காயமடைந்த பறவையை காப்பாற்றி ,உணவளிக்கும் சச்சின் : வைரலாகும் வீடியோ

மும்பை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்  சச்சின் டெண்டுல்கர் காயமடைந்த பறவையை காப்பாற்றி ,அந்த பறவைக்கு உணவளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  கடற்கரை பகுதியில்  காயமடைந்து இருந்த  பறவையைக் கண்ட சச்சின் உடனடியாக அதன் உயிரைக் காப்பாற்ற முயல்கிறார் . அவர் பறவைக்கு சிறிது தண்ணீர் கொடுத்து  பறவையின் உயிரை மீட்க முயற்சி செய்தார் ..பின்னர் அந்த பறவைக்கு உணவளிக்க விரும்பிய  சச்சின் ,அங்குள்ள உணவத்திற்கு சென்று அந்த பறவைக்கு உணவளிக்கிறார். காயமடைந்த பறவையை … Read more

டி20 தொடரை கைப்பற்றுமா..? டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு..!

தரம்சாலா, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தரம்சாலாவில் இன்று நடக்கிறது. இந்த தொடரை வெல்வது மட்டுமின்றி சர்வதேச 20 ஓவர் … Read more

உக்ரைன் மீது போர் : ரஷியாவுக்கு எதிராக கால்பந்து போட்டியில் விளையாட போலந்து மறுப்பு

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.  இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின.  தொடர்ந்து இன்று 3-வது நாளாக போர் நீடிக்கிறது. உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் , உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷியாவுடன் விளையாட போலந்து மறுப்பு தெரிவித்துள்ளது.  போட்டியில் பங்கேற்பதற்காக வருகிற மார்ச் 24ம் தேதி போலந்து அணி ரஷியா செல்லவிருந்த நிலையில் , … Read more

புரோ ஆக்கி லீக்; பலம் பொருந்திய ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது இந்திய மகளிர் அணி!

புவனேஷ்வர்,  புரோ ஆக்கி லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. ஒடிசா மாநிலம் கலிங்கா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய மகளிர் அணியினர் மீண்டும் கலிங்கா மைதானத்தில் சனிக்கிழமையன்று விளையாடுகின்றனர். கடந்த முறை இங்கு விளையாடிய போட்டியில் இந்திய மகளிர் அணி அமெரிக்காவை வீழ்த்தியது. அதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. உலக ஆக்கி தரவரிசையில் ஒன்பதாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள இந்திய மகளிர் … Read more

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்: ஹசரங்கா, மெண்டிஸ் விலகல்

லக்னோ, மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெற்றது.இந்த போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில் 20 ஓவர் தொடரில் இருந்து … Read more

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி – ரத்தாகிறதா பார்முலா 1 கார் பந்தயம் ?

ரஷ்யா , உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இரு நாட்டிலும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில்  இந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெற இருந்த ரஷியன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய தொடர் திட்டமிட்டபடி நடப்பது கேள்வி குறியாகியுள்ளது.  இது குறித்து அதிகாரிகள் தெரிவித்தபோது, உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் நடைபெறும் … Read more

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்லும் ஆஸ்திரேலியா அணி… டேவிட் வார்னர் நெகிழ்ச்சி பதிவு

ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் , 3 ஒருநாள் தொடர் மற்றும் ஒரு 20 போட்டி தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் எதிரான முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்த தொடருக்காக பாகிஸ்தான் செல்லவுள்ள ஆஸ்திரேலியா தொடரில் டேவிட் வார்னர் இடம்பெற்றுள்ளார். இந்த தொடருக்கு பிறகு அவர் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் … Read more

மும்பைக்கு எதிராக சென்னை அணிக்கு 2 போட்டிகள்… கொல்கத்தாவுக்கு எதிராக 1 போட்டி- புதிய ஐபிஎல் விதிமுறை…!

மும்பை, 10 அணிகள் கொண்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது. ஐ.பி.எல்-ன் முதற்கட்ட போட்டிகளில் 40 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த தொடர் குறித்த புதிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் 2 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. … Read more

காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் மீராபாய் ஜானு…!

சிங்கப்பூர், சர்வதேச பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இருந்த இந்தியாவின் மீராபாய் ஜானு பெண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் இன்று பங்கேற்றார்.  முதல் சுற்றில் 86 கிலோ எடையை தூக்கிய மீராபாய் ஜானு , இரண்டாவது  சுற்றில் 105 கிலோ எடை தூக்கி தங்க பதக்கத்தை தட்டி சென்றார். இதன் மூலம் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் காமன்வெல்த் போட்டிக்கு அவர் தகுதி … Read more

கொரோனா பரவல் காரணமாக மும்பை ,புனேயில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த திட்டம்..?

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  வருகிற மார்ச் மாதம் கடைசி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது . இந்த சீசனில் புதிதாக லக்னோ, சூப்பர் ஜெயின்ட்ஸ் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் இரண்டு நாட்களாக  நடைபெற்றது .இதில் முக்கிய வீர்ரகள் ஏலத்தில் எடுக்கப்படாமல் ,சில வீரர்கள் அதிக விலைக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்  இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு … Read more