும் அந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமடைந்துள்ளன. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். படத்தின் பெயர் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவிருக்கிறது. இந்தச் சூழலில் தலைவர்