குமரியில் வெள்ளை திராட்சை விற்பனை : ஆர்வமுடன் வாங்கி செல்லும் மக்கள்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பழவகைகள் விற்பனை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இளநீர், தர்பூசணி விற்பனை அதிக அளவு நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திற்க இளநீர் நெல்லை, தென்காசி மாவட்டம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு வருகிறது. பச்சை இளநீர் ரூ.30க்கும், சிவப்பு இளநீர் ரூ.35 முதல் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தர்பூசணி பழம் குமரி மாவட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அதிக அளவு வருகிறது. … Read more

சென்னை விருகம்பாக்கம் ஐனாக்ஸ் திரையங்கில் விடுதலை படம் பாதியில் நிறுத்தம்: போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

சென்னை: சென்னை விருகம்பாக்கம் ஐனாக்ஸ் திரையங்கில் விடுதலை படம் பாதியில் நிறுத்தியுள்ளனர். பெற்றோருடன் வந்த 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளை தியேட்டரில் இருந்து போலீசார் வெளியேற்ற முயன்றதால் வாக்குவாதம். பெற்றோருடன் வந்த 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளை தியேட்டரில் இருந்து போலீசார் வெளியேற்ற முயன்றதால் வாக்குவாதம். சிறார்கள் திரையரங்கில் இருந்து வெளியேற்றப்படாத நிலையில், போலீசார் வெளியேறியபின் மீண்டும் படம் திரையிடப்பட்டது.

விஜய் சேதுபதி 'காக்கா முட்டை' மணிகண்டன் கூட்டணியில் தமிழ் வெப் சீரிஸ்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த வெப் சீரிஸில்,  விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசியவிருது வென்ற இயக்குநர் M.மணிகண்டன் இயக்குகிறார். இயக்குநர் M.மணிகண்டன் ‘காக்கா …

பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை வழங்க தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டதை ரத்து செய்தது குஜராத் ஐகோர்ட்..!!

காந்திநகர்: பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை வழங்க தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டதை குஜராத் ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழங்க உத்தரவிட்டது ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சான்றிதழ் விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் கோர்ட் 25,000 அபராதம் விதித்துள்ளது.

டிசம்பர் 2022 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவு விவரங்களை சமர்பிக்க ஆணை: ஐகோர்ட் கிளை

மதுரை: டிசம்பர் 2022 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவு விவரங்களை சமர்பிக்க ஆணையிட்டுள்ளனர். எத்தனை வழக்குகளில் அறிவுரை கழகத்தின் கருத்து பெறப்பட்டது என்பதை தெரிவிக்கவும் ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. எத்தனை வழக்கில் குண்டர்சட்ட உத்தரவு உறுதியானது; எத்தனை வழக்கில் ரத்து என்பதை தெரிவிக்கவும் ஆணை. தன்மீதான குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய கணேஷ்குமார் என்பவரின் வழக்கு ஏப்.12க்கு ஒத்திவைத்துள்ளனர்.

சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு நடந்த தீண்டாமை சம்பவம், மிகவும் கண்டனத்திற்குரியது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு நடந்த தீண்டாமை சம்பவம், மிகவும் கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக அரசு உரிய விளக்கம் கேட்டுள்ளது. நடிகர் சிம்புவின் ‘பத்துதல’ படத்திற்கு டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் மக்களுக்கு, ரோஹிணி தியேட்டரில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

மோடி குறித்த மற்றொரு வழக்கில் கோர்ட்டில் ஆஜராக ராகுலுக்கு சம்மன்: பாட்னா நீதிமன்றம் உத்தரவு

பாட்னா: மோடி குறித்த மற்றொரு அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகும்படி ராகுல்காந்திக்கு பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.  கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடகாவின்  கோலாரில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் குடும்பப்பெயர் (மோடி)  குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இவ்விவகாரத்தில் ராகுல்காந்திக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில், கடந்த சில தினங்களுக்கு முன் குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. தொடர்ந்து ராகுலின் எம்பி பதவி … Read more

திருவாரூர் ஆழித்தேரோட்டம் நாளை நடைபெறவுள்ள உள்ள நிலையில் நாளை 34 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவாரூர்: திருவாரூர் ஆழித்தேரோட்டத்தையொட்டி 1,535 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவாரூர் ஆழித்தேரோட்டம் நாளை நடைபெறவுள்ள உள்ள நிலையில் நாளை 34 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி,மன்னார்குடியில் இருந்து திருவாரூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகிறது. நீடாமங்கலம், நாகை, கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து திருவாரூக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்று தெரிவித்துள்ளனர்.

குஜராத் அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் ஐபிஎல் 16-வது சீசன் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது

குஜராத்: கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 16-வது சீசன் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. குஜராத் அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் போட்டி தொடங்கியது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்-சென்னை அணிகள் மோதுகிறது.

பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு

காந்திநகர்: பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை வழங்க தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டதை குஜராத் ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழங்க உத்தரவிட்டது ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சான்றிதழ் விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் கோர்ட் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. பிரதமர் மோடியின் சான்றிதழ் நகலை வழங்க வேண்டும் என ஒன்றிய தகவல் ஆணையம் கடந்த 2016ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. … Read more