குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் -உச்சநீதிமன்றம்

Citizenship (Amendment) Act, 2019: குடியுரிமை திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பதில் அளிக்க 3 வார கால அவகாசம்.

‘இந்தியா ஒளிர்கிறது’-க்கு நேர்ந்ததே ‘மோடியின் உத்தரவாதங்கள்’ கோஷத்துக்கும் நடக்கும்: கார்கே

புதுடெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மாற வேண்டும் என நாடு விரும்புகிறது என டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசினார்.. காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தேர்தல் அறிக்கைக் குழு தலைவர் ப.சிதம்பரம், காங்கிரஸ் பொதுச் செயலாளர் … Read more

''பாஜகவின் அரசியல் பிரிவாக அமலாக்கத்துறை உள்ளது'' – கவிதா மீதான அறிக்கைக்குப் பின் ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை விவகாரத்தில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ்சிசோடியா ஆகியோருடன் இணைந்து கவிதா முறைகேடு செய்துள்ளதாக விசாரணை அமைப்பு குற்றம் சாட்டியுள்ள நிலையில், அமலாக்கத்துறை பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் பிரிவாக செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் அமலாக்கத்துறையை கடுமையாக விமர்சித்துள்ளது. அதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அமலாக்கத்துறை அப்பட்டமான பொய் மற்றும் அற்பமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது அமலாக்கத்துறை ஒரு நடுநிலையான அமைப்பாக இருப்பதுக்கு … Read more

மகாராஷ்டிரா | காவல்துறையினருடன் நடந்த மோதலில்  4 நக்ஸலைட்டுகள் உயிரிழப்பு

கட்சிரோலி: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் செவ்வாய்க்கிழமை போலீஸாருடன் நடந்த மோதலில் 4 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இவர்கள் மீது ரூ.36 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் நீலோத்பால் கூறுகையில், “மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நாசகார செயல்களில் ஈடுபடும் நோக்கில் தெலங்கானாவில் இருந்து சில நக்ஸலைட்டுகள் பிரன்ஹிதா நதியைக் கடந்து கட்சிரோலிக்குள் நுழைந்துள்ளதாக திங்கள்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கட்சிரோலியின் … Read more

37 கோடி வாக்காளர்கள்… இது மோடி வைக்கும் குறி!

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது நாடு முழுவதும் 17.1 கோடி வாக்காளர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அந்த தேர்தலில் பாஜக 282 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது 22 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர். அந்த தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்காக 37 கோடி வாக்காளர்களின் ஆதரவை திரட்ட பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்திருக்கிறார். … Read more

Lok Sabha Election 2024: பிரதமர் மோடி வெற்றி பெற அமெரிக்காவில் ஹோமம் வளர்த்து பிரார்த்தனை

Lok Sabha Election 2024: முன்னெப்போதும் இல்லாத வகையில், சிலிக்கான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஒன்று, இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உள்ளூர் கோவிலில் சிறப்பு ‘ஹோமம்’ செய்ததாக பிடிஐ மூலம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

உ.பி.யில் ராகுல், பிரியங்கா போட்டியா, இல்லையா?

ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் உத்தரபிரதேசத்தில் நேரு-காந்தி குடும்பத்தினர் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர். கடைசியாக 2019 தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ரேபரேலியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் இந்தமுறை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். உ.பி.யில் சமாஜ்வாதியுடன் தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் இறுதி செய்துள்ளது. இதில் காங்கிரஸுக்கு அமேதியுடன், ரேபரேலியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், ரேபரேலியில் சோனியாவுக்கு பதிலாக பிரியங்கா வதேரா போட்டியிடுவார் எனப் பேசப்பட்டது. ராகுல் மீண்டும் கேரளாவின் வயநாடு தொகுதியில் … Read more

டெல்லி திஹார் சிறையில் உள்ள ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் எம்.பி.யாக பதவியேற்க அனுமதி

புதுடெல்லி: டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங், டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது எம்.பி. பதவி கடந்த ஜனவரி மாதம் முடிவடைய இருந்த நிலையில், மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வானார். இதையடுத்து, எம்.பி.யாக பதவியேற்க அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.கே.நாக்பால் சஞ்சய் சிங் பதவியேற்றுக் கொள்ள … Read more

கூகுள் மேப்பை நம்பி வர வேண்டாம்: சாலையோரம் பேனர் வைத்த குடகு கிராம மக்கள்

பெங்களூரு: மேப் விவரம் தவறானது என்று கர்நாடகாவின் குடகு பகுதி மக்கள் சாலையோரம் பேனர் வைத்துள்ளனர். கர்நாடகாவின் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் குடகு மலைப் பகுதி அமைந்துள்ளது. இது, ‘இந்தியாவின் ஸ்காட்லாந்து’ என்று அழைக்கப்படுகிறது. குடகு மலைப் பகுதியின் மடிகேரி, விராஜ்பேட்டையில் ‘கிளப் மஹிந்திரா ரிசார்ட்ஸ்’ ஓய்வு விடுதிகள் செயல்படுகின்றன. இயற்கை எழிலை ரசிக்க விரும்பும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடகு மலைப் பகுதியில் அமைந்துள்ள ‘கிளப் மஹிந்திரா ரிசார்ட்ஸ்களுக்கு’ வருகின்றனர். புதிதாக வரும் சுற்றுலாப் பயணிகள் … Read more

ராணுவப் படையில் 6ஜி, ஏஐ தொழில்நுட்ப பிரிவு தொடக்கம்

புதுடெல்லி: பிற துறைகளைப் போன்று போர்க்களத்திலும் தொழில்நுட்ப மாற்றம் பெரும் பங்காற்றி வருகிறது. குறிப்பாக தகவல் தொடர்புத் துறையின் அபரிமிதமான வளர்ச்சி யுத்த களத்தில் எதிரிகளிடமிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும், எதிரிப்படையை துல்லியமாகத் தாக்கவும் பெரிதும் உதவுகிறது. இது குறித்து ராணுவப் தொழில்நுட்ப பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய ராணுவத்தில் கம்பி மற்றும்கம்பியில்லா தொழில்நுட்ப முறைகளை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்ல ‘ஸ்டீக்’ (STEAG) எனப்படும் சமிக்ஞை தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் தகவமைப்பு … Read more