“எவ்வளவு காலம் தொகுதிகள் கொடுங்கள் என கையேந்தி நிற்பது?” – செல்வப்பெருந்தகை ஆதங்கம்

சென்னை: “எவ்வளவு காலம் இன்னொரு கட்சியிடம் எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள் என கையேந்தி நிற்பது? தமிழகத்தில் தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து பிரித்து கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி வளர வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காங்கிரஸ் நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய செல்வப்பெருந்தகை, “1967ம் ஆண்டில் இருந்து 57 ஆண்டுகள் ஏமாந்தது போதும். தேர்தல்களின்போது தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து தொகுதிகளை … Read more

சென்னை தாம்பரத்தில்…. கல்லூரி மாணவர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாம்பரம் அருகே பட்டபகலில் கல்லூரி மாணவர் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சிகிச்சை பலனின்று இன்று அதிகாலை உயிரிழந்தார்.

வருடாந்திர பராமரிப்பு பணி: கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த பராமரிப்பு பணிகள் 60 நாட்கள் வரை நடைபெறும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தி்ல் தலா 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் 70 சதவிகிதம் வரையில் நிறைவடைந்துள்ளன. … Read more

கோவையில் பொதுமக்களை ஈர்த்த பஞ்சாபி உணவுத் திருவிழா

கோவையில் நடைபெற்ற பஞ்சாபி உணவு திருவிழாவில் பஞ்சாப் மாநிலத்தில் விளையும் பொருட்களை கொண்டு தயாரான நூறுக்கும் மேற்பட்ட பஞ்சாபி உணவு வகைகளை சுவைத்து மகிழ்ந்த பொதுமக்கள்.    

“45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுவரை நேர் வழியே” – அதிமுக பிளவு குறித்து செங்கோட்டையன் பதில்

காஞ்சிபுரம்: “எனது 45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுவரை நான் நேர் வழியில் சென்றுள்ளேன். இது மாற்றுக் கட்சியினருக்கும் தெரியும்.” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக பிளவுபடும். அதன்பின் அதிமுக செங்கோட்டையின் தலைமையில் அல்லது வேலுமணி தலைமையில் செல்லுமா என்பது தெரியவரும்” என்று தெரிவித்தார். அமைச்சர் ரகுபதியின் கருத்துக்கு பதில் அளித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் … Read more

TN Board Result 2024 : 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு! எந்த இணையதளத்தில் பார்க்கலாம்

TN Board Class 11th Result 2024: தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் நாளை காலை வெளியாகயுள்ள நிலையில், இந்த ரிசல்டை எந்த தளத்தில், எப்படி பார்ப்பது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை:  மத்தள ஓடையில் திடீர் வெள்ளம்

உடுமலை: உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இன்று பெய்த கனமழையால் அங்குள்ள மத்தள ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். உடுமலையின் தெற்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் அமைந்துள்ளது. இம்மலை தொடரில் ஏராளமான சிற்றோடைகள் உள்ளன. மழைக்காலங்களில் சேகரமாகும் மழை நீர் தாழ்வான இடங்களை நோக்கி பாய்வது வழக்கம். திருமூர்த்தி மலை, பொன்னாலம்மன் சோலை, நல்லார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ள நீர் வடியும் வகையில் … Read more

அதிமுகவில் எந்த சலசலப்பும் பிளவும் ஏற்படாது – செங்கோட்டையன்!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் எதிர்மறை கருத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

“ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் தேவையெனில் சபாநாயகரிடம் விசாரணை” – தென்மண்டல ஐ.ஜி. தகவல்

திருநெல்வேலி: “திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகி கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மர்மமாக உயிரிழந்தது தொடர்பான வழக்கில் தேவைப்பட்டால் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவுவிடம் விசாரணை நடத்தப்படும்” என்று தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமை வகித்தார். திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார், திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையர் மூர்த்தி, மாவட்ட … Read more

2 சிறுமிகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது – பதறவைக்கும் சம்பவம்

Udumalaipettai Gang Rape Case: உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமி மற்றும் 13 சிறுமி ஆகிய இருவரை கூட்டு பாலியல் வன்புணர்வை செய்ததாக கூறி 3 சிறுவர்கள் உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.