இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய பயிற்சி ஜெர்சி வெளியீடு

இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக 2016-ல் இருந்து 2020 வரை நைக் நிறுவனம் இருந்தது. அதைத்தொடர்ந்து 2020-ல் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக இருந்துவந்த எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்தது. இந்திய அணியின் மெயின் ஸ்பான்சராக பைஜூஸ்நிறுவனம் இருந்து வருகிறது. இந்நிலையில், புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. வரும் ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இருந்து அடிடாஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் தொடங்குகிறது. … Read more

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றுக்கு தகுதி..!

கோலாலம்பூர், மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீ காந்த் கிடாம்பி , தாய்லாந்து வீரர் குன்லவுட் விடிசார்ன் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21- 19 , 21-19 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் ஸ்ரீ காந்த் கிடாம்பி வெற்றி பெற்றார். இதனால் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags : … Read more

இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் பாலோவர்ஸ் – ஆசியாவிலேயே முதலிடம் பிடித்த விராட் கோலி..!

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமூக வலைத்தளங்களில் துடிப்பாக இயங்கி வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தான் செல்லும் இடங்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதனால், இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை கோடிக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 250 மில்லியனாக உள்ளது. இதன் மூலம், ஆசியாவிலேயே இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். கிறிஸ்டியானோ … Read more

நடுவரிடம் வாக்குவாதம் விவகாரம்: ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாட கேப்டன் டோனிக்கு தடையா?

புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் குஜராத்தை தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்தநிலையில், குஜராத் அணி – சென்னை அணி இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்று ஆட்டக்காரராக வேகப்பந்து வீச்சாளர் பதிரானா சேர்க்கப்பட்டார். அவர் ஒரு கட்டத்தில் மைதானத்தை விட்டு வெளியேறி 9 நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்தார். அவரை பந்துவீச கேப்டன் டோனி அழைத்த போது, நடுவர் தடுத்து நிறுத்தினார். இப்போது தான் … Read more

மும்பை இறுதிப்போட்டிக்கு வருவதை நான் விரும்பவில்லை – பிராவோ கலகல பேச்சு

ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனின் பிளே சுற்றில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய அணிகள் இடம் பெற்றது. இந்நிலையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த சென்னை – குஜராத் அணிக்கு குவாலிபையர் சுற்று நடைபெற்றது. இந்த போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி டோனியின் சிறப்பான கேப்டன்ஷிப்பால் 157 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் … Read more

ஐ.பி.எல். எலிமினேட்டர்: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு

சென்னை, ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிபையர் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் குவாலிபையர் 2-ல் ஆட உள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி குஜராத்துக்கு எதிரான குவாலிபையர் 2-ல் விளையாடும். அதே வேளையில் … Read more

திருவண்ணாமலை: கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய எஸ்.ஐ. உட்பட 5 காவலர்கள் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய எஸ்.ஐ. உட்பட 5 காவலர்களை, பணியிடை நீக்கம் செய்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கண்ணமங்கலம் சிறப்பு எஸ்.ஐ. அருள், தானிப்பாடி காவல் நிலைய தலைமை காவலர்கள் யூஜின் நிர்மல், சிவா , கீழ் கொடுங்கலூர் காவல் நிலைய தலைமை காவலர் ஹரி, செங்கம் காவல் நிலைய தலைமை காவலர் சோலை ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் … Read more

எளிதாக கோல்களை விட்டுக்கொடுக்காமல் இருந்தால் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கலாம் – இந்திய பெண்கள் அணி துணை கேப்டன் பேட்டி

அடிலெய்டு, ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய பெண்கள் ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 2-4 என்ற கோல் கணக்கிலும் , 2-வது ஆட்டத்தில் 2-3 என்ற கணக்கிலும் , 3வது ஆட்டம் 1-1 என டிராவிலும் முடிந்தது. மேலும் இந்திய அணி ஆஸ்திரேலிய ஏ அணியுடன் 2 போட்டிகளில் விளையாடவுள்ளது.இந்த நிலையில் இந்த … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய அணியின் பிளேயிங் லெவன் இது தான் – இந்திய முன்னாள் வீரர்

மும்பை, 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்திய அணி வீரர்கள் (ஐபிஎல்லில் பங்கேற்காத வீரர்கள்) டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வென்றதில்லை என்ற நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் எண்ணத்துடன் … Read more

'மைதானத்திலோ, வெளியிலோ எதுவானாலும் சிஎஸ்கே உடன் தான்' – எம்.எஸ்.தோனி

சென்னை, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையர்-1ல் 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் 6 முறை ஐபிஎல் பைனலுக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியதாவது, இது மற்றொரு இறுதிப் போட்டி என்று சாதாரணமாக சொல்லிவிட முடியாது. ஏனென்றால் ஐபிஎல் இப்போது மிகப்பெரிய தொடர். முன்பு 8 அணிகள், … Read more